வீரபாண்டிய கட்டபொம்மன் கேஜீவ பாரதி எழுதியது - ஐசிஎஸ் சி மாணவர்களுக்காக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்குரியது
வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடம் 1 கரிசல் மண்ணில் கற்குவியல்
வினாக்கள்:
1. கரிசல் மண்ணில் விளையும் பொருள்கள் யாவை?
கரிசல் மண்ணில் விளையும் பொருள்கள் கம்பு, பருத்தி, சோளம், மல்லி போன்றவை.
2. பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எத்தகையோர்?
உள்ளத்தில் வீரம் மிக்கவர்கள்
உயிரைவிட மானத்தைப் பெரிதென நினைக்கும் கொள்கை அவர்களின் ரத்தத்தில் ஊறியிருந்தது.
கொடுமைகளைக் கண்டு குமுறினர்
எதிர்ப்புகளுக்கு இன்முகம் காட்டினர்
வலிமைமிக்க எதிரிகளையும் வரவேற்றுப் பகை முடிப்பவர்
சாதிமத வேற்றுமையின்றி ஒன்றிணைந்து எதிரிகளை வீழ்த்திச் சரித்திரம் படைத்தனர்
3. தூத்துக்குடி மாவட்டத்தில் வீரம் விளைந்த பகுதிகள் யாவை?
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரம் விளைந்த பகுதிகள்
ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் முதலியன.
4. பாஞ்சாலங்குறிச்சி தாய்மார்களின் நம்பிக்கை யாது?
இப்பகுதி தாய்மார்களும், சுற்றுவட்டாரத் தாய்மார்களும் பாஞ்சாலங்குறிச்சியின் மண்ணைக் கண்களில் ஒற்றிக்கொள்வதும்,
நெற்றியில் இட்டுக்கொள்வதும்,
சேலையில் முடிந்துகொள்வதும்,
தங்கள் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் பாலுடன் கலந்தும் பிறந்த குழந்தைகளுக்குப் பாலுடன் கலந்தும் தந்தனர்.
ஏனெனில் எதிர்காலத்தில் தன் குழந்தைகளும் வீரம் மிக்கதாய் வளரும் என்ற நம்பிக்கையினால்தான்.
5. கட்டபொம்மனுக்கு மக்கள் எவ்வாறு அஞ்சலி செலுத்தினர்?
கட்டபொம்மனின் வரலாற்றைத் தெரிந்தவர்கள் அந்த இடத்தைக் கடந்து செல்கையில் சின்னஞ்சிறிய கல்லை எடுத்து அந்த இடத்தில் போட்டுச்செல்கின்றனர். அந்தக் கற்கள் இன்று குவிந்து மலைக்குன்றாகக் காட்சியளிக்கின்றது.
பாடம் 2 வீரன் பிறந்தான்
வினாக்கள்:
1. ஆதிக்கட்டபொம்மு யார்?
ஆந்திர மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் வாடிக்கோட்டை என்ற பகுதியை ஆண்ட பல்ராஜ் என்ற சிறறரசனின் எட்டாவது புதல்வனே ஆதிக்கட்டபொம்மு.
2. ஆதிக்கட்டபொம்முவும் அவன் உறவினர்களும் எங்கு தங்கினர்?
ஆதிக்கட்டபொம்முவும் அவன் உறவினர்களும் நெல்லை மாவட்டம் மணியாச்சிக்கு அருகில் உள்ள சாளக்குளம் என்ற இடத்தில் தங்கினர்.
3. கட்டபொம்மன் பெயர்க்காரணம் கூறுக.
பொம்மு சாளக்குளத்தில் தங்கியிருந்தபோது அங்குக் களவாட வந்த கொள்ளையர்க் கூட்டத்தைத் தனி ஒருவனாக விரட்டினார்.
இதனை அறிந்த அம்மக்கள் பொம்முவை ‘கெட்டிக்காரன்’ என்று பாராட்டினர். அதுவே பின்னர் மருவி, கட்டபொம்மனாயிற்று.
4. தோகலவார் குறிப்பு வரைக.
தோகலவார் என்றால் பசு மந்தைகளை உடையவர்கள் என்ற பொருள். கட்டபொம்மன் பரம்பரையினர் தோகலவார் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்களுடைய முக்கியத் தொழில் பசு வளர்த்தல். பசுவை சார்ந்த பிற தொழில்களையும் இவர்கள் செய்து வந்தனர்.
5. ‘சக்கம்மாள்’ குறிப்பு வரைக.
தோகலவார் சக்கம்மாள் என்ற குலதெய்வத்தை உடையவர்கள். இவர்கள் சக்கம்மாளின் அருளால் குறி சொல்வார்கள்.
6. கட்டபொம்மு யாரிடம் பணியாற்றினார்?
ஆதிக்கட்டபொம்மு பஞ்சபாண்டியர்களின் வழிவந்த ஜெகவீரபாண்டியனிடம் காவற்காரனாகப் பணியாற்றினான்.
இம்மன்னன் அழகிய வீரபாண்டியபுரத்தை ஆட்சி செய்து வந்தான்.
7. கட்டபொம்மு எவ்வாறு விளங்கினார்?
வீரம், தீரம், பாசம் மிக்கவர்.
அரச குடும்பத்தின் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரியவர் கட்டபொம்மு.
இக்குணத்தினாலேயே அவர் மன்னர் ஜகவீரபாண்டியனைக் கவர்ந்தார். மேலும் ஜகவீரபாண்டியனுக்கு வாரிசு இல்லாததால் கட்டபொம்முவிற்கு அரசாளும் வாய்ப்பு கிட்டியது.
8. கட்டபொம்மு செய்த நன்றிக்கடன் யாது?
அரசாளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற கட்டபொம்மு தன் நன்றிக்கடனை அரசருக்குத் தெரிவிக்கும் வகையில், அழகிய வீரபாண்டியபுரம் என்பதனின் பிற்பகுதியாகிய வீரபாண்டி என்பதனையும்,
வாய்ப்பு நல்கிய மன்னர் ஜெகவீரபாண்டியனின் பின் பகுதியாகிய வீரபாண்டியன் என்பதையும் என்றும் நினைவு கூறும் வகையில் தன் பெயருடன் இணைத்துக்கொண்டார்.
இதன் மூலம்தான் கட்டபொம்மன் பரம்பரையினர் தம் பெயருடன், வீரபாண்டி என்பதை இணைத்துக்கொள்ளும் மரபு ஏற்பட்டது.
9. பொம்முவின் பொழுதுபோக்கு யாது?
பொம்மு வேட்டைப் பிரியன் ஆதலால் வனத்திற்குச் சென்று வனவிலங்குகளை வேட்டையாடுதலைத் தம் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.
10. கானகத்தில் முயலைக் கண்ட பொம்மு என்ன செய்தார்?
பொம்முவும் அவன் நாயும் வேட்டைக்குச் சென்ற இடத்தில், ஒரு முயலைக் கண்டு விரட்டினர்.
இதனைக் கண்ட முயல் சிறிது தூரம் ஓடிச்சென்று தன்னை விரட்டிவந்த நாயைப் பார்த்து சீறியது.
முயலின் எதிர்ப்பைக் கண்டபொம்மு, வியந்ததோடு, முயலின் தீரம் அம்மண்ணின் மகத்துவம் என்பதனை அறிந்து, அங்கே தன் ராஜ்ஜியத்திற்கான கோட்டையைக் கட்டி அதில் அரசாள நினைத்தார்.
11. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் அமைப்பை விவரி.
கோட்டையின் முதல் இரண்டு பக்கங்கள் 500 அடி நீளம்
மற்ற இரண்டு பக்கங்கள் 300 அடி நீளம்.
உயரம் 12 அடி
அதன் சுவர்கள் வரகு, வைக்கோல், கம்மங்கொம்மை மற்றும் களிமண்ணால் ஆனது.
கோட்டையைச் சுற்றிலும் வெளிப்புறத்தில் பாதுகாப்பான இலந்தை முட்செடிகள் நடப்பட்டன.
கெட்டியான முற்றம், கொத்தளங்கள், மறைவிடங்கள் ஆபத்துக்காலத்தில் தப்பிச் செல்ல சுரங்கம் போன்றவை அமைக்கப்பட்டன.
இவ்வாறு கோட்டை கம்பீரமாக இருந்தது.
12. பாஞ்சாலங்குறிச்சி பெயர்க்காரணம் தருக.
கட்டபொம்மு தமக்கு ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்த ‘பஞ்சபாண்டிய ஜெகவீரபாண்டியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தன் கோட்டைப் பகுதிக்குப் ‘பாஞ்சாலங்குறிச்சி’ என்று பெயரிட்டான்.
13. வீரபாண்டிய நாயக்கர் குறிப்பு வரைக.
ஆதி கட்டபொம்முவின் வழித்தோன்றலாக வந்த ‘வீரபாண்டிய நாயக்கர்’ பாஞ்சாலங்குறிச்சியின் 44வது மன்னர் .
இவரது ஆட்சிக்காலம் 27 ஆண்டுகள் (1709 – 1736).
14. பால் பாண்டியன் குறிப்பு வரைக.
பால்பாண்டியன் பாஞ்சாலங்குறிச்சியின் 45வது மன்னர்.
வேறு பெயர் - பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன்.
காலம் 24 ஆண்டுகள் (1736 – 1760)
15. ஜெகவீரபாண்டியன் குறிப்பு வரைக.
• ஜெகவீரபாண்டியன் பாஞ்சாலங்குறிச்சியின் 46 வது மன்னன்.
• வேறு பெயர் - திக்குவிஜய கட்டபொம்மு மற்றும் ஜெகவீரபாண்டி கட்டபொம்மன் என்பன.
• காலம் 30 ஆண்டுகள் (1760 – 1790)
16. வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறப்பு மற்றும் பெற்றோர் குறித்து எழுதுக.
பிறப்பு: 1760 ஜனவரி 3
பெற்றோர்: ஜெகவீரபாண்டியன், ஆறுமுகத்தம்மாள்
பெற்றோர் இட்டபெயர்: வீரபாண்டியன்
பரம்பரைப் பெயர் மாற்றம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடம் 3 மகுடம் சூடினான்
வினாக்கள்:
1. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளமை விளையாட்டுகள் யாவை?
வீரபாண்டிய கட்டபொம்மன் தம் இளம் வயதில்,
குதிரை ஏற்றம்
மல்யுத்தம்
சிலம்பம்
ஈட்டி எறிதல்
போன்ற விளையாட்டுகளில் சாதனை புரிந்தான்.
2. ஊமைத்துரை குறிப்பு வரைக.
கட்டபொம்மனுக்கு அடுத்துப் பிறந்த குழந்தை பிறவியிலேயே பேசாமல் இருந்தது.
குலதெய்வத்தை வேண்டியும் பேச்சுவராமல் போனாலும் கட்டபொம்மனின் வலது கரமாய் விளங்கினான்.
வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கியமையால் மக்கள் இவனை ‘ஊமைத்துரை’ என்று அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர்.
3. கட்டபொம்மனின் உடன்பிறப்புகள் யாவர்?
ஊமைத்துரை
துரைசிங்கம்
ஈசுவரவடிவு
துரைக்கண்ணு
ஆகிய நால்வர் ஆவர்.
4. கட்டபொம்மனின் துணைவியார் பெயர் என்ன?
கட்டபொம்மனின் துணைவியார் பெயர் வீர சக்கம்மாள்.
5. கட்டபொம்மன் எப்பொழுது பதவி ஏற்றார்?
கட்டபொம்மன் தம் 30 வது வயதில் 1790 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி பாஞ்சாலங்குறிச்சியின் 47வது மன்னராகப் பொறுப்பேற்றார்.
6. ஆட்சிப்பொறுப்பேற்றக் கட்டபொம்மன் முதலில் என்ன செய்தார்?
ஆட்சிப்பொறுப்பேற்றதும் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிப்; பாளையத்தைச் சேர்ந்த கிராமங்களை 6 பகுதிகளாகப் பிரித்தார்.
நேர்மையுடன் ஆட்சி நடத்தினார்
தம் தம்பி ஊமைத்துரையைப் படைத்தளபதி ஆக்கினார். அவரும் சிறப்புடன் செயல்பட்டார்.
7. வெள்ளையத் தேவன் யார்? மேய்ச்சலின் போது நடந்ததையும், அதனால் ஏற்பட்டதையும் விவரி.
• வெள்ளையத் தேவன் ஆடு மாடு மேய்ப்பவன். ஒரு நாள் மேய்ச்சலுக்குச் சென்றிருந்த போது வல்லப்பாளையத்திற்கு அருகில் இருந்த மற்றொரு பாளையக்காரர்களின் ஆடு மாடுகளை கொள்ளையர் களவாட வந்தனர்.
• ;வெள்ளையத் தேவன் தன் வீரத்தாலும் வாள் வீச்சினாலும் தனி ஒருவனாக இருந்து போராடி அவர்களை விரட்டியடித்தான்.
• இதனைக் கண்டு வியந்த கட்டபொம்மன் தன் கோட்டைக்கு அவனை அழைத்து வந்து ‘பகதூர்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
• மேலும் தனக்கு வாரிசு இல்லாத காரணத்தால் பகதூர் வெள்ளையத் தேவனை தன் மகனாகவே ஏற்றுச் சிறப்பித்தார்.
8. சுந்தரலிங்கத்தின் பிறப்பு பற்றி எழுதுக.
பாஞ்சாலங்குறிச்சிக்குப் பக்கத்தில் ‘கௌனகிரிப்பள்ளி’ என்ற கிராமத்தில், கட்டக்கருப்பணன் முத்தருளி என்ற தேவேந்திரகுல வேளளர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தரலிங்கம்.
9. சுந்தரலிங்கத்தின் பயிற்சியும் பதவியும் குறித்து எழுதுக.
சுந்தரலிங்கம் கொல்லங்கிணறு களரி ஆசிரியர் நாகனாரிடம் போர்பயிற்சி பெற்றார்.
தன் வீரத்தாலும் போர்த்திறத்தாலும் கட்டபொம்மனின் மனதைக் கவர்ந்ததால் அவரது போர்ப்படையில் இணையும் வாய்ப்பைப் பெற்றார்.
10. கட்டபொம்மனின் படையில் இருந்தவர்கள் யார் யார்? அவர்கள் எவ்வாறு படையில் சேர்ந்தனர்?
சுந்தரலிங்கத்தின் முயற்சியால், கட்டபொம்மனின் படையில் இருந்தவர்கள்,
முத்துக் குடும்பனார்
பெரிய காலாடி
சின்னக்காலாடி
மொட்டைச் சங்கரன் காலாடி
மாடக் குடும்பனார்
குட்iடையன் காலாடி
போன்ற தேவேந்திரக் குல வேளாளர் வகுப்பைச் சார்ந்த இளம் வீரர்கள் ஆவார்கள்.
11. தானாபதிப் பிள்ளை யார்?
ழ வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் தானாபதிப்பிள்ளை.
ழ இவருக்கு சுப்பிரமணிய் பிள்ளை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
12. கட்டபொம்மனுக்குத் துணையாக இருந்தவர்கள் யார் யார்?
கட்டபொம்மனுக்குத் துணையாக இருந்தவர்கள்
மறவர் குலத்தில் பிறந்த வெள்ளையத் தேவன்
தேவேந்திரர் குலத்தில் பிறந்த கட்டக்கருப்பன் சுந்தரலிங்கம்
பிள்ளைமார் வகுப்பில் பிறந்த தானாபதிப் பிள்ளை ஆகியோர்.
இவர்கள் துணையாக மட்டுமன்றி தூணாகவும் இருந்துவந்தனர்.
13. கட்டபொம்மனிடம் பதவி யார் யாருக்கு எதனால் வழங்கப்பட்டது?
கட்டபொம்மன் சாதிகள் பார்த்து பதவிகள் வழங்கவில்லை.
அறிவு, திறமை, வீரம், விவேகம் ஆகியன இருந்ததாலேயே
வெள்ளையத்தேவனுக்கும்,
கட்டக்கருப்பன் சுந்தரலிங்கத்திற்கும்,
தானாபதிப்பிள்ளைக்கும்,
கட்டபொம்மனிடம் பதவி பெற்றுத் தந்தது.
14. கட்டபொம்மன் எதனை அளவுகோலாகக் கொண்டிருந்தார்?
சாதிகளை மறந்து சானைகளை மட்டுமே அளவுகோலாகக் கொண்டிருந்தார் கட்டபொம்மன்.
15. கட்டபொம்மன் தன் வாரிசாகக் கொண்டவர்கள் யார்? எதனால்?
கட்டக்கருப்பன் சுந்தரலிங்கத்தையும், வெள்ளையத் தேவனையும் தனக்கு வாரிசு இல்லாததால் தன் வாரிசாக எண்ணியிருந்தார்.
அதோடு அவர்கள் இருவரையும் தன் கண்களாகவே கருதியும் வந்தார்.
16. கட்டபொம்மனுக்குப் பேருதவி புரிந்தவை எவை?
தானாபதிப் பிள்ளையின் மதியூகமும்,
ஊமைத்துரை, வெள்ளையத்தேவன், கட்டக்கருப்பன் சுந்தரலிங்கம் ஆகியோரின் வியூகமும் கட்டபொம்மனுக்குப் பேருதவியாக விளங்கின.
