கடலின் ஏக்கம்

அதிகாலைப்பொழுதிலும் அந்திமாலையிலும்
தனிமையில்
என்மணாலனுடன்
நடனமாடி கழிக்கிறேன் !!

திமிங்கலங்களும் சுறாக்களும்
சாளைமீன்களும் இறால்களும்
கடற்பாம்புகளும் அச்சமின்றி
கடலாடுகின்றன !!

கரைக்கடலும் அலைக்கடலும்
அண்மைக்கடலும் ஆழ்கடலும்
தூதனுப்பாமலே
உறவாடி மகிழ்கின்றன

அமிலங்களும் ராசாயனமுமின்றி
புதிதாயுணர்க்கிறேன் நான்

என் சகோரதிகளான வாடைக்காற்றும்,
என் அண்ணனான வளிமண்டலமும்
என்னைத்தாங்கி நிற்கும் என்னுடன்பிறந்தவளும்
ஆனந்தமாய் இருக்கிறார்கள்!!

இருந்தும் எனக்கொரு வருத்தம்

கரைக்கடலில் நின்று என்னுடன் விளையாடிய மழலைமொழிகளை கேட்க தவிக்கின்றேன்?!!

ஆயிரமாயிரம் காதல்கவிகேட்ட
என்செவிகள்
கவியின்றி உறங்கமறுக்கின்றன !!

அள்ளிக்கொடுத்த தாயன்றோ நான்
என்மக்களை பார்க்க
தவமிருக்கிறேன்
இயல்புவாழ்க்கையை
எதிர்பார்த்து !!!

இப்படிக்கு
கடல்

எழுதியவர் : கோப்பெருந்தேவி (10-Apr-20, 4:26 pm)
பார்வை : 160

மேலே