நான் அதிர்ஸ்டமட்டவனா?

நான்
அதிர்ஸ்டமட்டவனா?
இல்லை
அறிவற்றவனா?
தெரியவில்லை எனக்கு!
கவிதையெழுதத் தெரிந்தும்..
காதலிக்கத் தெரியாமல் நிற்கிறேன்..
கண்விழிகளில் கற்பனை வடிகிறது
கடுகளவுகூட காதல் வடியவில்லையே...
கடவுளுக்கு நன்றி
கல்நெஞ்சம் கொண்டவனாய்
என்னை படைத்ததற்கு...
இல்லையென்றால்
என்னவாகும் என்னிதயம்...
கனவென்ற காற்றில் கரைந்திருக்கும்
சுவாசங்கள் இன்றி சரிந்திருக்கும்...
பால்வண்ணம் கொண்ட வானத்தில்
கருங்காக்கை போவதும் அழகுதான்...
அதைக்கண்டால்
வியப்போடு நிற்கும் என்வாழ்வினில்
சலிப்பான சில சலனங்கள் தரும்
ஓர்எண்ணமும் அழகுதான்..

எழுதியவர் : Sahul Hameed (17-Apr-20, 10:30 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 53

மேலே