அவள் என்னவளே
அவள் என்னவளே
நினைவுகளின் அழகி இவள்- என்
நினைவற்ற அரக்கி இவள்
நித்தம் நீ நிறைந்தாயடி- என்
சித்தத்தில் புதைந்தாயடி
அர்த்தம் அற்ற மனதினிலே - நீ
அர்த்தராய் மணந்தாயடி
மேனியெல்லாம் சிலிர்க்குதடி - உன்
மென் நயனம் படர்கையிலே
ஆணி கொண்டு அடித்தாயோ - என்
அச்சார வயதினிலே...
சத்தம் இல்லா என் சாலையிலே
யுத்தம் நிகழ்த்தி செல்பவளே
அர்த்தம் நான் வினவயிலே - இது
ஆகாதென்று உரைத்தவளே...
ஆம்...
அர்த்தம் நான் வினவயிலே - இது
ஆகாதென்று உரைத்தவளே...
ஆயினும்
அவள் என்னவளே...
காதல் கொண்டேனே
கண்மணியாள் உன் மேலே
மோதல் கொண்டு முறைக்காமல்
- நான்
மொழிவதனை முறையாய் கேள்
தூர தூர தேசமென
துரத்தி நீ அடித்தாலும்
மாறாத காதலுடன்
மங்காமல் நினைத்திருப்பேன்
மார்கழி நிலவே - உனை
மார்பில் நான் புதைத்திருப்பேன்