நம்பிக்கை ஒளி தீபம் ஏற்றுவோம்

இருளில் இருந்து
இனி
நம்பிக்கையோடு
புதிய வெளிச்சம்
பிறக்கட்டும்.....!

நேற்று வரை எப்படியோ
இனி இதயத்தில்
நம்பிக்கையோடு
எதிர் கொள்வோம்
வருங்காலத்தை......!

வருடா...வருடம்
வெயிலின் தாக்கத்தால்
குடைகளை சுமந்து
வீதிகளில்
வலம் வந்த பாதங்கள்..
இன்று
வைரஸின் தாக்கத்தால்
வீட்டையே குடையாக்கி
வீட்டுக்குள்
முடங்கிக்கிடக்கின்றன...!

இன்று
சிறகடித்து
பறந்து திரிகிறது
சிட்டுக்குறிவிகள்...
இறகுகள் இருந்தும்
வானில் வட்டமடிக்க
இயலாமல்
காத்திருக்கின்றன
வான ஊர்திகள்......!

மனிதர்களையும்
வாகனங்களையும்
சுமந்து சுமந்து
களைப்படைந்த வீதிகள்
இன்று
ஓய்வெடுக்கின்றன
உதிர்த்த மரங்களாய்....!

ஒற்றை
கதவுக்குப்பின்
காத்திருக்கும் முகங்களுக்கு
பழகிய முகங்களே
அந்நியமாக காட்சியளிக்கின்றன.......!

இது காலம் செய்த
மாற்றமல்ல
கொரானா செய்த
மாற்றம்.......!

காவலர்களும்
அரசு அதிகாரிகளும்
உற்சவ மூர்த்திகளாய்
வீதிகளில் வலம் வர....

பூட்டிய கோவில்களில்
இருந்த
தெய்வங்களெல்லாம்
மருத்துவர்களாய்..
செவிலியர்களாய்..
ஊழியர்களாய்.....
மருத்துவ மனைகளில்
கடவுள்களாய்
காட்சிகள் தருகிறார்கள் ....!

கொரானாவுக்கு எதிரான
யுத்த களத்தில்
அரசும் ஊடகங்களும்
சிறப்பாக
சுழன்று சுழன்று
பணியாற்றிட
புதிய
நம்பிக்கை ஒளி
பிறந்துள்ளது.....!

இன்று ஞாயிறு
இரவு ஒன்பது மணிக்கு
ஒன்பது நிமிடங்கள்
அணைத்திடுங்கள்
செயற்கை விளக்குகளை ....!

பாரத பிரதமரின்
பாசமிகு வேண்டுகோளை
ஏற்று
மனதில் உறுதியோடு
நெஞ்சம் நிமிர்ந்து
ஏற்றுங்கள்
அகல் விளக்கினை....!

மத்திய மாநில
அரசுகளின் தீவிர
செயல்பாடுகளால்
விரைவில்
கொரானா வைரசிடமிருந்து
விடுதலை பெற்று
வாழ்வோம் வளமுடன்....!

தேசத்தின்
நூற்று முப்பது கோடி
முகங்களும்
ஓர் முகமாய் இருந்து
விரட்டியடிப்போம்
கொரானா என்ற
கொடிய வைரஸை.....!

அதுவரை
தனித்திருந்து
விழித்திருந்து
விலகியிருந்து
வீட்டிற்குள்
நம்பிக்கையோடு
காத்திருப்போம்......!


ஜெய்ஹிந்த் ....!

எழுதியவர் : மு.முருக பூபதி (5-Apr-20, 11:10 am)
பார்வை : 104

மேலே