நாளையும் விடியல் உண்டு

நினைவு நாடாக்களின்
சுருள்களை நீவி நிமிர்த்தி....
கனவு ஓட்டை பெயர்த்து
உடைந்த சில்லுகளைப் பொறுக்கி...
கடந்த காயங்களை கிண்டிக் கிள்ளி
தோல்விப் புண்களை ரணமாக்காதே.....
எழுந்து நில்! தொடர்ந்து செல்!
நாளையும் விடியல் உண்டு!

எழுதியவர் : வை.அமுதா (11-Apr-20, 5:38 pm)
பார்வை : 111

மேலே