ஏமாறும் சமூகம்
பசி,பட்டினி,சோறு...
அதில்,அரசியல்வியாதிகள் ஜோரு...
ஏழை மீது,ஏறும் விலைவாசி...
அதை ஏற்றம் செய்யும்,ஒவ்வொருவரும் ஒரு தேசி...
காலை நேர தேநீர்க்கு,வழியில்லை...
காலங்காலமாக,காத்து கிடக்கும்,வழக்குக்கு,தீர்ப்பு இல்லை...
நாட்டில் வேலையில்லா,திண்டாட்டம்...
ஆனால்,வெள்ளை வேட்டி,இங்கே கொண்டாட்டம்...
அம்மா என்று,பிச்சை எடுக்கும் கூட்டம்...
அதன் பின்னால்,ஓடுது சட்டம்...
வயல்வெளி தேடும்,கிழவன்...
அவனை,வதைத்தவனெல்லாம் தலைவன்...
கலாச்சாரம்,மறந்த இளசுகள்...
அதை,நினைவுபடுத்தினால்,
அனைவரும் பெருசுகள்...
சாதி,மதம் வேண்டாமொறு,சங்கம்...
பின்னே,ஏன் சேர்க்கையில்,அதற்கு ஒரு அங்கம்...
கல்வி,என்பது நவரசம்...
அதை கொடுத்தான்,அன்று இலவசம்...
மருத்துவ,பொறியியல் கல்லூரிகளுக்கு,அரசு நிவாரணம்...
உள்ளே சென்று பார்த்தால், அனைத்தும் நிர்வாணம்...
கல்வி கொடுப்பவன் எல்லாம்,கழுத்து அறுக்கிறான்...
கலைந்து செல்லும்,கனவுகளை சிரித்து பார்க்கிறான்...