உலகத்தில் முதன்மையாகலாம்

பிரபஞ்சத்தின் போக்கில்
கரடுமுரடான பாதையில்
பயணிக்கும் வாழ்க்கையில்,

வசந்தத்தின் சுகந்தம் நுகர்ந்து
தென்றலின் சுகத்தை உணரலாம் !
பூபாளத்தின் பரவசம் கொண்டு
இன்பத்தின் உச்சம் காணலாம் !
வறுமையின் எல்லை அடைந்து
துன்பத்தின் ஆழம் அறியலாம் !

நவீனத்தின் நடைமுறையை
நன்குணர்ந்த நாமெல்லாம்
நம்வாழ்வு நலம்பெற ,

சாதிமதம் களைந்து ஒன்றானால்
சமதத்துவ சமூகமாக வாழலாம் !
பகுத்தறிவு சிந்தை ஆயுதமானால்
பகல்கனவும் பலிக்கச் செய்திடலாம் !
அமைதி நிலைத்த பாரதமானால்
அகில உலகத்தில் முதன்மையாகலாம் !

பழனி குமார்
08.04.2020

எழுதியவர் : பழனி குமார் (8-Apr-20, 5:09 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 200

மேலே