இடியிடித்திட
இடியிடித்திட வுளமசைந்திட எழுமொலியதன் சத்தம்
வடிவழகிய முகில்குளிர்ந்திட வளிவருடிடும் சித்தம்
செடிகொடிகளின் மதுமலர்களும் சிலிர்த்திசைத்திடும் சந்தம்
சடசடவென மழைத்துளிகளும் தரைக்களித்திடும் முத்தம் !!
அடடடவெனப் பெருவியப்பினில் அகமகிழ்ந்திட நனைந்தேன்
படபடவெனப் பெயல்பொழிந்திடப் பரவசத்தினில் பனித்தேன்
தொடத்தொடத்தொடர்ந் திடும்கொரனவும் தொலைந்திடுமென நினைத்தேன்
சுடச்சுடவெழும் கவிதையில்மனம் சுகம்சுகமெனத் திளைத்தேன் !!
சியாமளா ராஜசேகர்