17. கட்டபொம்மனின் ஆட்சியில் மக்கள் எவ்வாறு விளங்கினர்?
• பக்கத்துப் பாளையக்காரர்களும் வியக்கும் வண்ணம் கட்டபொம்மன் ஆட்சி நடத்தியதால், அவரது ஆட்சியில்
• போட்டியில்லை,
• பொறாமையில்லை,
• சூழ்ச்சியில்லை
• சூது இல்லை
இவை அனைத்தும் இல்லாததால் மக்கள் கவலையின்றி வாழ்ந்தனர்.
18. மற்ற பாளையக் காரர்கள் கட்டபொம்மனிடம் எவ்வாறு நடந்து கொண்டனர்? எதனால்?
கட்டபொம்மனை எதிர்க்க நினைத்தாலே இல்லாமல் போய்விடுவோம் என்பதைப் மற்ற பாளையக்காரர்கள் அறிந்திருந்தனர்.
எனவே பாஞ்சாலங்குறிச்சியின் மீது பகைமை பாராட்டாமல் இருந்தனர்.
பாடம் 4. வெள்ளையர் எதிர்பில் வீரபாண்டியக் கட்டபொம்மனின் முன்னோடிகள்
வினாக்கள்:
1. இந்தியாவில் அன்னியர் ஆக்கிரமிப்பு எப்பொழுது ஆரம்பமானது?
கி.மு. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் இந்தியாவில் அன்னியர் ஆதிக்கம் ஏற்பட்டது.
2. இந்திய மண்ணில் காலூன்றிய முதல் வெளிநாட்டு மன்னர் யார்? அவர் எவ்வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்? எப்பொழுது?
இந்திய மண்ணில் முதன் முதலில் காலூன்றிய வெளிநாட்டு மன்னன் மகா அலெக்சாண்டர்.
இவன் கி.மு. 327ல் பாரசீகத்தின் வழியாக வந்து இந்தியாவின் வட எல்லையில் படையெடுத்து, சில பகுதிகளைக் கைப்பற்றினான்.
3. மொகலாயர்களுள் குறிப்பிடத் தக்கவர் யார்? அவர் மூலம் நிகழ்ந்தது என்ன?
மொகலாயர்களுள் குறிப்பிடத்தக்கவன் முகமது கஜினி.
இவனாலேயே முகலாயர்கள் இந்தியாவின் மீது அடிக்கடிப் போர்த் தொடுத்து இந்தியாவின் வடபகுதியைக் கைப்பற்றியதோடு மெல்ல மெல்ல தமிழகம் வரைத் தம் ஆளுகையை நடத்தினர்.
4. மொகலாயர்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வாணிகம் செய்ய வந்தவர்கள் யார்? யார்?
மொகலாயர்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வாணிகம் செய்ய வந்தவர்கள்:
போர்சுக்கீசியர்
டேனீஸ்காரர்கள்
பிரான்ஸ் நாட்டினர்
டச்சுக்காரர்கள்
பிரிட்டன் நாட்டினர்
ஆகியோர் ஆவர்
5. இந்தியாவில் முதலில் நுழைந்த கம்பெனியர் யார்? அவர்கள் எங்கு முகாம் இட்டிருந்தனர்?
இந்தியாவில் முதலில் நுழைந்த கம்பெனியர் போர்ச்சுகீசிய வணிகர்கள்.
அவர்கள் கோவாவில் முகாம் இட்டிருந்தனர்.
6. இரண்டாவதாக இந்தியாவில் நுழைந்தவர் பற்றியும் அவர்கள் குடியேறிய பகுதி பற்றியும் எழுதுக.
இரண்டாவதாக இந்தியாவில் நுழைந்தவர் டேனீஷ் கம்பெனியினர்.
அவர்கள் தென்னாற்காடு மாவட்டத்தில் தரங்கம் பாடியில் கோட்டைக் கட்டிக் குடியேறினர்.
7. மூன்றாவதாக இந்தியாவில் காலூன்றிய கம்பெனியர் யார்? எப்பகுதியில்?
• மூன்றாவதாக இந்தியாவில் நுழைந்தவர் பிரெஞ்சுக் கம்பெனியினர்.
• அவர்கள் புதுவையிலும் காரைக்காலிலும் காலூன்றினர்.
8. நான்காவதாக இந்தியாவில் குடியேறியவர்கள் யார்?
ழ பிரிட்டீஷ் கம்பெனியினர் நான்காவதாக இந்தியாவில் குடியேறினர்.
ழ அவர்கள் சென்னையில் தற்பொழுது தலைமைச் செயலகம் இருக்கும் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை சந்திரகிரி மன்னரிடம் விலைக்கு வாங்கி அங்கு கோட்டைக் கொத்தளங்கள் கட்டிக் குடியேறினர்.
9. வெளிநாட்டவருக்கு நாடுபிடிக்கும் ஆசை எவ்வாறு ஏற்பட்டது?
ஆட்டுத் தோல் வியாபாரத்திற்காக சென்னைக்கு வந்தனர் ஆங்கிலேயர்கள்.
அவர்கள் பிரெஞ்சுக் கம்பெனியிருடன் வியாபாரப் போட்டியில் இறங்கினர்.
தங்கள் வியாபாரப் பொருட்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி படைக்கருவி மற்றும் படைவீரர்களுடன் தங்கினர்.
பின்னர் நம் நாட்டு வளத்தினைக் கண்டதால் அவர்களுக்கு நாடுபிடிக்கும் ஆசை ஏற்பட்டது.
10. அன்னியருக்கு வாய்ப்பாக அமைந்தது எது?
மொகலாய வாரிசுகளான சந்தாசாகிப்பும், அன்வர் உத்தீனும் சண்டையிட்டதே அன்னியருக்கு வாய்ப்பாக அமைந்தது.
11. மொகலாய வரிசுகளை ஆதரித்தவர் யார் யார்?
மொகலாய வாரிசுகளான-
சந்தாசாகிப்பை - பிரெஞ்சுக்காரர்களும்,
அன்வர் உத்தீனை - பிரிட்டீஷ்காரர்களும் ஆதரி;த்தனர்.
12. முகமது அலியின் வெற்றி குறித்து எழுதுக.
பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்சு கம்பெனி தரப்பினரிடையே நடைபெற்ற போரில் அன்வர் உத்தீன் சாகடிக்கப்பட்டான்.
அன்வரின் மகன் முகமது அலி பல ஆண்டுகள் போரிட்டதில் பிரெஞ்சுக் கம்பெனி ஆதரவாளன் சந்தாசாகிப் தோற்கடிக்கப்பட்டு முகமது அலி இறுதியில் வெற்றி பெற்றான்.
13. வெற்றி பெற்ற முகமது அலி எதனால் பிரட்டீஷ்காரர்களுக்குப் பாளையங்களை அடகு வைத்தான்?
பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்சு நாட்டாரிடையே பல ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்த பொழுது முகமது அலிக்குத் தொடர்ந்து போர்க்கருவிகள் கொடுத்ததாலும்,
பலவித ஆட்சேதம் ஏற்பட்டதாலும்
தங்களுக்கு மிகப்பெரிய நஷ்ட ஈட்டைத் தர பிரிட்டீஷ் வலியுறுத்தியது.
யுத்த செலவு,
குடிமக்கள் வறுமை,
வரிவசூலிக்க இயலாமை,
வட்டித் தொகை அதிகரிப்பு
முதலிய காரணங்களால் முகமது அலி வேறு வழியின்றி தனக்குக் கப்பம் கட்டிவந்த பாளையங்களை பிரட்டீஷாரிடம் அடகுவைத்தனர்.
14. ஆங்கிலேயர்;கள் இந்திய மண்ணை எவ்வாறு அடிமைப் படுத்தினர்?
நவாப்பின் சண்டையில் நுழைந்த ஆங்கிலேயர்கள், பாளையங்களில் வரிவசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். இதன் மூலம் இந்திய மண்ணை அடிமை படுத்தினர்.
15. இராபர்ட் கிளைவ் பற்றி எழுதுக
1750ல் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு அதிகாரத்தை தொடங்கியவன் இராபர்ட் கிளைவ்.
1751ல் முதன் முதலில் திருச்சிக் கோட்டையில் ஆங்கிலக்கொடி ஏற்றப்பட்டது.
அரசுப் பொறுப்பை ஏற்றவுடன் பாளையக்காரர்களிடம் வரிவசூலிக்கத் தொடங்கினான்.
16. இன்னிசு துரை - குறிப்பு வரைக
இராபர்ட் கிளைவால் தமிழகத்திற்கு முதன் முதலில் வரிவசூலிக்க வந்தவன் இன்னீசு துரை.
நெற்கட்டான் செவ்வலின் மன்னனாகத் திகழ்ந்த பூலித்தேவனின் வீரத்தைக் கேள்விப்பட்டு, அப்பகுதியில் வரிவசூலிக்காமல் திரும்பியவன் இன்னீசு துரையாவான்.
17. அலெக்சாண்டர் ஹெரான் பற்றி எழுதுக.
ழ 1755ல் ஆங்கிலேயரால் தென் தமிழகத்திற்கு வரிவசூலிக்க நியமிக்கப்பட்டவன் அலெக்சாண்டர் ஹெரான் என்ற ஆங்கில அதிகாரி.
ழ இவன் முதன் முதலில் திண்டுக்கல் அருகிலுள்ள 'லட்சுமண நாயக்கர் பாளையத்தை" முற்றுகையிட்டவன்.
ழ 'தென் தமிழகத்தில் வரிவசூல் செய்த முதல் ஆங்கிலத் தளபதி' என்ற சிறப்புடையவன்.
18. லட்சுமண நாயக்கர் யார்?
தென் தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு அடிபணிந்து வரிகட்டடிய முதல் மன்னனே லட்சுமண நாயக்கர்.
இவர் ஆங்கிலத் தளபதி ஹெரானை எதிர்த்து வரிகட்டாமல் இருந்திருந்தால்
'இந்திய போராட்டத்தின் முதல் மன்னர்' என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்திருக்கும்.
19. அலெக்சாண்டர் ஹெரான் யார் யாரிடம் வரிவசூல் செய்தார்?
மதுரையில் அடிபணிந்து மக்கள் வரிசெலுத்தினர்
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பால்பாண்டியன் சீர்வரிசை மற்றும் சிறிது வரிப்பணம் தந்து மீதி வரிப்பணத்திற்குப் பதிலாகத் தன் இரண்டாவது மகன் சின்னபொம்முவையும், தன் தம்பியையும், மற்றும் உறவினர் சிலரையும் பிணைக்கைதியாக அனுப்பினான்.
பிணையக் கைதிகளை ஹெரான் திருச்சிக்கு அனுப்பினான்.
அதன் பின்னர் எட்டயபுரத்தின் மீது போர்த்தொடுத்து, அம்மன்னனிடம் வரிப்பணத்தையும், மீதித் தொகைக்குப் பிணையக் கைதிகள் சிலரையும் பெற்றுச் சென்றான்.
20. பிணையக் கைதி குறிப்பு வரைக.
வரிப்பணத்தை முழுவதும் செலுத்த இயலாமல் போன மன்னர்கள் மீதித் தொகைக்குப் பணையமாக தங்கள் உறவினர்களைத் தரவேண்டி வந்தது.
அவ்வாறு சென்ற உறவினர்களே பிணையக் கைதிகள் எனப்பட்டனர்.
21. நெற்கட்டான் செவ்வலில் அலெக்சாண்டர் ஹெரானுக்கு ஏற்பட்டது என்ன?
பிற பாளையக்காரர்களைப் போன்றே நெற்கட்டான் செவ்வலும் எளிதில் பணிந்துவிடும் என்று எண்ணினான் ஹெரான்.
பூலித் தேவனின் வீரத்தை அறிந்திருந்த அவன் தம் படையை இரண்டாகப் பிரித்து, ஒருபிரிவிற்கு மாபூசுக்கானைத் தலைமை ஏற்கச் செய்து நெற்கட்டான் செவ்வலுக்கு அனுப்பினான்.
தன் கோட்டைப் பக்கமே வரவிடாமல் தடுத்து பூலித்தேவன், மாபூசுக்கானைத் தலைதெறிக்க ஓடச் செய்தான்.
பின்னர் ஹெரானையும் தோற்கடிக்கச் செய்தான்.
22. விடுதலை முழக்க வீரன் யார்? அவனது சிறப்பு பட்டம் யாது?
முதன் முதலில் ஆங்கிலத் தளபதிகளை விரட்டியதால் பூலித்தேவன் 'விடுதலை முழக்க வீரன்" என்றும், “களத்தில் ஆங்கிலத் தளபதிகளைத் தோற்கடித்த முதல் இந்தியன்" என்ற சிறப்புப் பட்டங்களையும் பெற்றான்.
23. பூலித்தேவனிடமிருந்து நெற்கட்டான் செவ்வலை ஆங்கிலேயர் எவ்வாறு கைப்பற்றினர்?
ழ திருச்சி
ழ புதுக்கோட்டை
ழ இராமநாதபுரம்
ழ நாலுகோட்டை
ழ மதுரை
ழ திருவிதாங்கூர்
ஆகிய இடங்களில் படைகளைத் திரட்டி ஆங்கிலேயர் படைகளையும் இணைத்து,
ழ தமிழன் மருதநாயகம் தலைமையில் நான்கு மாதங்கள் போராடி,
ழ 1761 மே 16ஆம் நாள் பூலித்தேவனிடமிருந்து ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வலைக் கைப்பற்றினர்.
24. முதன் முதலில் பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர்த் தொடுத்தவர்கள் யார் யார்? நடந்தது என்ன?
1761ல் 4000 பேருடன், பிரிஷ்மன் என்ற ஆங்கிலத் தளபதியும்,
1762ல் பிளிண்ட் மற்றும் காம்பெல் என்ற ஆங்கிலத் தளபதிகளும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் மீது போர் தொடுத்தனர்.
அப்பொழுது அங்கு மன்னராக இருந்தவர் கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டியன்;.
அவரும் ஆங்கிலேயருக்கு வரிசெலுத்தினார்.
25. இராமநாதபுரத்தின் போர் குறித்து எழுதுக. மற்றும் சிறையில் மடிந்த முதல் ராணி என்ற சிறப்பைப் பெற்றவர் யார் என்பதையும், எதனால் என்பதையும் குறிப்பிடுக.
ஆங்கிலேயர் 1772 ஜூன் 2ஆம் நாள் இராமநாதபுரத்தின் மீது போர் தொடுத்து ராணியையும் அவர் மகன் முத்துராமலிங்க சேதுபதியையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
அப்பொழுது இளவரசருக்குப் பன்னிரண்டு வயது.
ராணி சிறையிலேயே மடிந்ததால் 'சிறையில் மடிந்த முதல் ராணி” என்று போற்றப்பட்டார்.
26. முத்துராமலிங்க சேதுபதி குறித்து எழுதுக.
ஆங்கிலேயரால் திருச்சி சிறையில் 8 ஆண்டுகள் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் முத்துராமலிங்க சேதுபதி.
இவர் ராமநாதபுர மாவட்டத்தின் இளவரசர்
1795ல் இவர் மீண்டும் வெள்ளையரை எதிர்த்ததால், முதலில் திருச்சியிலும், பின்னர் சென்னைக் கோட்டைச் சிறையிலும், வெள்ளையரால் அடைக்கப்பட்டார்.
22 ஆண்டுகள் சிறைவாசம் புரிந்து தன் 49ஆம் வயதில் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
இதனால் 'வெள்ளையர் எதிர்ப்பில் அதிக ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த மன்னர்" என்றும், சிறையில் மரணத்தைத் தழுவிய மன்னர்" என்றும் சிறப்பு பெற்றவர்.
27. முத்துவடுகநாதர் குறிப்பு வரைக
ஆங்கிலேயருக்கு வரிகொடுக்க மறுத்தவர்.
காளையார் கோவிலில் இறைவழிபாட்டின் போது ஆங்கிலேயரின் திடீர் தாக்குதலால் 1772 ஜூன் 22 அன்று எதிர்த்து வீரப்போர் புரிந்து மரணத்தைத் தழுவியவர்.
“வெள்ளையரை எதிர்த்துக் களத்தில் மடிந்த முதல் மன்னர்" என்ற சிறப்பிற்கு உரியவர் முத்துவடுகநாதர்.
28. புல்லார்டன் யார்? அவன் என்ன செய்தான்?
1776ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்து, கோட்டையையும் கைப்பற்றி, 40 ஆயிரம் வராகன்களை எடுத்துச் சென்றவனே, புல்லார்டன் என்ற ஆங்கிலத் தளபதி ஆவான்.
29. ஜெகவீரபாண்டியன் ஏன் கோட்டையிலிருந்து தப்பித்துச் சென்றார்?
புல்லார்டன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்தபோது அங்கு மன்னனாக இருந்தவர் ஜெகவீரபாண்டியன்.
அவர் ஆங்கிலேயரை எதிர்க்கும் வன்மையற்றவராய் விளங்கியமையால் கோட்டையிலிருந்து தப்பி ஓடினார்.
30. சிவகங்கைச் சீமை யாரால் எப்பொழுது எவ்வாறு மீட்கப்பட்டது?
