என்னவள்

அசைந்து அசைந்து அன்னமாய் நடந்து வந்தாள்
அசைவில் கூடவே மெல்லிய ஓசை இசைக்கவே
அசைவில் அவள் கால் விரலின் மெட்டி இசைத்த ஒலியே அது
துள்ளித் துள்ளி வந்தாள் அவள் துள்ளி மான்போல
திரும்பிப் பார்க்கையிலே தோகை மயிலென ஆடி வந்தாள் அவள்
அந்த ஆட்டத்தின் அசைவில் ;தத் திதிமி தத் ததிமி என்ற
தாள ஓசை வந்தது என்னவள் அவள் பாத கொலுசுலிருந்து
வாரிய அடர்மேகக் கூந்தலில் அவள் சூடிய மல்லியும்
வானளவு மெல்லிய மணம் பரப்ப அந்திசாய் வேளையிதில்
அவளழகில் அவள் அசைவில் அந்த இசையில் மணத்தில்
பரதமும் இசையும் பொங்கும் அங்க அழகிலும் என்னவள்
என்னை தேவலோகத்திற்கே அழைத்துச்சென்றாள்
சிங்காரி அவள் வாய்திறந்து அன்பே என்றாள்
என் மனதில் காதல் நிறைத்தாள் தமிழ்ப்பண்ணிசையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Apr-20, 5:18 pm)
Tanglish : ennaval
பார்வை : 298

மேலே