நிலா நிலா
நிலவே வெண்ணிலவே உன்னைப்
பார்க்க பார்க்க என் மனம்
உன்னைப் பார்த்து ஆர்ப்பரிக்கும்
கடலலைப்போல் ஆகுதே ஆசைப்பொங்க
கவிஞன் என் கற்பனையும் வற்றா சுனையாகுதே
தாய் மடியில் படுத்திருக்கும் குழந்தைக்கு
நீ நிலா மாமா, காதலர்க்கு தேன் நிலா
தனிமையில் வாடும் காதலிக்கு அவள்
காதலனுக்கு தூதேந்தி செல்லும் தூதுவன் நீ
அல்லிக்கு அவள் மனமுகந்த காதலன் நீ
உன் முகம் காணாது அவள் மலர்வதும் உண்டோ
அவளும் அவனும் அதுவுமாய் நீ ஓர் தெய்வமே
விஞானிகள் உன்னை கற்களாலான ஓர் உபகிரகம்
என்று கூறினாலும் .... கவிஞன் என்னுள்ளத்தில்
என்றுமே நீ குளிர்தரும் இனிய தண்ணிலா வான் நிலா
என்னருமைக் காதலியே வெண் நிலா