ழ 1772ல் சிவகங்கைச் சீமையின் ராணி வேலுநாச்சியார்.
ழ அவர் அமைச்சர் தாண்டவராயரின் ஆலோசனையுடனும்,
ழ ஹைதர் அலியின் ஒத்துழைப்புடனும்,
ழ மருது சகோதரர்களின் துணையுடனும்
ழ 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டார்.
31. ஆயுதம் ஏந்தி முதன் முதலில் போரிட்ட இந்தியப் பெண்மணி யார்? எவ்வாறு?
ஆயுதம் ஏந்தி முதன் முதலில் போரிட்ட இந்தியப் பெண்மணி வேலுநாச்சியார்.
இவர் இந்திய வரலாற்றிலேயே, ஆயுதம் ஏந்தி களத்தில் போரிட்டு எதிரிகளைக் களத்தில் தோற்கடித்தவர்.
இழந்த நாட்டை முதன் முதலில் மீட்டுக் காட்டிய பெண்மணியும் வேலு நாச்சியார் தான்.
32. ஆங்கிலேயர் பாஞ்சாலங்குறிச்சியின் மீது எத்தனை முறை போர் தொடுத்தனர்? அப்பொழுது மன்னராக இருந்தவர்கள் யார் யார்?
1755ல் தொடங்கி 1776 வரை ஐந்து முறை ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியின் மீது போர் தொடுத்தனர்.
முதல் முதலில் வெள்ளையர் போர் தொடுத்தபோது வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா பால்பாண்டியனும்,
மீதி நான்கு முறை போர் தொடுத்தபோது வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டியனும், பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர்களாக இருந்தனர்.
பாடம் 5 அடிபட்டு ஓடினான் ஆலன் துரை
வினாக்கள்:
1. ஆங்கிலேயர் எதனால் அச்சம் கொண்டனர்?
பூலித் தேவனைத் தோற்கடித்து விட்டாலும், வேலூர் நாச்சியாரின் வெற்றி வெள்ளையரை அச்சுருத்தியது.
திண்டுக்கல் ஹைதர் அலி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், கேரள வர்மா, வேலூர் நாச்சியார் போன்ற வெள்ளைய எதிர்ப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் பெரும் ஆபத்தினை சந்திக்க நேரும் என்பதால் ஆங்கிலேயர் அச்சப்பட்டனர்.
2. ஆங்கிலேயர் எதைப்பற்றி யோசிக்கலானர்?
ஆங்காங்கே எழும் எதிர்ப்புக் குரல்களை எப்படிச் சமாளிப்பது,
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் எப்படித் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவது என்று ஆங்கிலேயர் யோசிக்கலானார்கள்.
3. ஆங்கிலேயர்கள் எவ்வழியில் காய்களை நகர்த்தினர்?
நவாப்பிடம் வரிவசூல் செய்யும் தரகர்களாகவே அதுகாரும் அவர்கள் இருந்துவந்தனர்.
எனவே இவ்வாறு இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியாது என்பதால் ஆங்கிலேயர்கள் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்ற முடிவு செய்து, அவ்வழியில் காய்களை நகர்த்தினர்.
4. வரிவசூலிப்பிற்கு ஆங்கிலேயர்கள் செய்த ஏற்பாடுகள் யாவை?
• 1792-ல். நவாப்புடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஆங்கிலேயர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்பது,
• ரெவின்யூ போர்டை உருவாக்குவது,
• வரிவசூலிக்கக் கலெக்டர் பதவியை ஏற்படுத்துவது,
• அப்பதவியில் ஆங்கிலேயர்களை நியமிப்பது,
• பாளையங்களை சர்வே செய்து, அவற்றின் எல்லைகளை ஒழுங்குபடுத்து,
• ஒரு பாளையத்திற்குச் சொந்தமான ஓரிரண்டு கிராமங்களைப் பிற பாளையங்களோடு இணைப்பது – போன்ற ஏற்பாடுகளை வரிவசூலிப்பதற்காக ஆங்கிலேயர்கள் செய்தனர்.
5. ஆங்கில நவாப் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யார் யார்?
நெல்லை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகியவற்றில் இருந்த சில பாளையக்காரர்கள், ஆங்கிலேயர் மற்றும் ஆர்காடு நவாப் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
6. நெல்லை மாவட்ட வரிவசூலிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டவன் யார்? அவனுக்குப் பாளையக் காரர்கள் என்ன செய்தனர்?
நெல்லை மாவட்ட வரிவசூலிப்பிற்காக நியமிக்கப் பட்டவன் ஆங்கிலத் தளபதி மாக்ஸ்வெல்.
ஒவ்வொரு பாளையத்திற்காக அவன் வரிவசூலிப்பிற்குச் சென்றான்
சில பாளையக்காரர்கள் அவனை வரவேற்று, மாலை அணிவித்து. வெள்ளையர் முறைப்படி விருந்து உபசாரமும் நடத்தி, கப்பத் தொகையையும் அவன் காலடியில் வைத்தனர்.
மேலும் காலம் முழுவதும் கப்பம் கட்டுவதாகவும் வாக்குறுதி கொடுத்தனர்.
7. எட்டப்பன் மாக்ஸ்வெல்லிடம் என்ன உறுதியளித்தான்? அவன் கட்டபொம்மனைப் பற்றிக் கூறியது என்ன?
எட்டயபுரம் பாளையத்து மன்னன் எட்டப்ப நாயக்கன் ஆங்கிலேயரின் அடிமையாக இருப்பதாக மாக்ஸ்வெல்லிடம் உறுதியளித்தான்.
மேலும் மாக்ஸ்வெல்லிடம் கட்டபொம்மனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிவைத்தான்.
8. பாஞ்சாலங் குறிச்சியில் மாக்ஸ்வெல்லிற்கு நிகழ்ந்தது என்ன?
எட்டப்பன் கூறியதை அசைபோட்டபடி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றான்.
அவன் கூறியதற்கு நேர் மாறாக கட்ட பொம்மன் அவனை வரவேற்று உபசரித்ததால் ஆச்சர்யம் அடைந்து, வரிவசூலிப்பைப் பற்றி மெல்ல பேசத் துவங்கினான்.
அதற்கு சினம் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் “தானமாகக் கேளுங்கள் தந்து மகிழ்கிறேன். எங்களிடம் கேட்க உங்களுக்கு உரிமையும் இல்லை. பயந்து கொடுப்பதற்கு நாங்கள் கோழைகளும் இல்லை” என்றார்.
8. வீரபாண்டிய கட்டபொம்மன் வரி தர மறுத்தமைக்குக் மாக்ஸ்வெல் கேட்ட வினாவும், கட்டபொம்மனின் பதிலும் யாது?
வரி தர மறுத்த கட்டபொம்மனிடம் மாக்ஸ்வெல், ‘இதுதான் உங்கள் இறுதியான முடிவா?’ எனக்கேட்டான்.
கட்டபொம்மன் அதற்கு இறுதியான முடிவு மட்டுமல்ல. உறுதியான முடிவும் கூட என்று கூறியதோடு,
யார் யாரிடம் வரி கேட்பது? யாருக்கு யார் வரிகட்டுவது?
வணிகம் செய்ய வந்த நீங்கள் சூழ்சியாலும் சுயநலத்தாலும் வரிகேட்டபதா?
நாடோடியான நீங்கள் நாடாளும் எங்களிடம் வரிகேட்பதா?
உங்களின் அதிகாரத்திற்கும் ஆயுதபலத்திற்கும் அடிபணியும் சில பாளையக்காரர்களைப் போலவே எல்லோரையும் எண்ணிவிட வேண்டாம் என்று பதிலளித்தார்.
அதோடு வரிவசூல் செய்யும் நோக்கோடு யாரும் இங்கு வரவேண்டாம் என்பதனையும் திட்டவட்டமாகக் கூறினார்.
9. மாக்ஸ்வெல்லிற்கு வரி தர மறுக்கக் கட்டபொம்மன் கூறிய காரணங்களை எழுதுக.
வரி தர மறுக்க கட்டபொம்மன் கூறிய காரணங்கள்:
வானம் பொழிகிறது. பூமி விளைகிறது.
இரவு பகலாக எங்கள் மக்கள் உழைக்கின்றனர்.
இதனால் நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தவேண்டியதில்லை என்று கூறினார்.
10. வரிகட்ட மறுத்த கட்டபொம்மனின் செயலைக்குறித்து ஆங்கிலேயர் செய்த தீர்மானங்கள் யாவை?
ழ வரிகட்டாமல் தன்னை அவமதித்த கட்டபொம்மனின் செயலைக் குறித்து மாக்ஸ்வெல் பிற அதிகாரிகளிடம் பேசினான்.
ழ இனி ஆயுத பலத்தால்தான் கட்டபொம்மனை எதிர்க்கவேண்டும் என்று தீர்மானித்தனர்.
11. ஆலன்துரை எதனால் பொறுப்பேற்கவேண்டி வந்தது?
மாக்ஸ்வெல் கூறியபடி ஆங்கிலேயர்கள், மேலும் சில முயற்சிகளுக்காக கட்டபொம்மனை தங்களை நேரில் வந்து காணும்படி கடிதங்கள் அனுப்பினர்.
கட்டபொம்மன் அவற்றைப் படிக்காமல் இருந்ததோடு, கிழித்தெரியவும் செய்தார்.
இதனால் சினமுற்ற வெள்ளையர் போர்த்தொடுத்து கட்டபொம்மனைப் பணியவைக்கும் நோக்கத்தோடு, ‘ஆலன்துரை’ என்ற ஆங்கிலத் தளபதியை நியமித்து அனுப்பினர்.
12. ஆலன் துரை கட்டபொம்மனைப் பற்றி என்ன எண்ணினான்?
1797-ல் பெரும்படையுடன் பாஞ்சாலங் குறிச்சியை முற்றுகையிட்ட ஆலன்துரை, ஆள்பலம், ஆயுத பலம் ஆகியவற்றின் உதவியுடன் கட்டபொம்மனை எதிர்த்துவிடலாம் என்று எண்ணினான்.
13. ஆலன்துரையின் செயல் யாது? அதனால் விளைந்தது என்ன? (அல்லது) பாளையக் காரர்களின் கொரில்லாப்போரைப் பற்றி எழுதுக.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டைச் சுவர்களின் மீது பீரங்கி குண்டுகள் பாய்ந்து செயலற்று விழுந்தன.
கோட்டைக்குள்ளிருந்து பாய்ந்த குத்தீட்டிகள் வெள்ளையரை மண்ணில் வீழ்த்தின.
இதனால் வெறுப்புற்ற வெள்ளையர்கள் உள்ளிருந்து தாக்குபவர்களுக்குக் குறிவைத்தனர்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரிகளைத் தாக்குவதும், எதிரிகள் தாக்கத் துவங்கும் போது கோட்டைக்குள் மறைவதுமாக ஒரு கொரில்லாப் போரையே அவ்வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர்.
இதனால் தொங்கிய முகத்துடன் தோல்வியை ஒப்புக் கொண்டு ஆலன் துரை திரும்பினான்.
14. பாஞ்சாலங்குறிச்சி மக்கள் உலகிற்கு எதனைப் பறைசாற்றினர்?
வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்ற பின் நடந்த முதல் தாக்குதல் இது என்பதால், நெஞ்சில் வீரத்தைத் தாங்கிய மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதனை பாஞ்சாலங் குறிச்சி மக்கள் உலகிற்குப் பறைசாற்றினர்.
பாடம் 6. ஜாக்ஸன் துரையின் சதிராட்டம்
வினாக்கள்:
1. ஆலன்துரையின் தோல்விக்குப் பிறகு கட்டபொம்மன் என்ன எண்ணினான்?
அடிபட்டுத் திரும்பிய ஆலன் துரை சும்மா இருந்தாலும், பிற ஆங்கிலேய அதிகாரிகள் சும்மா இருக்கமாட்டார்கள்.
எனவே தனித்து நின்று போராடுவதை விட சக பாளையக்காரர்களையும் இணைத்து வலுமிக்க ஒரு அணியை உருவாக்கவேண்டும் என்று கட்டபொம்மன் நினைத்தார்.
2. உறுதிமிக்க ஆங்கிலேய எதிர்ப்பு அணி எவ்வாறு உருவாகியது?
நாகலாபுரம், ஏழாயிரம்பண்ணை, கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களைச் சந்தித்து கட்டபொம்மன் அன்னியர் ஆதிக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
இதன் மூலம் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயரை எதிர்ப்பது என உறுதிகொண்டதால் வலிமை மிக்க ஆங்கிலேய எதிர்ப்பு அணி உருவாயிற்று.
3. எட்டப்ப நாயக்கனுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த உரையாடலைப ;பற்றி எழுதுக.
ஆங்கிலேய அதிகாரிகள் கட்டபொம்மனை எவ்வாறு எப்படி அடக்குவது என்று தீவிரமாக ஆலோசனை நடத்தியபோது, எட்டப்பனை சந்தித்துப் பேசினர்.
“உங்களுக்கு நான் ஒத்துழைப்பு கொடுப்பதால் கட்டபொம்மன் என்மீது கோபத்தில் இருக்கிறான்.
என் மீது பாய்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவனால் எனக்கு மிகப்பெரும் ஆபத்து நேராமல் நீங்கள் தான் பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என்று எட்டப்பன் ஆங்கிலேயரிடம் கேட்டுக்கொண்டான்.
4. ஆங்கிலேயர் எதுகுறித்து ஆலோசனை நடத்தினர்?
• வீரபாண்டிய கட்டபொம்மனைப் பணியவைப்பது,
• அவனிடமிருந்து வரிப்பணத்தை வசூலிப்பது,
• எட்டயபுரம் எட்டப்ப நாயக்கனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து ஆங்கிலேயர்கள் ஆலோசனை நடத்தினர்.
5. ஆங்கிலேய அதிகாரிகள் கட்டபொம்மனுக்கு அனுப்பிய கடிதச் செய்திகள் யாவை?
ஆங்கிலேய அதிகாரிகள் கட்டபொம்மனுக்கு அனுப்பிய கடிதச் செய்திகள்
வந்து தங்களைச் சந்திக்க வேண்டும்.
வரிகட்ட வேண்டும் என்பதாகும்.
6. ஆங்கிலேயர்; கட்டபொம்மன் தங்களைச் சந்திக்க செய்த ஏற்பாடுகள் யாவை?
ழ பாஞ்சாலங் குறிச்சிப் பாளையத்திற்குச் சொந்தமான அருங்குலம், சுப்பலாபுரம் என்ற இரண்டு கிராமங்களை, பாளையங்களின் எல்லைகளை ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லி எட்டயபுரத்துடன் ஆங்கிலேயர் இணைத்தனர்.
ழ இதன் மூலம் கட்டபொம்மன் தங்களை வந்து காண்பார் என்றும், எட்டப்ப நாயக்கனுக்கு நாம் உதவிசெய்ததாகவும் இருக்கும் என்ற வகையில் செயல்பட்டனர்.
7. பாஞ்சாலங்குறிச்சியின் வளமான பகுதிகள் யாவை?
• ஸ்ரீவைகுண்டம்,
• ஆழ்வார் திருநகரி,
• ஆத்தூர்,
• ஆறுமுக மங்கலம்
முதலிய நஞ்சை நிலப் பகுதிகள் பாஞ்சாலங் குறிச்சியின் வளமான பகுதிகள் ஆகும்,
8. ஆங்கிலேயரின் அறிவிப்பு யாது?
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஆத்தூர், ஆறுமுக மங்கலம் முதலிய நஞ்சை நிலப்பகுதிகள், தங்கள் நேரடி நிர்வாகப் பொறுப்புக்குக் கீழ் அமைந்துள்ளதாகவும், எனவே அதனைச் சார்ந்தவர்கள் தங்களிடம் தான் வரி செலுத்த வேண்டும் என்றும் ஆங்கிலேயர்கள் அறிவித்தனர்.
9. கட்டபொம்மனின் ஆணையை விவரி.
• ஆங்கிலேயரின் ஆணையை துச்சமென மதித்த கட்டபொம்மன் - ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஆத்தூர், ஆறுமுக மங்கலம் முதலிய பகுதிகளில் தன் ஆட்களை அனுப்பி வரிவசூல் செய்தார்.
• ஆங்கிலேயரின் பட்டாளத்து வீரர்களுக்கு இறைச்சிக்காக ஆடுமாடுகளை அனுப்பக் கூடாது என்று தமது பாளையத்தில் வாழும் மக்களுக்கு ஆணைபிறப்பித்தார்.
• ஆங்கில வியாபாரிகளுக்கு தன்னுடைய பகுதிக்கு உட்பட்ட நெசவாளிகள் எவரும் துணி நெய்து கொடுக்கக் கூடாது என்றும் கட்டளை பிறப்பித்தார்.
10. ஜாக்ஸன் துரை யார்?
வீரபாண்டிய கட்டபொம்மனை அடக்குவதற்குத் தகுதியானவன் என்று தேர்வு செய்து ஆங்கில அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட நெல்லை மாவட்டக் கலெக்டரே ஜாக்ஸன் துரை.
11. ஜாக்ஸன் துரைக்கு எது ஆத்திரத்தைத் தூண்டியது?
