இயற்கை

ரோசா பூச்செடியில் முள்
வந்ததேன் வைத்து யாரோ
எப்படி வந்தது .......

முள்ளம்பன்றி ..... இதற்கு
அம்புபோன்ற கூறிய முட்கள்
முளைத்தது எவ்வாறு
முளைத்ததேன் யார் தந்தது

தோகை மயிலுக்கு
நீல நீண்ட அழகிய கழுத்தும்
'மயில் நீல' வண்ண சிறகுகள்.....
தந்தது யார்....அதை ஆட வைத்து யாரோ
மழைத்தரும் மேகம் கண்டு

மனிதன்.......
படைத்தவனே இல்லை என்று
சொல்லும் அளவிற்கு இவனை சிந்திக்கவைத்தது யார்
இவனுக்கு மட்டுமே சிரிப்பும் தந்தது யார்

இவை எல்லாம் தானாகவே வந்ததென்றால்
மனிதனே உன் படைப்பு என்று
நீ கூறிக்கொள்ளும் ஓடும் வாகனத்தில்
அதை ஓட வைக்க .... இது இங்குதான்
இருக்க வேண்டுமென்று சிந்தித்து
ஸ்டேரிங் , பிரெய்க் ஆக்சலேரட்டோர்
என்று படைத்தது நீதான் என்றால்
உன்னை பேசவைத்து பாடவைத்து
சிரிக்க வைத்து சிந்திக்கவைத்து .....
யார் யார் ....... யாருமில்லையா...?
போடாப்போ தாந்தோணி.....
தாந்தோணி ..... தானாக தோன்றியவன்
உன்னை என்னை உலகை அண்டங்கள்
என்று இவை எல்லாம் படைத்து அழித்து
படைப்பவன்........ அவன் ஒருவனே
அந்த தான்றோனி,,,,,,, நீயல்ல
நீ அறிவது எப்போது?

வைக்க ,,,,, இது இங்குதான்
இருக்க வேண்டும் வண்டி ஓடுவதற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Apr-20, 8:59 pm)
Tanglish : iyarkai
பார்வை : 237

மேலே