வண்ணப் பாடல்

எழுசீர் வண்ண விருத்தம் !!
*************************************
தய்ய தான தய்ய தான
தய்ய தான தானனா

அய்ய னோடு வெள்ளை வாசி
அல்லி லேயு லாவுமே !
உய்யு மாறு நல்ல சேதி
யுள்ள வாறு கூறுமே !
மெய்ய ரோடு செய்யு வேலை
வெல்லு(ம்) பாதை யாகுமே !
பெய்யு வான வள்ள லோடு
பிள்ளை யாக மாறுமே !

வாசி - குதிரை

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-20, 1:17 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : vannap paadal
பார்வை : 23

மேலே