ஜாக்ஸன் துரை பொறுப்பேற்ற உடனேயே பல பாளையக்காரர்கள் ஓடிச்சென்று அவனைச் சந்தித்தனர். ஆனால் கட்டபொம்மன் மட்டும் அவனைச் சந்திக்க விரும்பவில்லை.
வரிகட்டாமல் இருப்பது. மற்ற பாளையக்காரர்களைப் போன்று தம்மை சந்திக்காமல் உதாசீனப்படுத்துவது போன்ற கட்டபொம்மனின் செயல்களே ஜாக்ஸன் துரைக்கு ஆத்திரத்தைத் தூண்டியது.
12. ஜாக்ஸன் துரையின் அடுத்தடுத்தக் கடிதச் செய்திகள் யாவை?
ஜாக்ஸன் துரை 1798 பிப்ரவரி மாதத்தில் தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி கட்டபொம்மனுக்கு எழுதிய கடிதத்திற்கு, எவ்வித நடவடிக்கையும் கட்டபொம்மன் எடுக்காததால்.
1798 ஏப்ரல் மாதத்தில், “உடனே தனக்குக் கட்டவேண்டிய வரிப்பணம் முழுவதையும் கட்டிவிட்டு, நேரில் சந்திக்கவேண்டும். இல்லையேல் பாஞ்சாலங் குறிச்சிப் பாளையத்தைப் பரிமுதல் செய்வேன்” என்று ஜாக்ஸன் துரை கட்டபொம்மனுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பினான்.
13. ஜாக்ஸன் துரை கவர்னருக்கு எவ்வாறு கடிதம் எழுதினான்? அதற்கு அவர் கூறிய மறுமொழி யாது?
• ஜாக்ஸன் துரை கவர்னரிடம் கட்டபொம்மனை கைது செய்ய தனக்கு வலுவான படையை அனுப்பி வைக்கும் படி கேட்டான்.
• அதற்கு கவர்னர் மீண்டும் ஒருமுறை கட்டபொம்மனோடு பேசி ஒரு முடிவிற்கு வாருங்கள் பிறகு பார்க்கலாம் எனத் திருப்பி அனுப்பிவிட்டான்.
14. ஜாக்ஸன் துரை கட்டபொம்மனுக்கு மீண்டும் எவ்வாறு கடிதம் எழுதினான்?
ஜாக்ஸன் துரை செப்டம்பர் 5 ஆம் நாள்;;;;; என்னைத் திருநெல்வேலியில் நேரில் வந்து சந்திக்க வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கட்டபொம்மனுக்கு மீண்டும் கடிதம் எழுதினான்.
15. கட்டபொம்மன் எதனால் ஜாக்ஸன் துரையை சந்திக்கத் தீர்மானித்தான்?
தனக்கு ஜாக்ஸன் துரையிடமிருந்து இரண்டாவது முறை வந்த கடிதத்தில் கவர்னர் தலையிட்டிருப்பதால், அவனைச் சந்திப்பதில் தவறில்லை என்று அமைச்சர் தானாபதிப் பிள்ளையும் மற்றவர்களும் கூறிய ஆலோசனையின் படி ஜாக்ஸன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் தீர்மானித்தான்.
16. ஜாக்ஸன் துரையை சந்திக்க கட்டபொம்மன் எவ்வாறு சென்றான்?
மற்ற பாளையக் காரர்களைப் போல்ப் பணிவாகச் செல்லவில்லை.
அமைச்சர் தானாபதிப் பிள்ளை, தம்பிகள், மாப்பிள்ளைகள்;;;;;;;, மாமன் போன்ற உறவினர்கள் உடன் சென்றனர்.
நான்காயிரம் போர்வீரர்கள் அணிவகுக்க, பேரிகை முழங்க, கொடிகள் அசைய,
யானைப்படை குதிரைப்படை முன்செல்ல,
ஒரு பேரரசனைப் போன்று கட்டபொம்மன் கம்பீரமாக 1798 ஆகஸ்டு 24 ஆம் தேதி
கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையைச் சந்திக்கச் சென்றான்.
17. கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையைத் தேடி எந்தெந்த ஊர்களுக்குச் சென்றான்?
கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையைத் தேடிச் சென்ற ஊர்களாவன:
• திருநெல்வேலி
• குற்றாலம்
• சொக்கம்பட்டி
• சிவகிரி
• சேத்தூர்
• ஸ்ரீவில்லிப்புத்தூர்
• பேரையூர்
• பாவாலி
• பள்ளிமடை
• கமுதி
• இராமநாதபுரம் முதலியன.
18. ஜாக்ஸன் துரையின் திட்டம் யாது?
கட்டபொம்மனை ஊர் ஊராக வரும்படி இழுத்தடித்தால் அவனுக்குத் தன்மீது சினம் எழும்.
அதன் மூலம் பாஞ்சாலங்குறிச்சியின் மீது எளிதாகப் போர்த்தொடுக்கலாம் என்று எண்ணி திட்டம் தீட்டினான் ஜாக்ஸன் துரை.
19. கட்டபொம்மன் எதில் குறியாக இருந்தான்? என்ன செய்தான்?
ஜாக்ஸனுடன் வம்படியாக சண்டைக்குப் போகக் கூடாது. வந்த சண்டையையும் விடக்கூடாது என்பதில் கட்டபொம்மன் குறியாக இருந்தான். இதனால் அவனின் குள்ளநரித் தனத்தினைப் புரிந்துகொண்டு. அவனுக்கு வாய்ப்பு அளிக்காமல்; அவன் வரச் சொன்ன ஊர்களுக்கு எல்லாம் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
20. கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையை எங்கு எவ்வாறு சந்தித்தான்?
18 நாட்கள் பயணத்திற்குப் பிறகு 1798 செப்டம்பர் 10ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு இராமலிங்கம் விலாசம் மாளிகையில் இன்றி அங்குள்ள ஒரு மெத்தை வீட்டில் சந்தித்தான்.
21. இராமலிங்கம் விலாசம் மாளிகையில் கட்டபொம்மனுடன் வந்தவர்களை அனுமதித்தனரா?
கட்டபொம்மனுடன் வந்த அனைவரையும் அங்குள்ள சிப்பாய்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.
கலெக்டரின் உத்தரவுடன் தான் வந்திருக்கிறோம் என்று கூறியும் தானாபதிப் பிள்ளையை மட்டுமே இறுதியில் உள்ளே வர அனுமதித்தனர்.
22. இராமலிங்கம் விலாசம் மாளிகையில் கட்டபொம்மனுக்கு நேர்ந்தது என்ன?
ழ இராமலிங்கம் விலாசம் மாளிகையில் மன்னன் என்ற முறையிலோ,
ழ சிறந்த வீரர் என்ற முறையில் கூடவோ கட்டபொம்மனுக்கு மரியாதை வழங்கப்படவில்லை.
ழ அவர் அமர்வதற்கு அங்கு ஆசனம் கூடத் தராமல் அவரை அவமதித்தான் ஜாக்ஸன் துரை.
ழ தொடாந்து ஊர் ஊராகத் வந்திருந்ததால் ஏற்பட்ட அவனது உடல்நிலைப் பாதிப்பைத் தன்னைக் கண்டதால் ஏற்பட்ட அச்சம் என்று தவறாக நினைத்து அவன் தன் வார்த்தைகளால் கட்டபொம்மனைத் தாக்கினான்.
23. ஜாக்ஸன் துரைக்கும் கட்டபொம்மனுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்கள் யார் யார்?
'துவாஷி' என்பவன் ஜாக்ஸன் துரை கூறியதை கட்டபொம்மனுக்குத் தமிழிலும்,
தனாபதிப் பிள்ளை கட்டபொம்மன் கூறியதை ஜாக்ஸனுக்கு ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கூறினர்.
24. கட்டபொம்மனுக்கும் ஜாக்ஸன் துரைக்கும் நடந்த காரச்சாரமான வாதங்களை விவரி.
அமர ஆசனம் கூடத் தராத ஜாக்ஸன் துரை கட்டபொம்மனைப் பார்த்து “வீரபாண்டியக் கட்டபொம்மன் நீதானா?” என்று ஏளனத்துடன் வினவினான்.
அதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்ஸன் துரைக்கு அருகில் இருக்கும் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டு,
நீ வரிகேட்டு கடிதம் எழுதியவனும்,
பாஞ்சாலங்குறிச்சிக்கு வேந்தனும்,
திருநெல்வேலிக்கு வரும்படி நீ அழைத்தவனும்,
நீ ஊர் ஊராகத் தொடர்ந்து ஓடியபோது, விடாது உன்னைத் துரத்தி அடித்தவனும் நான்தான். அதில் என்ன உனக்கு சந்தேகம்? என்றும் கூறினான். இவ்வாறு ஜாக்ஸன் துரைக்கும் கட்டபொம்மனுக்கும் காரச்சாரமான விவாதங்கள் நடந்தன
25. ஜாக்ஸன் துரையின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குக் கட்டபொம்மன் அளித்த பதில் யாது?
• ஜாக்ஸன் கட்டபொம்மனிடம், எனக்குத் தரவேண்டிய 3310 பகோடாக்கள் வரியை நீ எப்பொழுது தரப்போகிறாய்? என்றான்.
• அதற்குக் கட்டபொம்மன் உரக்க சிரித்ததோடன்றி, நீ என்னிடம் கேட்க வேண்டிய அனைத்து கேள்விகளையும் கேட்டபின் நான் பதில் அளிக்கிறேன் என்றான்.
• பின்னர் ஜாக்ஸன் தொடர்ந்தான். – எங்கள் பிரதிநிதி மாக்ஸ்வெல்லை அவமானப்படுத்தியுள்ளாய்,
• தளபதி ஆலன் துரையை அசிங்கப்படுத்தியுள்ளாய்,
• உயர் அதிகாரிகளின் கடிதங்களுக்குப் பதில் எழுதாமல் உதாசீனப்படுத்தியிருக்கிறாய்,
• வரிகேட்ட பொழுது வாய்நீளம் காட்டியுள்ளாய்,
• என்னை சந்திக்காமல் இழிவுபடுத்தினாய்,
• என் கடிதத்தை மறுத்து என்னைக் கேவலப்படுத்தினாய்,
• எங்கள் சார்பாளரான எட்டப்ப நாயக்கரை மிரட்டுகிறாய்
• எங்களை எதிர்ப்பதற்கு மற்ற பாளையக்காரர்களைத் தூண்டிவிடுகிறாய்,
• நாங்கள் அறிவித்த பகுதிகளில் உன் ஆட்களை வரிவசூலிக்க அனுப்புகிறாய்
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டான்.
26. ஜாக்ஸன் துரையின் தொடர்ச்சியான வினாக்களுக்குக் கட்டபொம்மன் வீரத்துடன் கூறிய பதில் யாது?
என்னிடம் வரிகேட்க நினைத்ததே தவறு.
நேரில் வந்து வரிகேட்டது அதைவிடத் தவறு.
மிரட்ட முயன்றது தவறு.
எட்டப்ப நாயக்கனுக்கு இரண்டு கிராமங்களை தாரை வார்த்தது தவறு.
அவனைப்போல் நானும் உன்னை அண்டிப் பிழைப்பேன் என நினைத்தது தவறு.
அதிகாரபலம், ஆணவத் திமிர், ஆயுத பலம் ஆகியவற்றால் என்னை அடக்க நினைப்பது தவறிலும் தவறு.
இத்தனைத் தவறுகளையும் செய்துவிட்டு என்னை நிற்க வைத்துப் பேசுவது உன் அறியாமையால் விளைந்த மாபெரும் தவறு.
என்று ஜாக்ஸன் துரையை நோக்கி வீரமுழக்கம் இட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
27. ஜாக்ஸன் துரையை அச்சம் கொள்ளச் செய்தது எது?
வீரபாண்டிய கட்டபொம்மனின் கம்பீரமும், ஆவேசமும் ஜாக்சன் துரையை அச்சம் கொள்ளச் செய்தது.
சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று பந்தாடுவதைப் போல இவன் நம் இடத்திற்கு வந்து நம்மையே மிரட்டுகிறானே என்று ஜாக்சன் துரை எண்ணினான்.
28. பலமணிநேர உரையாடலுக்குப் பிறகு இராமலிங்கம் விலாசம் மாளிகையில் நிகழ்ந்தது என்ன?(அல்லது) கட்டபொம்மன் எதனால் கிளார்க்கை கொன்றார்?
இடைவிடாது கேள்விக் கணைகளும் காரச்சாரமான பதில்களும் தொடர்ந்து முடிந்ததும். மறுநாளும் விசாரணை என்ற பெயரில் கட்டபொம்மனை கட்டாயப்படுத்தி அங்கேயே இருக்கப் பணித்தான் ஜாக்சன் துரை.
தன் உடல் நலக் குறைவினால், அவன் மிரட்டலுக்கு அடிபணிய கட்டபொம்மன் வெளியேறத் தொடங்கிய போது, ஜாக்ஸன் துரையின் ஆணைக்கிணங்க அவன் துணைத் தளபதி கிளார்க் வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்ய முனைந்தான்.
ஆத்திரமுற்ற கட்டபொம்மன் தன் கைவாளால் கிளார்க்கின் உடல் வேறு தலைவேறு என்றவாறு வெட்டிவிட்டு ஆவேசமாக அங்கிருந்து கிளம்பினான்.
29. தானாபதிப் பிள்ளையை ஜாக்ஸன் துரை எதனால் கைது செய்தான்?
கிளார்க்கை கொன்ற கையுடன் தப்பிய கட்டபொம்மனை வாசலில் தடுத்த சி;பபாய்களை கட்டபொம்மனின் ஆட்கள் அடித்து விரட்டினர்.
அங்கிருந்து பரமக்குடிக்கு வந்ததற்குப் பின்பே தானாபதிப் பிள்ளை ஜாக்ஸனிடம் சிக்கிக் கொண்டது கட்டபொம்மனுக்குத் தெரியவந்தது.
மீளச் சென்றால் நாமே நம்மை கைதிகளாக்கிக் கொள்வோம் என்று மற்றவர்கள் தடுத்ததால் வேறு வழியின்றி கட்டபொம்மன் அங்கிருந்து சென்றார்.
கட்டபொம்மன் மீள வராததால் ஜாக்ஸன் துரை தானாபதிப் பிள்ளையைக் கைது செய்தான்.
30. இராமலிங்க விலாச வாக்குவாதத்திற்குப் பிறகு கட்டபொம்மன் கவர்னருக்கு விபரமாக எழுதிய கடிதச் செய்திகள் குறித்து எழுதுக.
கலெக்டர் ஜாக்ஸன் துரை பேட்டிக் காண தன்னை ஊர் ஊராக இழுத்தடித்தது,
நட்பு முறையில் சந்திக்கச் சென்றதை அவனுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தன்னைக் கைது செய்ய முன்வந்தது,
தன் அமைச்சர் தானாபதிப் பிள்ளையை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது போன்ற விவரங்கள் குறித்து கட்டபொம்மன் கவர்னருக்கு விபரமாகக் கடிதம் அனுப்பினார்.
31. ஜாக்ஸன் துரை தயாரித்த பொய்க் கடிதம் யாது?
கட்டபொம்மன் கவர்னருக்குத் தன்னைப் பற்றிக் கடிதம் எழுதியதைத் தெரிந்து கொண்டான் ஜாக்ஸன் துரை. அதனால்,
சிவகிரி, ஊற்றுமலை பாளையக்காரர்களை அழைத்து, - தங்கள் சொத்துக்களை கட்டபொம்மன் கொள்ளை அடித்ததாகவும்,
தடுக்க முயன்ற ஆட்களை கொலை செய்ய முயன்றதாகவும் எழுதிக்கொடுக்க வலியுறுத்தி தன் விருப்பப் படியே கடிதம் தயார் செய்தான் ஜாக்ஸன் துரை.
32. டேவின்சன் என்பவர் யார்? அவரிடம் கட்டபொம்மன் என்ன கூறினார்?
தூத்துக் குடியில் இருந்த ஆங்கில அதிகாரி டேவின்சன் ஏற்கனவே கட்டபொம்மனுக்கு அறிமுகமானவர்.
அவரைச் சந்தித்து, கட்டபொம்மன் - இராமநாதபுரத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும்,
சிவகிரி, ஊற்றுமலை பாளையக் காரர்களிடம் மிரட்டி வாங்கிய கடிதம் பற்றியும்,
தானாபதிப் பிள்ளைக்கு ஜாக்ஸன் துரை சிறையில் கொடுக்கும் கொடுமை குறித்தும்,
கவர்னருக்குத் தான் எழுதிய கடிதம் பற்றியும், இதுவரை அவரிடமிருந்து பதில் வராதது குறித்தும் விரிவாகக் கூறினார் கட்டபொம்மன்.
33. கவர்னருக்கு டேவின்சன் எழுதிய கடிதத்தால் விளைந்தது என்ன?
ஆங்கில அதிகாரி டேவின்சனின் கடிதத்தின் பேரில் மறு விசாரணை நடந்தது.
பாளையக் காரர்களின் கடிதத்தினைக் காட்டி தப்ப எண்ணினான் ஜாக்ஸன் துரை.
