புத்தாண்டு வாழ்த்து
சார்வரி வருடப்பிறப்பு
சர்வாதிகார கொரோனாவை அழிக்கும் பொறுப்பு!
சர்வதொழில் வளர்த்து பாரினை
காக்கும் பொறுப்பு!
சரிந்து வீழும் பொருளாதாரத்தை
தூக்கி நிறுத்தும் பொறுப்பு!
சர்வ உலகையும் அமைதி
இடமாக ஆக்கும் பொறுப்பு!
சர்வ பொறுப்பினையும் ஏற்று
பிறக்கிறது சார்வரி வருடப்பிறப்பு!
சர்வ மானிடர் வாழ்வும் காணட்டும் இவ்வாண்டில் சிறப்பு!