அகதி
காட்டுத் தீயில் பொசுங்கியக் காதலை
வானம்பாடி எண்ணித்
தனிமையில்....
கதறி கதறி அழுது புலம்பி
ஒற்றை மரக்கிளையில் ஒதுங்கியது....
அறைந்தக் கோடறியால் முறிந்து கிளை விழ....
வலுவிழந்த சிறகுடன் ஈனக் குரலில்...
அபயம் வேண்டி ஆகாயம் எங்கும்...
அங்கும் இங்குமாய் பறக்கிறது...