ஏன் உனக்கு வருத்தம்
ஏன் உனக்கு வருத்தம்..
உண்மை மலர்கள் காயந்துவிடும்
உண்மைக் காதலும் சாயந்துவிடும்
உண்மைக்கிங்கு உயிரில்லை...
போலிப் பூக்கள் காலம் வாழும்
புதைத்தாலும் புத்துயிராகும்
பொய்க்காதல் வாகைசூடும்
போதையேற்றி போகப்பொருளாகும்
மாயைக்கிங்கு மரணமில்லை..
வேடம் மட்டுமே வாழ்க்கை பாடத்தில் நிகழும்
முகமூடிகள் மட்டுமே முகம் சிரித்து பழகும்..
உள்ளது உள்ளபடி நடந்தால் ஊறுகாய்போல் உலகம் எண்ணும்..
உப்பில்லா பண்டமென்றும் சொல்லும்
ஊசல் குண்டுபோல் வாழ்க்கை செல்லும்..
உண்மைக்கொண்டு வாழ்கையில்
உன்னைக்கொன்றும் உலகம் வாழும்..
சுயநலமென்ற சூனியம் மட்டுமே உனைச் சூழ்ந்து சுரக்கும்..
பொதுநலத்தை மெதுவாக உன்னிடமிருந்து கரக்கும்..
தேவைகளை தேக்கிக்கொண்டு
தேய்ந்தவன் என்று மறக்கும்..
தேம்பித்தேம்பி அழுதாலும் தேக்கரண்டி நீர் தர மறுக்கும்..
தேர்ந்தவனாய் தெரிந்தாலும் தெருவில்தான் நிறுத்தும்..
இவ்வுலகம் தெருவில்தான் நிறுத்தும்
இது தெரிகையில் ஏன் உனக்கு வறுத்தம்..
-ஜாக்✍️