அதிகாரிகள் மத்தியில் தானாபதிப் பிள்ளை இதற்கெல்லாம் காரணம் ஜாக்சன் துரைதான் எனக்கூறி ஜாக்ஸனின் முகமுடியைக் கிழித்தெறிந்தார்.
கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட ஆதாரங்கள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டது.
எனவே தானாபதிப் பிள்ளையை விடுதலை செய்தும், ஜாக்ஸன் துரையைப் பதவி நீக்கம் செய்தும் உத்தரவிட்டார் கவர்னர்.
அதோடு நடந்த நிகழ்வுகளுக்காக கட்டபொம்மனிடம் மன்னிப்பும் கேட்டார்.
பாடம் 7 ஜாக்ஸன் துரை போனான் லூஸிங்டன் வந்தான்
வினாக்கள்:
1. பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எதனால் மகிழ்ச்சி அடைந்தனர்?
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பல ஊர்களுக்கு இழுக்கடித்தவனும்,
கட்டபொம்மனைக் கொள்ளைக் காரனாகவும், கொலைகாரனாகவும் சித்தரித்தவனும்,
தன் அதிகார பலத்தால் கட்டபொம்மனை வீழ்த்திவிடலாம் என்று எண்ணியவனும்,
நெல்லை மாவட்டக் கலெக்டர் பதவியை இழந்தவனுமாகிய ஜாக்ஸனை எண்ணி பாஞ்சாலங்குறிச்சி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
2. கட்டபொம்மன் ஆங்கிலேயர்கள் குறித்து எவ்வாறு நம்பிக்கைக் கொண்டான்;?
ஆங்கிலேய அதிகாரிகள் திருச்சியில் கட்டபொம்மனை சமாதானம் செய்ததாலும்
நெல்லை மாவட்டத்திற்குக் கலெக்டராக இனி வருபவர் எவரும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படமாட்டார்கள் என்று கட்டபொம்மன் நம்பினான்.
3. லூஸிங்டன் எப்பொழுது பொறுப்பேற்றான்?
1799 ஜனவரி 1 ஆம் தேதி லூஸிங்டன் நெல்லை மாவட்டக்கலெக்டராகப் பொறுப்பேற்றான்.
4. லூஸிங்டன் பொறுப்பேற்றவுடன் சில பாளையத்தார் என்ன செய்தனர்?
லூஸிங்டன் பொறுப்பேற்றவுடன் சில பாளையத்தார்
அவனை தரிசிப்பதற்கும்,
அவன் கடைக்கண் பார்வைக்கும்,
அவன் அழைக்காமலேயே அவனை நாடிச் சென்று மண்டியிட்டு வணங்கினர்.
அவன் கேட்காமலேயே அடிமை சாசனத்தையும் எழுதிக்கொடுத்தனர்.
5. லூஸிங்டன் எதனை எதிர்ப்பார்த்தான்?
ஜாக்ஸன் துரையின் பதவி நீக்கத்திற்கும்,
தன்னுடைய பதவி ஏற்புக்குக் காரணமானவனும் ஆகிய கட்டபொம்மன் தன்னைச் சந்திக்கவருவார் என்று லூஸிங்டன் எதிர்பார்த்தான்.
6. பதவி ஏற்ற இரண்டு மாதங்கள் கழித்து லூஸிங்டன் என்ன செய்தான்? (அல்லது) லூஸிங்டனின் முதல் கடிதச் செய்தி யாது?
• பதவியேற்றதும் லூஸிங்டன் 1799 மார்ச் 16 அன்று கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். அதில்
• இராமநாதபுரம் மாளிகையில் கலெக்டரைக் காணச் சென்றபோது, தளபதி கிளார்க்கைக் கொன்றுள்ளீர்.
• அவரது குடும்பதிற்கு உடனே நஷ்ட ஈட்டைத் தரவேண்டும் என்றும்,
• தன்னை உடனே வந்து சந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தான்.
7. லூஸிங்டனின் முதல் கடிதத்திற்கு கட்பொம்மன் எவ்வாறு பதில் எழுதி அனுப்பினார்?
லூஸிங்டனின் முதல் கடிதத்தைக் கண்ட கட்டபொம்மன்
ழ கலெக்டராக வெள்ளையர் யார் வந்தாலும், இந்நிலைதானா? என்று எண்ணிய கட்டபொம்மன் தன்
ழ அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதன் பிறகு தான் லூஸிங்டனுக்கு எழுதிய கடிதத்தில்,
ழ துணைத் தளபதி கிளார்க் இறந்த அதே கலவரத்தில் எங்களின் படைவீரர் இருவர் இறந்துள்ளனர். அதற்கு நஷ்டஈடு தருவதாயின் நானும் தருகிறேன் என்றும்,
ழ அதே கலவரததில் எங்கள் வீரர்களடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்,
ழ நல்ல நாள் பார்த்துத் தங்களைச் சந்திக்க வருகிறேன் என்றும் பதில் கடிதம் அனுப்பினான்.
8. கட்டபொம்மனிடம் லூஸிங்டனிற்கு எதனால் வெறுப்பு ஏற்பட்டது?
லூஸிங்டன் தாங்கள் வரிவசூல் செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கட்டபொம்மன் தன் ஆட்களை விட்டு வரிவசூல் செய்ததோடு, அதற்கானக் காரணத்தையும் கூறாததால், கட்டபொம்மனிடம் லூஸிங்டனிற்கு வெறுப்பு ஏற்பட்டது.
9. கட்டபொம்மனை சிக்க வைக்க லூஸிங்டன் என்ன எண்ணினான்?
கட்டபொம்மனை சிக்கவைக்க லூஸிங்டன்
சிவகிரி, ஊற்றுமலைப் பாளையக்காரர்களின் சொத்துக்களை கட்டபொம்மன் கொள்ளையடித்ததாகவும்,
அதனைத் தடுக்க வந்தவந்தவர்களைக் கொலை செய்ததாகவும் கட்டாயப்படுத்தி எழுதிவாங்கினான்.
10. லூஸிங்டன் ஆடிய நாடகம் என்ன?
ஸ்ரீவைகுண்டம் பகுதியிலுள்ள ஆங்கிலேயரின் நெற்களஞ்சியங்களை கட்டபொம்மன் தன் அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆட்களை அனுப்பிக் கொள்ளையடித்ததாகவும்,
அதனைத் தட்டிக்கேட்டக வந்த காவலரைக் கொலை செய்ததாகவும் புனைந்து லூஸிங்டன் நாடகம் ஆடினான்.
11. லூஸிங்டனின் இரண்டாவது கடிதச் செய்தி யாது?
லூஸிங்டன் கட்டபொம்மனின்மீது ஏற்படுத்திய பொய்வழக்கை விசாரிக்க,
உடனடியாக தம்மைக் கமுதியில் சந்திக்கும் படியும்,
30 பேர்களுக்கு மேல் உடன்வரக்கூடாது என்றும் கடிதம் எழுதி அனுப்பினான்.
12. லூஸிங்டனின் இரண்டாவது கடிதச் செய்திக்குக் கட்டபொம்மன் என்ன செய்தார்?
1799 மே இறுதியில் பெரும் படைவீரர்கள் சூழ கட்டபொம்மன் லூஸிங்டனைச் சந்திக்கக் கமுதிக்குச் சென்றார்.
13. லூஸிங்டனின் மூன்றாவது தகவல் யாது?
கட்டபொம்மன் தன்னைக் காணப் பெரும் படையுடன் வந்ததை அறிந்த லூஸிங்டன், 1799 ஜூன் 4ஆம் நாளன்று பெரும்படையுடன் என்னைக் காணவந்தது மிகப்பெரும் தவறு என்றும் அக்கடிதம் கண்டதும், ஐந்து மணி நேரத்திற்குள் தன்னைக் காணும்படியும் மீண்டும் கடிதம் அனுப்பினான்.
14. தன்னைக் காண மீண்டும் வலியுறுத்திய லூஸிங்டனுக்குக் கட்டபொம்மன் அளித்த பதில் யாது?
லூஸிங்டன் தன்னை மீண்டும் காணப் பணித்ததற்குக் கட்டபொம்மன்
“ஒரு மன்னனுக்குரிய தோரணையுடன் தான் நான் வந்திருக்கிறேன்.
இதற்கு அனுமதி வழங்கினால் தான் நான் உங்களைக் காண இயலும்.
மேலும் தனிமனிதனாக வந்து உங்களைக் காண்பது மரபும் இல்லை.
அதனை நான் விரும்பவும் இல்லை.” என்று பதிலனுப்பினான்.
15. தானாபதிப் பிள்ளையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லூஸிங்டன் கட்டபொம்மனுக்கு வலியுறுத்தியதும், அதற்குக் கட்டபொம்மன் கூறிய மறுமொழியும் யாது?
தங்களுக்குச் சொந்தமான ஸ்ரீவைகுண்ட நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்ததைத் தட்டிக்கேட்டக் காவலர்களைக் கொன்ற தானாபதிப் பிள்ளையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லூஸிங்டன் கட்டபொம்மனை வலியுறுத்தினான்.
அதற்குக் கட்டபொம்மன், “எனது அனுமதியின்றி தனாபதிப் பிள்ளை அவ்வாறு செய்திருக்க மாட்டார்.
எனவே அவரை உங்களிடம் ஒப்படைக்க இயலாது” என்று திட்டவட்டமாக பதிலளித்தான்.
16. லூஸிங்டன் எதனால் திகைத்தான், பின்னர் கட்டபொம்மனிடம் அவன் வினவிய விடையும் அதற்குக் கட்டபொம்மன் கூறிய விடையும் யாது?
கட்டபொம்மன் தான் விரித்த வலையில் எந்த நிலையிலும் சிக்காமல் இருக்கிறானே என்று நினைத்துத் திகைத்தான் லூஸிங்டன்.
பின்னர் கட்டபொம்மனிடம் தனக்குத் தரவேண்டிய வரிப்பணத்தையாவது தரவேண்டும் என்று வினவினான்.
அதற்குக் கட்டபொம்மன் இதுகுறித்து சிந்தித்துத் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி,
நண்பன் என்ற முறையில் நான் உங்களைக் காணவந்தேன். 8 நாட்கள் ஆகியும் அது நடக்கவில்லை.
எங்களிடம் பறிமுதல் செய்த பொருள்களைக் கேட்டிருந்தேன். அதற்கும் பதிலில்லை.
ஒரு பாளையத் தலைவன் என்ற தோரணையுடன் நான் வந்ததால் என்னைச் சந்திக்கவும் இல்லை.
ஸ்ரீவைகுண்டத்தில் நடக்காத சம்வத்திற்காக என் அமைச்சருக்குத் தண்டனை தரத் துடிக்கிறீர்கள்.
மேலும் வரிவசூலிப்பதிலேயே குறியாய் இருக்கிறீர்கள் என்று கட்டபொம்மன் லூஸிங்டனுக்கு விடையளித்தான்.
17. ஆட்கள் மாறினாலும் அவர்களின் நோக்கம் ஒன்று என்று எண்ணிய கட்டபொம்மன் என்ன செய்தார்?
ஸ்ரீவைகுண்டத்தில் நடக்காத ஒரு சம்பவத்திற்காக தங்களுக்கு எவ்வகையிலாவது தண்டனை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த லூஸிங்டனும், இறுதியில் வரிகேட்பதிலேயே குறியாய் இருந்ததால், அதிகாரிகள் அனைவரும் இவ்வாறுதான் இருப்பார்கள் என்று கருதி,
எந்நிலையிலும் உங்களுக்கு வரிகட்டுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்
வரிகேட்கும் உரிமை உங்களுக்கும், தந்துவாழும் அவசியம் எங்களுக்கும் இல்லை.
என்று கட்டபொம்மன் லூஸிங்டனுக்குக் கடிதம் எழுதியனுப்பிவிட்டு, அவனைச்
சந்திக்காமலேயே பயணமானார்.
பாடம் 8. உளவாளியான பாளைக்காரன்
வினாக்கள்:
1. லூஸிங்டனுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம் யாது, ஆங்கில அதிகாரிகளும் அவனும் கட்டபொம்மனைப் பற்றி எவ்வாறு விமர்சித்தனர்?
கமுதிக்கு வந்ததும் தன்னைச் சந்திக்காமலே கட்டபொம்மன் சென்றது லூஸிங்டனுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
பிற ஆங்கில அதிகாரிகளோடு ராமலிங்க விலாச நிகழ்ச்சியைப் பற்றியும்,
ஜாக்ஸனை துச்சமாக மதித்தது பற்றியும்,
ஆங்கிலப் படைவீரர்களை வீரத்துடன் முறியடித்தது போன்ற நிகழ்வுகளைப் பற்றியும் விவாதித்ததால் லூஸிங்டனுக்குக் கட்டபொம்மனிடம் பயம் கலந்த மரியாதை ஏற்பட்டது.
2. லூஸிங்டன் கட்டபொம்மனைத் தோற்கடிக்க என்ன நினைத்தான்? அதுகுறித்து நினைத்ததும் அவன் நினைவிற்கு வந்தது யார்;?
லூஸிங்டன் கட்டபொம்மனைத் தோற்கடிக்க நினைத்தும் அவன் நினைவில் வந்தவன் எட்டப்பன்.
எனவே எவ்வழியில் அவனை வீழ்த்தலாம் என்று பலமாகச் சிந்தித்தான்.
3. எட்டப்பனை ஆங்கிலேயர் எவ்வாறு கொத்தடிமையாக்கினர்?
வெளிநாட்டு மதுபானங்களுக்கு எட்டப்பன் அடிமை என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவனை விருந்துக்கு அழைத்து அளவுக்கு அதிகமாக மதுவைக்கொடுத்து அவனைத் தங்களின் கொத்தடிமையாக வைத்திருந்தனர்.
4. லூஸிங்டன் யாரை தன் ஒத்துழைப்பிற்கு அழைத்துக்கொண்டான்? ஏன்?
அலெக்சாண்டர் ஹெரானுக்குப் பிறகு நெல்லை மாவட்டப் பாளையங்களையும், அம்மன்னர்களையும், நன்கு அறிந்திருந்த மாக்ஸ்வெல்லை தனக்கு ஒத்துழைக்க அழைத்துக்கொண்டான் லுஸிங்டன்.
5. எட்டப்பன் எதனால் திக்குமுக்காடினான்? பிறகு ஆங்கிலேயர்கள் அவனிடம் என்ன கேட்டனர்?
ஆங்கிலேயரின் அளவுக்கு அதிகமான உபசரிப்பால் எட்டப்பன் திக்குமுக்காடினான்.
பின்னர் அவர்கள் கட்டபொம்மனைப் பற்றி தன்னிடம் வினவியதும்,
துரைமார்களே! என்போன்றோர் உங்கள் நட்பிற்குக் காத்திருக்கின்றனர்.
ஆனால் கட்டபொம்மன் உங்களை மதிப்பதில்லை. வரிகட்ட நினைப்பதில்லை. எனவே அவனை விட்டுவைக்காதீர்கள் என்று எட்டப்பன் அதிகாரிகளிடம் கூறினான்.
6. லூஸிங்டனிற்கும் எட்டப்பனுக்கும் நடந்த உரையாடலை சுருக்கி வரைக.
லூஸிங்டன் எட்டப்பனிடம்,
கட்டபொம்மனைப் பற்றிப் பேசவே இந்த ஏற்பாடு. உன்னிடம் ஒரு உதவியை எதிர்பார்க்கிறேன் என்றதும்,
எட்டப்பன் சொல்லுங்கள், செய்யக் காத்திருக்கிறேன் என்றான்.
அதற்கு லூஸிங்டன் கட்டபொம்மனின் மர்மத்தையும், உள்ளக் கருத்தையும் அவனுடன் நேரடியாகப் பேசிய எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. எனவே தாங்கள் மாறுவேடத்தில் சென்று அவன் மனக்குறிப்பை அறிந்து வரவேண்டும் என்றான்.
7. எட்டப்பனுக்கு எதனால் அச்சம் ஏற்பட்டது? பின்னர் என்ன முடிவுக்கு எதனால் வந்தான்?
தன்னை மாறுவேடத்தில் சென்று கட்டபொம்மனை சந்திக்கச் சொன்னதால் எட்டப்பன் அச்சமுற்றான்.
பின்னர், ஆங்கிலேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து அவர்களின் ஆதரவைப் பெற இயலாது என்று நினைத்தான்.
8. எட்டப்பன், கட்டபொம்மனைப் பார்த்து கூறிய செய்திகளை சுருக்கி வரைக.
மாறுவேடத்தில், பஞ்சாலங்குறிச்சி கோட்டைமுன் நின்று கட்டபொம்மனின் அனுமதியை வேண்டினான் எட்டப்பன்.
தூரத்திலிருந்தே வந்திருப்பது எட்டப்பன் என அறிந்ததும், அதை வெளிக்காட்டாது வரவேற்றான் கட்டபொம்மன்.
பின்னர் எட்டப்பன் கட்டபொம்மனிடம் அவரின் நன்மைக்காகவே தான் வந்திருப்பதாகவும் வெள்ளையரை எதிர்க்கும் போக்கை நிறுத்தும்படியும் கூறினான்.
மேலும் ஆங்கிலேயர் நினைத்தால் அவர்களின ஆயுதங்களால் ஒரே நாளில் கோட்டையைத் தரைமட்டமாக்கவும் இயலும் என்றும் கூறினான்.
