தொடத் தொட மலர்ந்ததென்ன
தொடத் தொட மலர்ந்ததென்ன....?
அனல்படர் பனிமலை உன் தரிசனம் காண..
தவமாய் கிடந்த ஒற்றை மலர்...
இலைபடர் பனித்துளி நீராடி
வானிடை வில்லின் வர்ணம் சூடி
தேனடை ரசத்தை அதரம் பூசி
வாலிப வசந்தம் இதயம் ஏந்தி
அடுமனை தணலில் தகித்திட விழைந்தது...
அபின் நுகர் அறிமுகம் பேசி
தழல்தணி இதழிடை உரசி
ஆவிதழுவிய அன்பின் பகீரதனே...
உன் நேசக்கரம்
தொடத் தொட மலர்ந்தது
ஆடை துறந்த ஆதாம் ஏவாளின்
ஆத்ம ஆலிங்கன உட்சவக் காதலே!