கேட்டுப் பெறாதே
காட்டுக் கனுப்பிடக் காத்துக் கிடக்குது
நாட்டுக்கு நாடொரு நோய்.
*
நீட்டிப் பெறுகிற நேசப் பொருளிலும்
வாட்டுங் கிருமிக்கு வாய்.
*
வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைநீ
நாட்டுக் கடங்குதல் நன்று
*
கூட்டுக் கிளிபோல் குறுகிய வட்டத்துள்
பாட்டுப் படித்திடப் பார்.
*
பூட்டிக் கதவடை பொல்லாத நோயினைக்
கேட்டுப் பெறுவது கேடு.
*