9. வந்திருப்பது எட்டப்பன் என்பதை அறிந்த கட்டபொம்மன் என்ன செய்தார், அங்கு என்ன நடந்தது?
தூரத்திலிருந்தே வந்திருப்பது எட்டப்பன் என அறிந்திருந்தும் அதை வெளிக்காட்டாது வரவேற்றான் கட்டபொம்மன்.
பின்னர், எட்டப்பன் கட்டபொம்மனிடம் வெள்ளையரை எதிர்க்கும் போக்கை நிறுத்தக்கூறியவுடன்
பொறுமையிழந்த கட்டபொம்மன் “வெள்ளையரின் வீரத்தைச் சொல்வதற்குத்தானே மாறுவேடத்தில் வந்துள்ளீர் எட்டயபுரத்து மன்னர் எட்டப்ப நாயக்கர் அவர்களே!” என்றார்.
கட்டபொம்மன் தன்னை கண்டுகொண்டதை அறிந்ததும், எட்டப்பன் தலைகுனிந்தான்.
வந்திருப்பது எட்டப்பன் என்பதை அறிந்ததும் ஊமைத்துரை வாளை உருவினான்.
அதைத் தடுத்த கட்டபொம்மன் “தம்பி! இவரும் நம்மைப் போன்று பாளையத்து மன்னர்.
ஆனால் எழுந்து நிற்பதற்குப் பதிலாகக் காலில் விழுந்து கிடக்கிறார்.
மதுவுக்காகவே இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கிறார்” என்றார்.
10. நீங்களும் அன்னியர் தானே என்று எட்டப்பன் கட்டபொம்மனைப் பார்த்து வினவியதையும் அதற்கு கட்டபொம்மன் கூறிய மறுமொழியையும் விவரி.
வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துரையிடம் எட்டப்பன் அன்னியர்கள் கொடுக்கும் மதுவிற்காக இங்கே மாறுவேடத்தில் வந்ததாகவும் அன்னியர்களின் காலில் விழுந்து வரிகட்டி ஆயுளைக் கடத்துகிறார் என்றும் கூறியவுடன், கோபம் கொண்ட எட்டப்பன்,
• வீரபாண்டியரே! மூச்சுக்கு முன்னூறு தடவை ஆங்கிலேயர்களை அன்னியர்! அன்னியர்! என்கிறீர்களே!. ஆனால் நீங்களும் அன்னியர் தானே! என்று கேட்டான்.
• அதற்கு கட்டபொம்மன், “எட்டப்பரே! நானும் நீங்களும் பிறப்பால் தெலுங்கர்தான். நம் இரண்டு பேருடைய மூதாதையர்களும் ஆந்திர மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் தான்.
• ஆனால் இந்த மண்ணின் மகத்துவத்தைக் காப்பதற்கு நான் வாழ்கிறேன். ஆனால் நீங்கள் இந்த மண்ணை அடகு வைப்பதற்காக வாழ்கிறீர்கள். அதிகமாகப் பேசி எங்களை ஆத்திரமூட்டாமல் தயவு செய்து செல்லுங்கள்” என்றார்.
• வேடம் கலைந்து கோட்டையை விட்டு வெளியேறினான் எட்டப்பன்.
பாடம் 9 பானர் மேன் என்றொரு பாதகன்
வினாக்கள்:
1. எட்டப்பன் லூஸிங்டனிடம் யாது கூறினான்? எதனால் லூஸிங்டன் மனம் கலங்கினான்? பிறகு என்ன எண்ணினான்?
எட்டப்பன் கட்டபொம்மனுடன் நடந்ததைக் கூறி அழுததாலும், கட்டபொம்மனைத் தன் வழிக்குக் கொண்டுவர இயலாததாலும், லூஸிங்டன் மனம் கலங்கினான்.
எனவே கட்டபொம்மனைச் சந்திப்பதில் பலனில்லை என்று எண்ணினான்.
2. கவர்னருக்கு லூஸிங்டன் எழுதிய முதல் கடிதச் செய்தி யாது? அதனால் விளைந்தது என்ன?
• கட்டபொம்மனை ஆயுதங்களுடன் வீழ்த்தவேண்டி கவர்னருக்குக் கடிதம் அனுப்பினான்.
• அவ்வாறு செய்வதன் மூலம் பாளையக்காரர்களும் தம்மேல் அச்சம் கொண்டு வரிசெலுத்துவர் எனவும் கூறினான்.
3. வெள்ளையர் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது எப்பொழுது எவ்வாறு படையெடுத்தது? (அல்லது) 1799 செப்டம்பர் 4ல் நடந்தது என்ன?
1799 செப்டம்பர் 4ல் மேஜர் ஜான் பானர்மேன் தலைமையில் 4 ஆயிரம் படைவீரர்கள்; கொண்ட வெள்ளையர் படை பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.
4. பானர் மேன் எச்சூழலில் படையெடுத்தான்? அதற்குக் காரணமானவன் யார்?
எட்டப்பனின் யோசனைப்படி தானாபதிப் பிள்ளையும், ஊமைத்துரையும் இல்லாத நேரத்தில் பானர்மேன் படையெடுத்தான்.
5. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையன் மீது தாக்குதல் நடத்தக் காத்திருந்தவர்கள் யார் யார்? அதற்குத் துணையாக நின்றவர்கள் யார்?
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் மீது தாக்குதல் நடத்தக் காத்திருந்தவர்கள் காப்டன் ஓரிலி, ப்ரூஸ், டக்ளஸ், பார்மீக்ஸ், ப்ளேக், ப்ரௌன் முதலியவர்கள்.
அதற்குத் துணையாக நின்றவர்கள் எட்டப்ப நாயக்கனின் ஓராயிரம் படைவீரர்கள் மற்றும் லெப்டினென்ட் தலைமையிலான குதிரைப்படையும் ஆகும்.
6. கோட்டைக்குள் கட்டபொம்மனின் ஆணைக்காகக் காத்திருந்தவர்கள் யார் யார்?
கோட்டைக்குள் கட்டபொம்மனின் ஆணைக்காகக் காத்திருந்தவர்கள்:
வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம், தானாபதிப்பிள்ளை, வீரபத்திரப்பிள்ளை, சம்பிரதி பொன்னம்பிள்ளை ஆகியோர்.
7. பானர்மேன் ஆலோசனைப்படி தூதாகக் கோட்டைக்குள் சென்றவர்கள் யார் யார்? அவர்களைக் காவலர்கள் எவ்வாறு அழைத்துச் சென்றனர்?
பானர்மேன் ஆலோசனைப்படி தூதாகச் சென்றவர்கள் சுபாஷ் ராமலிங்க முதலியார், ஹவில்தார் இப்ரஹிம் கான், அரிக்காரன் சாமி ஆகியோர்.
இவர்கள் தூதுவர்கள் என்பதால் அரண்மனைக் காவலர்கள் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உள்ளே அழைத்துச்சென்றனர்.
8. ராமலிங்க முதலியார் யார்? அவர் கட்டபொம்மனிடம் என்ன கூறினார்?
ராமலிங்கமுதலியார் பானர்மேனுக்காகக் கட்டபொம்மனிடம் தூது வந்தவர். அவர் கட்டபொம்மனிடம்,
கட்டபொம்மனாகிய தாங்கள் தானாபதிப்பிள்ளையை உடனே ஒப்படைக்கவேண்டும் என்றும்,
தரவேண்டிய வரிப்பணத்தை உடனே தரவேண்டும் என்றும்,
இல்லையேல் கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்றும் பானர்மேன்
கூறியதாகக் கூறினார்.
9. ராமலிங்க முலியாரிடம் கட்டபொம்மன் கூறிய செய்திகள் யாவை?
ராமலிங்க முலியாரிடம் கட்டபொம்மன் கூறிய செய்திகளாவன:
முதலில் வரிகேட்டனர்.
மறுத்ததால் என் அமைச்சரைக் கேட்கின்றனர்.
அவர்கள் ஒரு முடிவோடு இருப்பதன்றி, என்னையும் நிர்பந்திக்கின்றனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. என் அமைச்சர் அதில் ஈடுபடவும் இல்லை. இதுதான் நானறிந்த தகவல்.
அவ்வாறு இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும்
அதன்பின் தரணே;டிய தண்டனையை நானும் இந்த மண்ணின் மக்களுமே முடிவு செய்வோம்.
எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயனுக்கு என் அமைச்சரை ஒப்படைக்க வேண்டியதில்லை.
அவர்களின் குறி நானும் என் பாளையமும் தான்.
என் உயிருள்ளவரை அது நடக்காது என்றார்.
10. முதல் குண்டு கோட்டையின் மீது எப்பொழுது எதனால் பாய்ந்தது?
தூதாகச் சென்றவர்கள் தொங்கிய முகத்துடன் திரும்பியதால் சினமடைந்தான் பானர்மேன். அதன் விளைவாக,
1799 செப்படம்பர் 5ஆம் நாள் காலை 8 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் வடமேற்கு கொத்தளத்தின் மேல் முதல் குண்டு வீசப்பட்டுத் கோட்டைத் தாக்கப்பட்டது.
பாடம் 10. வெடிகுண்டை வீழத்திய வேல்கம்பு
வினாக்கள்:
1. வெள்ளையர்; படை விரக்தியானது எதனால்?
திருச்செந்தூருக்குச் சென்றிருந்த ஊமைத்துரையும் அவருடன் சென்றிருந்த சில வீரர்களும் திரும்பி வரமாட்டார்கள் என்று கருதிய பானர்மேன்,
பாஞ்சாலங்குறிச்சியின் மேல் திடீர் தாக்குதல் நடத்த எண்ணினான்.
ஆனால் முதல் நாள் இரவே இதனையறிந்த ஊமைத்துரையும், மற்றவர்களும் மாறுவேடத்தில் திரும்பியதால் வெள்ளையர் படை விரக்தியடைந்தது.
2. பானர் மேன் எதனால் அதிர்ச்சியடைந்தான்?
தானாபதிப் பிள்ளையை தன் சொந்த ஊரிலேயே கைது செய்ய இயலாமல், வெள்ளையர் படை வெறுங்கையுடன் திரும்பியதாலும்,
அமைச்சரும் முதல் நாள் இரவே ஆங்கிலேயர் கண்களுக்குப் புலப்படாமல் திரும்பியதாலும்,
தமது படை வீரர்களிடம் அவர்கள் சிக்காததாலும் பானர்மேன் அதிர்ச்சியடைந்தான்.
3. கட்டபொம்மன் யார் யாரிடம் எது குறித்து விவாதித்தார்?
அமைச்சர் தானாபதிப் பிள்ளை ஊமைத்துரை வெள்ளையத் தேவன், சுந்தரலிங்கம் ஆகியோருடன் கட்டபொம்மன்,
ஆங்கிலப் படைபற்றியும்,
எதிர்கொள்ளவேண்டிய போர் தந்திரம் பற்றியும் விவாதித்தார்.
4. கோட்டையின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எழுதுக.
• கோட்டையின் ஒவ்வொரு வாயிலைக் காக்கின்ற பொறுப்பு ஒவ்வொருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
• நூற்றுக்கணக்கான வீரர்கள் வாயிலருகே நிறுத்தப்பட்டனர்.
• பாதுகாப்பு சுவர் நெடுகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
5. பானர் மேன் போட்ட தப்புக் கணக்கு யாது?
தங்களிடம் அதி நவீன ஆயுதங்களால் கோட்டையைத் தாக்கிவிடலாம் என்று கட்டபொம்மனின் போர் வியூகத்தை அறியாத பானர்மேன் தப்புக்கணக்குப் போட்டான்.
6. பாஞ்சாலங்குறிச்சிப் படை வெற்றி குறித்து எழுதுக.
பானர்மேன் கோட்டையின் தெற்கு, வடக்கு வாசல்களைக் குறிவைத்துத் தாக்க ஆணையிட்டான்.
எட்டப்பனின் படைவீரர்கள் சுவர் ஏறி கோட்டையுள் குதிக்க முற்பட்டு வேல்கம்புகளுக்கு இரையாயினர்.
துப்பாக்கி குண்டுகள் கோட்டையின் சுவர்களில் பட்டு செயலற்று வீழ்ந்தன.
பீரங்கி வெடிகுண்டுகளை, வேல்கம்புகளும், வெட்டரிவாள்களும் வீழத்தின.
இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சிப் படை வெற்றி கொண்டது.
7. பானர் மேன் எதனால் திகைத்து நின்றான்?
பாஞ்சாலங்குறிச்சி வீரர்களின் போர்த்திறத்தையும்,
இடையறாத தாக்குதல்களையும் கண்டு பானர்மேன் திகைத்து நின்றான்.
8. ஊமைத்துரையும் வெள்ளையத்தேவனும் எவ்வாறு போரிட்டனர்?
சூறாவளியைப் போன்று அதிவேகமாக சுழன்று, சுழன்று ஊமைத்துரையும் வெள்ளையத் தேவனும் போரிட்டனர்.
பாடம் 11 ஆயுதக் கிடங்கை அழித்த மனித வெடிகுண்டு
வினாக்கள்:
1. ஆங்கிலேயருக்கு எதிராக முதல் எதிர்ப்பு குரல் கொடுத்தவர்கள் யார்?
ஆங்கிலேயருக்கு எதிராக முதல் எதிர்ப்பு குரல் கொடுத்தவர்கள் குறுநில மன்னர்கள்.
2. தமிழ் மண், மற்றும் தமிழ் பூமி குறித்து எழுதுக ?
ஆயுத பலத்தால் இந்தியரை எளிதில் அடக்கிவிடலாம் என்ற ஆங்கிலேயரின் எண்ணத்தில் இடிவிழச் செய்த இந்தியமக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது தமிழ் மண்.
சாதி, மத, இன பேதமின்றி ஆளுவோரும் அடித்தட்டு மக்களும் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடி மடிந்து, புதிய வரலாறு படைக்க உறுதுணையாய் இருந்தது தமிழ் பூமி.
3. வேலூர் நாச்சியார் காலப் போரைப் பற்றி சுருக்கி வரைக. (அ) குயிலியின் தியாகத்தல் நிகழ்ந்ததை விவரி.
1780 ஆம் ஆண்டு, ஹைதர் அலியின் ஆதரவுடன், மருது சகோதரர்களின் துணையுடன் இழந்த நாட்டை மீட்கும் பெரும் பணியில் வேலுநாச்சியார் போராடிக் கொண்டிருந்த வேளையில் சிவகங்கைச்சீமை மட்டும் ஆங்கிலேயர் வசம் இருந்தது.
வெள்ளையரின் ஆயுத பலம், விடுதலை வீரர்களை யோசிக்க வைத்த சமயத்தில், குயிலி என்ற ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்த இளம் பெண் தன் உடம்பில் நெய்தடவி, தீயிட்டுக்கொண்டு, வெள்ளையரின் ஆயுதக் கிடங்கினுள் குதித்து அதனைத் தவிடுபொடியாக்கி தானும் கரிக்கட்டையனாள்.
இவ்வாறு வேலூர் நாச்சியார் வெற்றிபெற அவள் உறுதுணை புரிந்தாள்.
4. பானர் மேனுடன் நடந்த போரில் சுந்தரலிங்கத்தின் பங்கு என்ன? (அ) சுந்தரலிங்கம் எவ்வாறு மடிந்தார்?
பானர் மேனுடன் நடந்த போரின் முதல் நாள் இரவில், கட்டபொம்மன் தலைமையில் முக்கியமானவர்கள் மட்டும் பங்குபெற, அவர்களுக்குள் ஆங்கிலேயர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று விவாதம் நடைபெற்றது.
அச்சமயத்தில் அங்கிருந்த சுந்தரலிங்கம் அப்பொறுப்பைத் தன்னிடம் விடும்படி கூறிச்சென்றார்.
மறுநாள் வெடித்த ஆயுதக் கிடங்கு பாஞ்சாலங்குறிச்சியையே அதிரச் செய்தது.
வெள்ளையரின் ஆயுதக் கிடங்கு வெடித்ததோடு வெள்ளையச் சிப்பாய்கள் சிலரும் வெந்தழிந்தனர்.
சுந்தர லிங்கம் தன் உடம்பில் தீப்பந்தத்தைக் கட்டிக்கொண்டு, ஆயுதக் கிடங்கினுள் புகுந்து, அதனை வெடிக்கச் செய்ததோடு தானும் மடிந்து தன் தாய்நாட்டுப் பற்றினை நிலைநாட்டினார்.
5. பாஞ்சாலங்குறிச்சி வீரரின் மகிழ்ச்சி, மற்றும் கட்டபொம்மனின் வருத்தத்திற்கான காரணத்தையும் எழுதுக.
ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதாலும், அதோடு அவ் வீரர்கள் சிலர் மடிந்ததாலும் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் மகிழ்ந்தனர்.
ஆனால் அவ்விபத்தில் தன் உயிரையே பணயம் வைத்து சுந்தரலிங்கம் தானும் மடிந்ததனை எண்ணி கட்டபொம்மன் மனம் கலங்கி கண்ணீர் விட்டு அழுதார்.
