நட்பே

தீப்பிழம்பு நீ
மின்னல்போல் நுழையும்
பெரும் சக்தி நீ
அணையாச்சுடராய் வெளிச்சம்தரும்
அகல்விளக்கும் நீ
பெண்மையின் விளக்கம் நீ
உன் விரல்வழி பிறக்கும்
பட்டாம்பூச்சிகள் அறிவதில்லை
உன் வேதனைகள்..
புன்னகைத்திருக்கும்
புதுப்புயலே
பணிகளில் உன்னைக்கரைத்துக்கொண்டாய்
தனிமையில் அழுகிறது
நீ தவிர்த்துவிட்ட
இனிமைகள்..

Rafiq

எழுதியவர் : Rafiq (30-Mar-20, 9:07 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : natpe
பார்வை : 104

மேலே