காதலின் கதறல்💔💔
காதலின் கதறல் 💔💔
நீ ராணியாக இருந்தால் உன் மேல் தோல் எடுத்து இருப்பேன் என் நெஞ்சில் காதலெனும் நஞ்சை விதைத்தற்காக...💔💔
மருத்துவத்தின் தந்தையிடம் கேட்டேன் காதலெனும் வலிக்கு மருந்து இருக்கிறதா என்று அவர் இல்லை என்று சொல்லிவிட்டார்.....💔💔
காதல் எனும் பெயரில் என்னை கல்லறை வரை அழைத்து வந்தது தெரியாமல் இன்னமும் உன்னை காதலித்துக் கொண்டிருக்கிறேன் கிறுக்கன் போல்......💔💔
இருட்டறை என்னும் அம்மாவின் கருவறையில் பத்து மாதம் சொர்க்கம் போல் இருந்தேன் ஆனால் என் வீட்டு இருட்டு அறை எனும் நரகத்தில் என்னை தனிமைப்படுத்தி விட்டது உன் காதல்.....💔💔
எதற்கு அழுகிறேன் என்று தெரியாமல் பைத்தியக்காரன் போல அழ விட்டது உன் காதல்...💔💔
கடவுளோடு பாசமாக உரையாடிய என்னை அவரோடு முழுநேரமும் உலர வைத்து விட்டது உன் காதல்...💔💔
உன் வாசம் உள்ள சட்டையை அணியும்போது அட கருணையில்லாத கடவுளே என் உயிரை எடுத்துக்கொள் என்று கதறினேன்...💔💔
என் காதல் எனும் கனவுகள் எல்லாம் கலைந்து வாழ்க்கையே கண்ணீரில் மூழ்கியது..💔💔
உன் யோசனையால் யோவ் எமதர்மா உனக்கு பிடிக்கும் என்னை பிடிக்கவில்லையா என்று புலம்ப ஆரம்பித்தேன்.....💔💔
உன் காதல் பரிசுகள் எல்லாம் நான் பைத்தியக்காரன் என்று என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டது.......💔💔
நீ கொடுத்த முத்தங்கள் எல்லாம் முட்களை போல குத்த தொடங்கிவிட்டது.......💔💔
நீ கட்டி அணைத்ததை நினைத்து கருணை தாயின் மடியை தேடுகிறேன் கதறி அழுவதற்கு.....💔💔
உன் பாசமான பேச்சு கேட்காத காதுகள் எல்லாம் செவுடு ஆகி விட்டது......💔💔
உன்னை காணாத கண்கள் எல்லாம் கண்ணீர் இன்றி கடல்நீரை கடன் வாங்கத் தொடங்கி விட்டது .......💔💔
உன்னிடம் பேசாததால் என்னிடம் சண்டை போடுகிறது என் உதடுகள் எல்லாம்......💔💔
உன்னை மறக்க நினைக்கிறேன் ஆனால் என் நினைவில் எப்போதும் நீதான் இருக்கிறாய் எப்படி மறக்க முடியும் என்று சொல் கண்ணீருடன் உன் காதலன்....💔💔💔
நீ இன்றி உணவும் இல்லை உறவும் இல்லை ஊரும் இல்லை நண்பனும் இல்லை சோறும் இல்லை வெளிச்சமும் இல்லை சந்தோஷமும் இல்லை வாழ்க்கையும் இல்லை கடைசி ஒருநாள் நானும் இவ்வுலகில் இல்லை என்ற தந்தி முன் கதவைத் தட்டும்போது கதறி அழுது விடாதே உன் கண்ணீரை தாங்க நான் அப்போது அங்கு இருக்க மாட்டேன் உன் உண்மையான காதலன்.......💔💔💔
காதல் தோல்வி ஒரு வலிதான் என்ன செய்வது???
அதற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை வாழப் பழகிக் கொள் தோழா தோழி தவறான முடிவு ஒரு தகுதியான தீர்வு இல்லை...💔💔
காதலை கடல்நீரிடம் சேர்த்து விடு அது உன் காலடி தொட்டு செல்லும் நீ அங்கே சென்று நிற்கும் போதெல்லாம்...💔💔
காதல் வலியில் இருக்கும் என் நண்பனுக்காக சமர்ப்பிக்கிறேன்....💔💔😭