வினோத வசந்தம்
பூக்களெல்லாம் மலர்ந்திருக்கும் இளவேனில் காலம்
--------பூப்பறிக்க ஆளில்லாமல் போனதே
பூப்பறித்து விற்கும் வீதியெல்லாம் வெறிச்சோடி
--------கொரோனா உலவும் வீதியானதே
நோய்க்கிருமி தாக்கி அழிக்கும் அச்சத்தில்
--------ஊரெல்லாம் உள்ளே அடங்கிக் கிடக்குதே
நாய்களெல்லாம் பசி பட்டினியில் குரைக்க முடியாமல்
---------வீதியில் உலவும் வினோத நாட்களை பார் !