கண்மணியே

வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!

எழுதியவர் : M. Chermalatha (13-Apr-20, 7:54 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : kanmaniye
பார்வை : 172

மேலே