பார்வை பலம்

நடுங்கியபடி நடந்து கொண்டிருந்தேன்
அவள் என்னை கடந்து கொண்டிருந்தாள்
இருள் முகில் திறக்கையில்
ஈரக் காற்று மிதக்கையில்....

இடிமின்னலிலும் இயன்றவரை நடந்தேன்..

மழை மணத்தில் மல்லிகை மணம்..
மழை ஈரத்திலும் மருதாணி கரம்..

அவள் பார்வை என்மீது..
அரைவினாடி அன்னாந்து பார்த்தேன்

குளிரில் சூட்டை பற்றவைத்து நகர்ந்தாள்..

அடேங்கப்பா...!

அவள் பார்வைக்கித்தனை பலமா...?

வெட்கத்தில் தலைகுணிந்து வேகநடை அவளுக்கு..
பாதி நனைந்து மறுபாதி உலர்ந்து
பேருந்தில் ஏறினாள்..
அவள்பின் நானும் ஏறினேன்..
காதல்பாடல் பேருந்தில்
அருகருகில் இருக்கை இருவருக்கு..
மழை இதமாக அடிக்க
மன இதயம் படபடவென்று துடிக்க
அமர்வு எனக்கு..
அவளோ மௌனமாக..
முத்தம் வேண்டுமா என்றாள்..
முகத்தை துடைத்துக்கொண்டு தலையசைத்தேன்...
ஒரு புன்னகைத் துளி தந்தாள்..
ஒரு அடி முன்வந்தாள்...
ஜன்னல் திறந்துகொண்டு சாரல் அடித்தது...
ஜலம் முகத்தில் தவழ்ந்தோடியது..
கண்விழிக்கையில் கற்பில் சுமந்தவள் நின்றிருந்தாள்...
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (7-Apr-20, 11:32 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : parvai palam
பார்வை : 180

மேலே