கொரோனா

ஓய்வில்லாமல்
சுற்றி கொண்டிருந்த
உலகத்தை...இந்த பூமியை..
ஓங்கி அடித்து
உட்காரவைத்த - கொரோனாவே !

அறிவியலால்
அனைத்தையும்,
அண்டத்தையும்,
ஆட்டிப்படைப்போம் - என சூளுரைத்த
அறிஞர்களை - எனை முடிந்தால்
அறிந்து - அழித்துபார் - என
அறைகூவல் விடும் - கொரோனாவே !!

கடவுளை
கண்ட இடத்தில் தேடித்திரிந்த
கயவர்களுக்கு ...
மனிதம் உள்ள - அனைவரும்
கடவுளே என்று
உணர்த்திய - கொரோனாவே !!!

மனிதத்தில் ..
சாதி,மதம்,இனம்
என்ற வேறுபாடில்லாமல்
அனைவரையும்
அலற வைத்த - கொரோனாவே !!

மரணம் கண்டு அஞ்சாத
மனிதமுள்ள
மருத்துவர்கள் - உனை விரட்ட
மன்றாடி, ஓடி ! ஓடி !!
ஓய்ந்துவிட்டனர் ...
மருந்தில்லா
கொடிய நோயே ...

இனி நாங்கள் ..
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என - கணியன் பூங்குன்றன் திசையில் ..
அன்பின் வழியது உயிர்நிலை
என்ற வள்ளுவனின் வழியில்
அன்பென்ற - அறிவியல் பாதையில் ..
வாழ தொடங்கிவிட்டோம் ...

நம்பிக்கைதான் - எங்களின் வாழ்க்கை
மரணமும் - மன்றாடி
தோற்றுப்போகும் ...
எங்களின் - மன-தைரியத்துக்குமுன்னே


அன்பு மட்டுமே - இருக்குமிடத்தில்
அரக்கனுக்கு இங்கே இடமில்லை ...
கொரோனாவே
ஓடி விடு...
இவ்வுலகை விட்டே ஓடிவிடு

இது
நண்பர்களுக்கான
நம்பிக்கை வரிகள் மட்டுமே
நாளை என்பதுள்ளவரை
நட்பு இருக்கும் ..
கதிர்

எழுதியவர் : KKathir (11-Apr-20, 12:51 pm)
சேர்த்தது : KKathir
பார்வை : 59

மேலே