பாடம் 12 நுழைந்தான் பிணமாய் விழுந்தான்
வினாக்கள்:
1. சுந்தரலிங்கத்தின் மறைவிற்குப் பின் பானர்மேனின் மகிழ்வு மற்றும் தீர்மானம், ஆகியவற்றையும் கட்டபொம்மனின் ஆலோசனையையும் குறித்து எழுதுக.
தங்களின் ஆயுதக் கிடங்கு வெடித்து சிதறியபோதும், கட்டபொம்மனின் மகத்தான வீரர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் மடிந்ததை எண்ணி பானர்மேன் மகிழ்ச்சி அடைந்தான்.
பின்னர் பாஞ்சாலங்குறிச்சியின் தெற்குவாசலைக் குறிவைக்கத் தீர்மானித்தான்.
அதே நேரத்தில் கோட்டையின் வடக்கு வாயிலை ஊமைத்துரையும், தெற்கு வாயிலை வெள்ளையத் தேவனும் தலைமை ஏற்று பாதுகாப்பதென கட்டபொம்மன் ஆலோசனை நடத்தினார்.
2. காலின்ஸ் யார் அவனுக்கு நேர்ந்தது என்ன?
காலின்ஸ் என்பவன் ஆங்கிலத் துணைத் தளபதி ஆவான்.
கோட்டையின் தெற்கு வாயிலுக்கு வெளியே அவன் தலைமையில் பெரும்படை கோட்டையைத் தாக்கியபோது, பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைச் சுவர்களின் மீதிருந்து ஈட்டி எறிந்து வெள்ளையர் படையைத் தடுத்துநிறுத்திக்கொண்டிருந்தனர்.
எதையும் சந்திக்கும் மனவலிமையுடன் வெள்ளையத் தேவனும் அவனது படைவீரர்களும் போரிட்டுக்கொண்டிருந்தபோது, வெள்ளையரின் வெடிகுண்டிற்கு கோட்டையின் தெற்கு வாயில் தாக்குபிடிக்க முடியாமல் கீழே விழுந்தது.
வெற்றிக் களிப்பில் உள்ளே நுழைந்த காலின்ஸ் வெள்யைத்தேவனின் ஈட்டிக்குப் பலியாகி மண்ணில் சாய்ந்தான்.
3. பானர்மேன் எதனால் வெள்ளையத் தேவனுக்குக் குறிவைத்தான்?
தளபதி காலின்ஸின் மறைவினால் செய்வதறியாது திகைத்த பானர்மேன் கோட்டையை கைப்பற்றுவதை விட வெள்ளையத்தேவனை வீழ்த்துவது என்ற எண்ணத்திற்கு வந்ததனால் வெள்ளையத் தேவனுக்குக் குறிவைத்தான்.
4. வெள்ளையத் தேவனின் மறைவு குறித்து எழுதுக.
வெள்ளையத் தேவனைக் குறிவைத்துத் தேடிய பானர்மேன் அவனைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கும், களத்தில் கொன்று முடிப்பவர்களுக்கும் பரிசு கொடுப்பதாக அறிவித்தான்.
இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.
ஒரு வீரனின் கைவாளுக்குப் பல வெள்ளையர்கள் மாண்டனர்.
இருப்பினும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவன் தாய்மாமனே வெள்ளையத் தேவனைக் காட்டிக் கொடுத்ததால் வெள்ளையத்தேவன் இறக்க நேரிட்டது.
5. கோட்டையைப் பற்றி பானர்மேன் எண்ணியதும், அவனின் கடிதச் செய்தியையும் குறித்து எழுதுக.
• பாஞ்சாலங்குறிச்சியின் பல தலைசிறந்த வீரர்களின் மரணத்திற்குப் பின்னும் அக் கோட்டையைக் கைப்பற்றுவது அத்தனை சுலபமல்ல என்று பானர் மேன் எண்ணினான்.
• எனவே அவன் தம் படைவீரர்களைப் பின்வாங்கக் கூறினான்.
• பிறகு 24 பவுண்டு பீரங்கிங்கியையும், இன்னும் சில படைவீரர்களையும் தனக்கு அனுப்பினால் தான் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கைப்பற்ற இயலும்.
• மற்றும் கட்டபொம்மனையும் கைது செய்ய இயலும் என்று பாளையங்கோட்டைக்கு கடிதம் அனுப்பினான்.
6. பானர்மேனின் கண்கள் சிவப்பதற்கான காரணத்தை சுருக்கி வரைக.
பானர்மேன் கேட்டுக்கொண்டபடியே ஆயுதங்களும் படைவீரர்களும் கிடைக்கப் பெற்றதால் 1799 செப்டம்பர் 9 ஆம் நாள் அதிகாலையில் அன்னியர் படை பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றியது.
பானர்மேனின் தலைமையில் ஆங்கில அதிகாரிகள் கோட்டைக்குள் நுழைந்தனர்.
அரண்மணை, அதன்சிறப்பு மற்றும் அதன் வலிமையைக் கண்டு வியந்தனர்.
இருப்பினும் பல இடங்களில் தேடியும் கட்டபொம்மன் கிடைக்காததாலும்,
அவன் தப்பிவிட்டான் என்ற செய்தி பானர்மேனுக்குக் கிடைத்ததாலும் வெறிகொண்டு கத்திய அவன் கண்கள் சிவந்தன.
பாடம் 13 நாடாண்ட மன்னன் நாடோடி மன்னனாக…
வினாக்கள்:
1. கட்டபொம்மன் ஏன் மனம் கலங்கினார்?
தனக்கு வாரிசு இல்லாத காரணத்தால், வெள்ளையத் தேவனையும், சுந்தர லிங்கத்தையும் தன் வாரிசாகக் கருதியிருந்தார் கட்டபொம்மன். எனவே வெள்ளையத் தேவனின் மறைவினை எண்ணி அவர் மனம் கலங்கித் தேம்பினார்
2. தானாபதிப் பிள்ளை கட்டபொம்மனுக்குக் கூறிய ஆலோசனை யாது?
சுந்தரலிங்கத்தையும் வெள்ளையத் தேவனையும் நாம் இழந்திருப்பது வெள்ளையருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இதற்கு மேலும் நம்மை எதிர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிந்த பானர் மேன் 24 பவுண்டு பீரங்கியையும், அதோடு படைவீரர்களையும் வேறு கேட்டு கடிதம் எழுதியுள்ளான்.
இனிமேல் வெள்ளையரை எதிர்க்க நம் படைவீரர்களால் இயலாது என்பதால் நாம் இங்கிருந்து உடனடியாகச் சென்று, ஆங்கில அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவதுதான் சாலச் சிறந்தது என்று தானாபதிப் பிள்ளை கட்டபொம்மனுக்கு ஆலோசனை கூறினார்.
3. கட்டபொம்மன் எவ்வாறு நாகலாபுரத்தை அடைந்தார்?
தானாபதிப் பிள்ளையின் யோசனைப்படி, 1799 செப்டம்பர்7 ஆம் நாள் இரவு 10. 30 மணிக்கு,
ஐம்பது வீரர்கள்,
ஏழு குதிரைகள்,
ஊமைத்துரை,
தானாபதிப்பிள்ளை,
மற்றும் சில தளபதிகளுடன், கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறி,
அதிகாலை நாகலாபுரம் பாளையத்தை அடைந்தார்.
4. கட்டபொம்மனை ஆதரித்தவர் யார் யார்? எவ்வாறு?
நாகலாபுரம் பாளையத்தின் தலைவர் இரவப்ப நாயக்கர் கட்டபொம்மனை அன்போடு உபசரித்தார்.
கோலார்ப் பட்டிப் பாளையத்தின் தலைவர் இராஜகோபால நாயக்கர் கட்டபொம்மனை வரவேற்று உபசரித்தார்.
5. பானர்மேன் கட்டபொம்மன் குறித்து பாளையக் காரர்களுக்கு எழுதிய கடிதச் செய்திகள் என்ன?
• நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாளையக்காரர்களும் கட்டபொம்மன் ஒரு கலகக்காரன் என்பதை அறிவீர்கள்.
• எங்களுக்குப் பணிந்து நடக்காததாலேயே அவனது பாளையத்தைக் கைப்பற்றினோம்.
• பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மன் ஏதோ ஒரு பாளையத்தில் தான் ஒளிந்திருக்கிறான்.
• அவனுக்குப் பாதுகாப்புக் கொடுப்பவர்கள் எங்களுக்கு எதிரியாவார்.
• அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்.
என்று பானர்மேன் அனைத்துப் பாளையக்காரர்களுக்கும் கட்டபொம்மனைப் பற்றி செய்தி அனுப்பினான்.
6. கோலார்பட்டியை முற்றுகையிட்டவர்கள் யார் யார்?
லெப்டினென்ட் டல்லாஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளும்,
காப்டன் ஓரெய்லி தலைமையில் நானூறு குண்டு வீச்சாளர்களும்,
எட்டப்ப நாயக்கனின் போர் வீரர்களும்,
கோலார் பட்டியை முற்றுகை இட்டனர்.
7. வெள்ளையர் எவ்வாறு வெற்றிபெற்றனர்?
1799 செப்டம்பர் 10ஆம் நாள் வெள்ளையர் படைக்கும், விடுதலைப் படைக்கும் கோலார் பட்டியில் நடைபெற்ற கடும்போரில்,
வெள்ளையர் படையில் 37 வீரர்களும்,
விடுதலைப் படையில் 16 வீரர்களும் மரணத்தைத் தழுவினர்.
இறுதியில் வெள்ளையர் வெற்றி வெற்றி பெற்றனர்.
8. ஆங்கிலேயர்கள் யார் யாரை கைது செய்தனர்?
தானாபதிப்பிள்ளை,
அவருடைய தம்பி வீரபத்திரப் பிள்ளை,
ஆதனூர் வெள்ளைச் சாமி நாயக்கர்,
அல்லிக்குளம் சுப்பா நாயக்கர்,
முள்ளுப்பட்டி முத்தைய்யா நாயக்கர்,
கொல்லம் பருப்பு குமாரசாமி நாயக்கர்
உட்பட 34 பேர்களை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர்.
9. தானாபதிப் பிள்ளைக்கு நேர்ந்த அவலம் குறித்து எழுதுக. (அ) தானாபதிப் பிள்ளையை பானர்மேன் என்ன செய்தான்?
கோலார்ப்பட்டி போரின் போது கைது செய்யப்பட்ட அமைச்சர் தானாபதிப் பிள்ளையை, பானர்மேன் நாகலாபுரத்தில் இருந்த ஒரு வேப்ப மரத்தில் தூக்கிலிடச் செய்தான்.
பின்னர் அவரின் தலைவேறு, உடல்வேறாக வெட்டி எடுத்து,
உடலை மட்டும் நாகலாபுரத்து வீதியில் எடுத்தெறிந்துவிட்டு,
தலையை ஒரு வேல்கம்பில் குத்தி,
அதனை பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டை வாசலில் அனைவரும் வேடிக்கைப் பார்ப்பதற்காக வைத்தான் பானர்மேன்.
10. பானர்மேனின் பழிவுணர்வு பாளையக்காரர்களுக்கு எவ்வாறு தண்டனை வழங்கியது?
ழ பாஞ்;சாலங்குறிச்சிக் கோட்டையிலிருந்து தப்பிய கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை பானர்மேன் பழிவாங்க எண்ணினான்.
ழ எனவே அவனுக்கு அடைக்கலம் கொடுத்த நாகலாபுரம் பாளையக்காரரின் தம்பி சௌந்தர பாண்டிய நாயக்கர் தம்மிடம் சிக்கவே, அவரைக் கைது செய்து, கோபாலபுரம் பாளையத்தில் வைத்து 1799 செப்டம்பர் 13ல் தூக்கிலிட்டான்.
நாகலாபுரம் பாளையத்தின் நிர்வாகி சாத்தூரப் பிள்ளை,
கோலார்பட்டி பாளையத்தின் நிர்வாகி சவுந்தரலிங்க நாயக்கர்,
குளத்தூர் பாளையத்தின் அமைச்சர் ஆறுமுகம் பிள்ளை,
காடல்குடி பாளையத்தின் அமைச்சர் கோமதிநாயகம் பிள்ளை,
ஏழாயிரம் பண்ணை பாளையத்தின் அமைச்சர் தருமப் பெருமான் பிள்ளை
ஆகிய ஐவரையும் நாடுகடத்தினான்.
• நாகலாபுரம் பாளையத்தின் மன்னர் இரவப்ப நாயக்கர்,
• ஏழாயிரம் பண்ணைப் பாளையத்தின் மன்னர் காளை வன்னியர்,
• குளத்தூர் பாளையத்pன் மன்னர் சின்ன வெட்டூர் நாயக்கர்
ஆகிய மூவரையும் கைதுசெய்து சென்னை சிறையில் அடைத்தான் பானர்மேன்.
11. கட்டபொம்மனை பின்தொடர்ந்தவர்கள் யார் யார்?
தமது பட்டத்துக் குதிரையான ‘முத்துராமில்’ கட்டபொம்மன் வடதிசைநோக்கிப் பயணம் செய்தபோது, அவரைப் பின்தொடர்ந்தவர்கள்:
200 குதிரைகளுடனும், 1100 வேல்கம்பு வீரர்களுடனும் ஆங்கிலத் தளபதிகள் டல்லாசும், பேயனும் ஆவர்.
12. சிவகங்கைச்சீமையை நோக்கி கட்டபொம்மன் கலங்கிய கண்களுடன் செல்லக்
காரணம் யாது?
தன் நாட்டை இழந்ததாலும்,
கட்டிய மனைவியைப் பிரிந்ததாலும்,
வெள்ளையத்தேவனையும், சுந்தரலிங்கத்தையும் பறிகொடுத்ததாலும்,
உயிருக்கு உயிராக நேசித்தத் தன் பட்டத்துக் குதிரை முத்துராமனையும் பறிகொடுத்ததாலும்
கட்டபொம்மன் கலங்கிய கண்களுடன் சிவகங்கைச்சீமையை நோக்கிப் போனார்.
13. ஆனியூரில் கட்டபொம்மனுக்கு உதவியவர் யார்?
ஆனியூரில் கட்டபொம்மனுக்கு உதவியவர்கள் அவ்வூரைச் சேர்ந்த காளிமுத்துவும், பெரியநம்பியும் ஆவர்.
14. வீரகஞ்சய நாயக்கர் யார்? அவர் கட்டபொம்மனிடம் கூறிய செய்தி யாது?
காடல்குடி பாளையத்தின் மன்னரே வீரகஞ்சய நாயக்கர். அவர் ஆனியூரில் கட்டபொம்மனைச் சந்தித்தபோது,
தானாபதிப் பிள்ளை தூக்கிலிடப் பட்டதைக் குறித்தும்,
நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, மற்றும் காடல்குடி ஆகியவை ஆங்கிலேயர் வசமானதைக் குறித்தும் வருந்திக் கூறினார்.
15. வீரபாண்டிய கட்டபொம்மன் தங்கிய பகுதிகள் யாவை?
வீரபாண்டிய கட்டபொம்மன் தங்கிய பகுதிகள்:
புதுக்கோட்டைப் பாளையத்திற்குச் சொந்தமான சோளபுரம் என்னும் கிராமத்தில் உள்ள மடம்,
மற்றும் காலியாப்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலும் ஆகும்.
16. புதுக்கோட்டை மன்னனுக்கு யாருடன் ரகசியத் தொடர்பு இருந்தது?
புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமானுக்கு, ஆங்கிலக் கலெக்டர் லூஸிங்டன்னுடன் ரகசியத் தொடர்பு இருந்தது.
17. கட்டபொம்மன் எதை அறியாததால் என்ன திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்?
புதுக்கோட்டை மன்னனுக்கு ஆங்கிலேய அதிகாரிகளுடன் ரகசியத் தொடர்பு இருப்பதை அறியாததால், அவர் அம்மன்னனின் உதவியோடு ஆங்கில அதிகாரிகளைச் சந்திப்பதற்குத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தான்.
18. புதுக்கோட்டை மன்னனின் சூழ்ச்சியையும், செயலையும் விவரி.
ழ காலியாப்பூர் காட்டில் கட்டபொம்மன் தங்கியிருப்பதை அறிந்த புதுக்கோட்டை மன்னன், தாம் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி கட்டபொம்மனைத் தன்னிடம் தருவித்துக்கொண்டான்.
ழ புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு, ஆங்கிலேயர் கண்களில் படாமல் தப்பிச் செல்வது குறித்துக் கட்டபொம்மனுடன் உரையாடிக்கொண்டே,
ழ மலை, குன்று ஆகிய இடங்களில் தன் படைகளை பகைவர்கள் மறைந்திருக்கும் இடத்தினைக் கண்டுபிடிப்பதற்காக நிறுத்தியிருந்தான். இதுவே அவனின் சூழ்சியும் செயலும் ஆகும்.
19. புதுக்கோட்டை மன்னன் லூஸிங்டனுக்கு அனுப்பிய கடிதச் செய்தி யாது?
