துப்புரவு தொழிலாளியின் பெருமை

குப்பை கூளங்கள் மலைபோல் இருந்தாலும்
கூச்சல் போட்டுகொண்டு குழந்தை பிறந்தாலும்
தாயே தயங்கும் பணியாய் இருந்தாலும்
தனியாய் நின்றுகொண்டு சிறப்பாய் செய்திடுவானே! அவன்தானே!

வருமுன் காப்பானே வசந்தம் தருவானே
தெருவில் நிற்பானே தூய்மை கொடுப்பானே
ஆயுதம் ஏந்தாத ராணுவ வீரன் தான்
அள்ளும் பகலாக உழைத்திடும் தோழன் தான்

கண்ணுக்கு தெரியாத எதிரியும் அழிப்பான்
கழிவாய் இருந்தாலும் மூழ்கி எழுவான்
உயிரை கொடுத்தேனும் தூய்மை பேணும் தொழிலாளி
எங்கள் முதலாளி

மலமாய் இருந்தாலும் உள்ளே இறங்குவான்
கால்வாய் அடைத்தாலும் கையை விட்டிடுவான்
சுகாதாரம் தூய்மை பேணும் மக்கள்நல பணியாளி

தொற்றில் உடுத்தும் கூட மக்களை காத்திடுவான்
துர்நாற்றம் இருந்தாலும் கடமை செய்திடுவான்
நாட்டை காக்கும் பிணியை போக்கும் துப்புரவு தொழிலாளி
எங்கள் முதலாளி

பாடலாசிரியர் வி.ர.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்

எழுதியவர் : வி.ர.சதிஷ்குமரன் சிட்லபாக (17-Apr-20, 8:48 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 70

மேலே