கட்டவிழ்ந்த கூந்தல் காற்றிலாட காலை வரும் இவள்
இளவேனில் தென்றல் வீசும் இளங்காலைப் பொழுது
மலராத பூவும் மகிழ்ந்து மொட்டவிழும் நேரம்

இளவேனில் தென்றலுடன் இன்று வராதது திட்டமிட்ட சதியோ !
வேறு :
இளவேனில் தென்றல் வீசும் இளங்காலைப் பொழுது
மலராத பூவும் மகிழ்ந்து மொட்டவிழும் நேரம்
கூட்டில் உறங்கிய குயிலும் துயில் கலைத்து தென்றலுடன்
பாட்டுப் பாடும் வண்ணமலர்த் தோட்டம் !