இறைவனின் கிருபையாலும்,
கும்பெனியாரின் செழிப்பினாலும்,
மற்றும் தன் அதிர்ஷ்டத்தினாலும்,
கட்டபொம்மன், அவன் தம்பி ஊமைத்துரை, மற்றும் அவரின் உறவினர்கள் ஆகிய ஏழுபேரை மிகுந்த எச்சரிக்கையுடனும,; முயற்சியுடனும் கைது செய்திருப்பதாகவும்,
அங்கு கட்டபொம்மன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள திட்டமிட்டதைத் தடுத்ததாகவும்,
அவனைப் பற்றி நன்கு அறிந்த கலெக்டர் லூஸிங்டன்னிடம், தான் அவரை ஒரு நாள் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயலாது என்றும் கடிதம் எழுதினான்.
20. புதுக்கோட்டை மன்னனின் இருவித நடிப்பு குறித்தும், வெள்ளையர் கட்டபொம்மனை வீழ்த்தியது குறித்தும் சுருக்கி வரைக.
புதுக்கோட்டை மன்னனின் சூழ்ச்சியை அறியாத கட்டபொம்மன் அவருடனேயே தங்கியிருந்தபோது, அவருக்கு உதவிசெய்வதாக ஒருவித நடிப்புடனும்,
அதே நேரத்தில் பதுங்கியிருந்த வீரர்களைத் தன் வீரர்கள் பாய்ந்து சென்று கைது செய்ததாக லூஸிங்டனிடம் ஒருவித நடிப்பும் கொண்டவனாக விளங்கினான் புதுக்கோட்டை மன்னன்.
21. தமிழன் புதுக்கோட்டை மன்னனின் இழிசெயல் யாது?
ஒரு மகத்தான வீரனைக் களத்தில் நேருக்கு நேர் நின்று வெற்றிகொள்ள இயலாத கோழைகள் தங்களின் கயமைத்தனத்தின் துணையினால், வீரனை வீழத்தினர்.
இத்தகைய இழி செயலுக்குத் தானும் உடந்தையாக விளங்கினான் புதுக்கோட்டை மன்னன்.
பாடம் 14 தூக்குக் கயிற்றையும் துரும்பெனக் கருதி….
வினாக்கள்:
1. நடிகர் சிவாஜிகணேசன் என்ன செய்தார்?
நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தபோது, கட்டபொம்மனாகவே மாறி காண்பவர் அனைவரையும் தன் இறுதிக் காட்சியில் கண்கலங்க வைத்தார்.
2. கைதிகளாகக் கொண்டுவரப்பட்டவர்களைப் பற்றி பானர்மேன் தன் மன ஏட்டில் பதிவுசெய்து எழுதியுள்ள செய்திகள் யாவை?
கட்டபொம்மனுடன் அவனுடைய உறவினர்கள் ஆறுபேரைக் கைது செய்து கொண்டுவந்தபோது, கட்டபொம்மன் பற்றிய அரசாங்க உத்திரவுகளை அந்த இடம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகவும் பவித்திரமான முறையில், மக்கள் மனதில் பதியும் வகையில் கூறுவதற்காகவே அம்மக்களை அழைத்ததாகக் கூறினான் பானர்மேன்.
3. பானர்மேன் அனைத்துப் பாளையக்காரர்களையும் எதற்காக அழைத்தான்?
தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அரசாங்கத்தின் தீர்ப்பை கட்டபொம்மனிடம் அறிவிக்கும் பொழுது, அனைத்துப் பாளையக்காரர்களும் அங்கு இருந்தால் நலமாக இருக்கும் என்பதனை அறிந்து அனைத்துப் பாளையக் காரர்களையும் அழைத்திருப்பதாக பானர்மேன் கூறினான்.
4. பானர்மேன் தன்னால் வரவழைக்கப்பட்ட பாளையக்காரர்களிடம் கூறிய செய்திகள் யாவை?
நாட்டில் பல தீமைகள் விளையும் விதமாக நடந்துகொண்டவன் கட்டபொம்மன்.
அவன் தனது அவமரியாதை நடத்தை மூலம் அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறியிருக்;கிறான் என்பபதை அறிவிக்கவும்,
அது தொடர்பாக அரசாங்கம் பிறப்பித்த உத்தரவைத் தன்னுடைய ஆணைக்குப் பணிந்து, கட்டபொம்மனை அழைத்துவரச் செய்வதற்கும்,
பாளையக் காரர்களின் கடமையை உணர்த்துவதற்கும்,
தன்னால் அனுப்பப்பட்ட படைகளை எதிர்த்துத் துணிகரமாகச் செயல்பட்ட கட்டபொம்மனுக்கு, அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை அறிவிக்கும் போது அனைத்துப் பாளையக் காரர்களும் உடனிருக்க வேண்டும் என்பதற்காகவும்,
பானர்மேன் அனைத்துப் பாளையக்காரர்களை அழைத்து மேற்கூறிய செய்திகளை விவரித்தான்.
5. ‘ஏ’குறி கடுதாசி குறித்து எழுதுக.
‘ஏ’ குறியீடு கடுதாசி என்பது,
மேஜர் ஜான் பானர்மேன்,
மேஜர் ராபார்ட் டூரிங்கால்,
தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்
மற்றும் ஜார்ஜ் ஹீயூக் போலும் கையெழுத்திடப்பட்ட கடுதாசி ஆகும்.
6. ‘ஏ’குறி கடுதாசி செய்திகளை சுருக்கி வரைக.
‘ஏ’ குறியீட்டு கடுதாசியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளாவன:
கட்டபொம்மன் தான் வரிசெலுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்டதையும்,
அல்லது மறுக்காமல் இருப்பதையும்,
ஆயுதப்படைவீரருடன் தான் லூஸிங்டனை சந்திக்க இயலும் என்று கூறியதையும்,
அரசாங்க உத்தரவை விளக்க தான் அழைப்பைப் பெற்றிருந்தும,; அந்த செப்டம்பர் 4ஆம் நாளை கரிநாள் என்று கூறித் தன்னைக் காண மறுத்ததையும்,
ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சிவகிரிப் பாளையக் காரர்களுக்கு எதிராகப் பகிரங்கமாகக் கலகம் செய்த அவர்கள் மகன் மற்றும் மாப்பிள்ளையுடன்,
மேலும் கலகம் செய்வதன் பொருட்டு,
தன் உறவினர் ஒருவர் தலைமையில்,
1000 பேர் வரையிலான ஆயுதம் தரித்த படையை அனுப்பியதையும்,
செப்டம்பர் 5ல் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு அருகில் தன்னைக் காண அழைத்ததை அவர் கீழ் படியாமல் மறுத்ததையும்,
அரசாங்கத்திற்குப் பணியுமாறு நிர்பந்திப்பதற்காக அனுப்பப்பட்ட கம்பெனி சிப்பாய்களைக் கட்டபொம்மனின் படையினர் சுட்டு வீழ்த்தியதையும்,
பானர்மேன் அக்கடுதாசியில் குறிப்பிட்டிருந்தான்.
7. ‘ஏ’குறியீட்டுக் கடுதாசி செய்திகள் கூறப்பட்டபின் பானர்மேன் என்ன செய்தான்?
‘ஏ’குறியீட்டுக் கடுதாசி செய்திகள் பாளையக்காரர்களிடம் கூறப்பட்டபின் பானர்மேன் அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கட்டபொம்மனிடம் கூறியவுடன், கம்பெனி அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அவருக்கு மரணதண்டனை விதிக்கும் தீர்மானத்தை அறிவித்தான்.
8. கட்டபொம்மனைத் தூக்கிலிட அழைத்துச் செல்கையில் திகிலடைந்து பார்த்த பாளையக்காரர்களிடம் பானர்மேன் கூறியது யாது?
கட்டபொம்மனைத் தூக்கிலிட அழைத்துச் செல்கையில் திகிலடைந்து பார்த்த பாளையக்காரர்களிடம் பானர்மேன்,
கட்டபொம்மன் கம்பெனியின் அதிகாரத்திற்கு மீண்டும் மீண்டும் அவமானம் செய்ததாலும்,
யாராலும் அலட்சியப்படுத்த முடியாத அரசாங்கத்தின் காரணப் போக்கு மற்றும் நீதி ஆகியவற்றை பலமுறை கண்டிருந்தும் வெளிப்படையாக கலகமும் குற்றமும் புரிந்ததாலும்,
கட்டபொம்மனுக்குக் கடுமையான தண்டனை விதிக்கும்படி அரசாங்கம் நிர்பந்தித்துள்ளது என்பதையும்,
கம்பெனியின் அதிகாரத்திற்கு யார் கீழ்ப்பணிய மறுத்தாலும்,
அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கடமையாகக் கருதாமல் அவமதித்தாலும்,
அவர்களுடைய அந்தஸ்தோ, வாழ்க்கை நிலையோ தண்டனை பெறுவதிலிருந்து தப்ப முடியாது என்பதையும் அறிவித்தான்.
9. கட்டபொம்மன் விசாரணையின் போது எவ்வாறு இருந்தார்?
கட்டபொம்மனின் போக்கும், நடத்தையும், விசாரணையின் போது அஞ்;சாநெஞ்சத்துடனும், ஏளனத்துடனும் காணப்பட்டது.
10. தூக்கிலிடப்படும் பகுதிக்குச் செல்கையில் கட்டபொம்மன் எவ்வாறு சென்றார்?
தூக்கிலிடப்படும் பகுதிக்குச் செல்கையில் கட்டபொம்மன், இம்முயற்சிக்குத் தீவிரமாக உறுதுணைபுரிந்த எட்டயபும் பாளையக்காரனையும், சிவகிரிப் பாளையக்காரனையும், மீண்டும் மீண்டும் சீற்றத்தோடு பார்த்ததோடன்றி,
உறுதியுடனும், வீரத்துடனும் சென்றதோடு,
தனது வலது மற்றும் இடப்புறங்களிலுள்ள பாளையக்காரர்களை ஏளனத்துடனும் நிந்தனையுடனும்; உற்றுநோக்கிக்கொண்டே சென்றார்.
11. தூக்குக் கயிற்றையும் துரும்பென மதித்த கட்டபொம்மனின் மனவலிமையை விளக்குக.
தூக்கிலிடப்படும் அவ்வேளையிலும், தன் ஊமைச் சகோதரனைப் பற்றி மட்டும் கவலைக்கொண்டும்,
தூக்கிலிடப்படும் அம்மரத்தினடியில் சென்றபோது தன்கோட்டையை விட்டு வெளியேறியததற்கு வருத்தம் தெரிவித்ததோடன்றி,
அங்கேயே அதற்குப் பாதுகாப்பு நல்க தான் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று, கட்டபொம்மன் எண்ணியதிலிருந்து,
அவர் தூக்குக் கயிற்றையும் துச்சமாகக் கருதுபவர் என்ற அவரது மனவலிமையை அறியலாம்.
12. கைதியாக இருந்த கட்டபொம்மன் உரக்கக் கூறியது யாது
பதினோறு நாட்கள் சிறையில் வைத்தபின், பானர்மேன் கட்டபொம்மனிடம் தங்களுக்கு வரிசெலுத்த ஒத்துக்கொண்டால் விடுதலை செய்வதாகக் கூறியும்,
மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகவே வாழலாம் என்றும் ஆசைவார்த்தைக் கூறியதற்கு,
‘வரிகட்டி உயிர் வாழ்வதைவிட உயிர்விடுவதே உயர்ந்தது’ என்று உரக்கக் கூறினார்.
13. யார் யார் முன்னிலையில் எப்பொழுது விசாரணை நடந்தது?
1799 அக்டோபர் 16ஆம் நாள்
டர்னர் தலைமையில் குதிரைப்படைகள்;,
மற்றும் டல்லாசு தலைமையில் காலாட்படைகள்
ஆகியோர் முன்னிலையில் விசாரணைத் துவங்கியது.
அப்பொழுது அப்பாவி மக்கள் எல்லாம் விழிகளை நினைத்தபடி காணப்பட்டனர்.
14. பானர்மேன் கட்டபொம்மன் மீது சுமர்த்திய குற்றங்கள் யாவை?
வரி செலுத்த மறுத்தது,
ஜாக்ஸன் துரையைச் சந்தித்தப்போது ஆணவமாக நடந்துகொண்டது,
லெப்டினென்ட் கிளார்க்கை வெட்டிக் கொன்றது,
கலெக்டர் லூஸிங்டன்னை சந்திக்காமல் நாளைக் கடத்தியது,
பணிந்து போகாமல் எதிர்த்து நின்றது,
உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவற்றை விளைவித்தது
போன்றவையாகும்.
15. குற்றம் சுமத்தப்பட்ட கட்டபொம்மன் யாது கூறினார்?
தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் தனக்குக் குற்றமாகப் படவில்லையென்றும்,
எங்கிருந்தோ வந்த வெள்ளையருக்கு வரிசெலுத்தாமல் இருந்தது தங்கள் மண்ணின் மகத்துவம் என்றும்,
தன்னிடம் நடத்தும் கண்துடைப்பு விசாரணையை நிறுத்தித் தனக்குத் தர நினைக்கும் தண்டனையை விரைவில் தருமாறும்
கட்டபொம்மன் தன்மீது அடுக்கடுக்காகக் குற்றங்களைச் சுமத்திய பானர்மேனிடம் கூறி, வாதியாகிய அவரே நீதிபதியாகி தீர்ப்பு வழங்கினார்.
16. கட்டபொம்மனின் இறுதிக் காட்சியைப் பற்றி விவரி.
• 1799 அக்டோபர் 16 அன்று கயத்தாறு என்ற இடத்தில், கட்டபொம்மனைத் தூக்கிலிடுவதற்காக தேர்ந்தெடுத்திருந்த கட்டைப் புளிய மரத்திற்கு அருகில் அவரை அழைத்துச் சென்றனர்.
• ஒருவன் மரத்திலேறி ஒரு கிளையில் தூக்குக் கயிற்றைத் தொங்கவிட்டான்.
• பிரிதொருவன் தூக்குக் கயிற்றிற்கு அருகில் ஒரு ஏணியை நிறுத்தினான்.
• கட்டைப் புளியமரத்தின் அருகில் சென்றதும் கட்டபொம்மன் ஏணியில் ஏறி, தூக்குக் கயிற்றினைத் தானாகவே தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஏணியை எட்டி உதைத்தார்.
• பின்னர் சுருக்குக் கயிறு அவரின் கழுத்தை இறுக்க, சிறிது நேரத்தில் அவர் உடம்பை விட்டு உயிர்ப்பறவை பிரிந்து சென்றது.
17. இறந்த கட்டபொம்மனை கொடியவன் பானர்மேன் யாது செய்தான்?
கட்டபொம்மனின் உயிர் பிரிந்தபோதும் அவரைப் பழிவாங்கவேண்டும் என்ற உணர்வினைக் கொண்ட பானர்மேன், அனைவரும் அக்காட்சியைக் காணவேண்டும் என்ற கொடிய எண்ணத்தில், கட்டைப் புளியமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அவரது உயிரற்ற உடலை மேலும் இரண்டு மணிநேரம் தொங்கவிட்டான்.
18. கட்டபொம்மனின் இறுதிச் சடங்கு எவ்வாறு நிகழ்ந்தது?
கட்டபொம்மனின் இளவல் ஊமைத்துரை இறுதிச் சடங்குகளைச் செய்ய தீ நாக்குகள் அவரின் உடம்பினைத் தீண்டி அழுதது.
19. கட்டபொம்மனின் மறைவிற்குப் பிறகு வெள்ளையர் படை உடனே மேற்கொண்ட செயலகள்; யாது?
கட்டபொம்மனின் மறைவிற்குப் பிறகு வெள்ளையர் படை உடனே மேற்கொண்ட செயல்கள்:
திருநெல்வேலியில் இருந்த 42 கோட்டைகளை இடித்துத் தள்ளி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தரைமட்டமாக்கினர்.
20. தூரோகிகளுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சலுகைகளையும் பரிசுகளையும் குறித்து எழுதுக.
கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னனை இனிமேல் அவரோ அவரது வாரிசுதாரரோ எப்பொழுதும் வரிசெலுத்தவேண்டியதில்லை என்றும் அவர்களே மன்னர்களாகத் திகழலாம் என்றும் அறிவித்தனர்.
ஆரம்பத்திலிருந்தே கட்டபொம்மனைக் காட்டிக் கொடுக்க உறுதுணை புரிந்த எட்டயபுர மன்னன் எட்டப்பநாயக்கனுக்கு, ‘சிவஞானபுரம்’ என்ற கிராமத்தை இனாமாக்கினர்.
மேலும் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்திற்குச் சொந்தமான 79 கிராமங்களை எட்டயபுரம் பாளையத்துடன் இணைத்தனர்.
21. வீரத்திற்கு மரணமில்லை. எவ்வாறு?
• கட்டபொம்மன் பிறந்தது 03.01.1760.
• அவர் விடுதலைக்காக வீரமுழக்கமிட்டு மரணத்தைத் தழுவியது 16.10.1799.
• அவர் இம் மண்ணில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே.
• இன்னும் பலநூறு ஆண்டுகள் ஆனாலும் கூட எங்கெல்லாம் விடுதலை முழக்கம் உச்சரிக்கப் படுகின்றதோ அங்கெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைக்கப்படுவார் என்பதால் வீரத்திற்கு மரணமில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றிக்கனியை இனிதாய் எட்ட என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றி
தொகுத்து வழங்கியவர் திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி தமிழாசிரியை
எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில் தமிழ்
கைப்பேசி எண் 98432 97197.