மகனின் இரங்கல்

சூரியன் போலே,கிழக்கே உதித்தாய்...
சொல்லாமல் நீயும்,மேற்கே மறைந்தாய்...
சூரியன் கூட,மீண்டும் எழுமே...
தந்தை நீயோ,எங்கே எழுவாய்...
வெயில்,மழை என்று, என்னை காத்தாய்...
உன்னை காக்க,பொருள் ஒன்று இல்லையே...
என்னை சிரிப்பூட்ட,மழழை ஆனாய் அன்று...
உன்னை காண,தவமாய் தவிக்கிறோம்,இன்று...
என்னை சக்தி கொடுத்து,அழைத்தாயே ...
உன்னை மீட்க,என்ன கொடுப்பேனோ...
நீ போன பாதையில்,வந்து பார்க்கிறேன் திரும்பவில்லையே...
நீ போன தேசத்தில்,வந்து நிற்கிறேன், காணவில்லையே...
ஊர் மக்கள்,வந்து சொன்னது,உண்மை என,
உறங்க சென்று விட்டாயோ...
எழுப்ப வழி தெரிந்தால்,செய்திடுவேன்...
எங்கே,என தெரிந்தால்,வந்திடுவேன்...

எழுதியவர் : கதா (16-Apr-20, 7:13 am)
சேர்த்தது : கதா
பார்வை : 174

மேலே