பொல்லாத போதை💤💤💤-------இஷான்
உதிரத்தை உலுக்கி
பகுத்தறிவை மடக்கும்
இராக்கத போதை வேணாமடா.....
கன்னிச் சிறகை கிழித்து
கதவோரம் தள்ளும்
நாக போதை வேணாமடா..
தெருவில் புழுவாக்கி
ஐந்துக்கும் பத்துக்கும் பாசாங்காக்கும்
பாழான போதை வேணாமடா....
குடும்பத்தை குழைத்து
பொருட்களை பரத்தையராக்கும்
பொல்லாத போதை வேணாமடா...
களித்து கரை காணும்
வாழ்வை கரைக்கும்
இருட்டு போதை வேணாமடா
சமூகப் பறவைகளை கலைத்து
மந்தைகளை கொழிக்கவைக்கும்
பாவ போதை வேணாமடா....
உயிரை நிர்வாணமாக்கி
பிறப்பயே வசையாக்கும்
பழியான போதை வேணாமடா...(இஷான்)