ஆசைதான் பேராசை இல்லை
நீ என்னை கெஞ்சவேண்டும் என்ற
பேராசை இல்லை எனக்கு
நான் உன்னை கொஞ்சவேண்டும் என்ற
ஆசை தான் எனக்கு
நீ என்னை தாங்கவேண்டும் என்ற
பேராசை இல்லை எனக்கு
நான் உன்னையணைத்து தூங்கவேண்டும் என்ற
ஆசை தான் எனக்கு
இறக்காமல் இருக்க வேண்டும் என்ற
பேராசை இல்லை எனக்கு
இருக்கும் வரை உன்னுடன் இருக்கவேண்டும் என்ற
ஆசை தான் எனக்கு
என் ஆசையை நிறைவேற்றுவாயா? ஆடவர் மயங்கும்
அதிரூப சுந்தரியே பதில்சொல்...