கொரோனாவின் வருகை பதில்

வாழ்க்க(கை) ஒரு வட்டமுன்னு புரிஞ்சிக்கோ
பூமி சன்ன சுத்துமுனு அறிவியல(லை) தெரிஞ்சிக்கோ
பூமி பிரபஞ்சம் எல்லாருக்கும் சொந்தம்டா
குரங்கா இருந்துதான் வளர்ச்சி(ய)யை நாம அடைஞ்சோம்டா
வாழ்க்க(கை) வட்டம்டா, பூமி சன்ன சுத்தும்டா
பரவாம தடுத்தோம்னா நாம எல்லாம் தப்பிச்சோம்டா

மனிதன் சுயநலமா வாழுறது தப்புனு
கொரோனா வந்துஇப்போ சூசகமா சொல்லுறான்
கொரோனா வந்துஇப்போ சூசகமா சொல்லுறான்
புரிஞ்சி நடந்துக்கோ இருக்குறத பகிர்ந்துக்கோ
மீதி இருந்தாக்கா ஏழைக்கெல்லாம் கொடுத்துக்கோ
மீதி இருந்தாக்கா ஏழைக்கெல்லாம் கொடுத்துக்கோ
கொடுக்க மனமில்ல(ன்)னா ஊரடங்கியே கிடக்கலாம்
அரச குறைசொல்லி வீட்டுக்குள்ளேயே படுக்கலாம்
அரச குறைசொல்லி வீட்டுக்குள்ளேயே முடங்களாம்
சன் லைட்டு போனாக்கா மூணு லைட்ட தந்துடும்
கண்ல பொற விழுந்துச்சின்னா டல்லாதான் தெரிஞ்சிடும்

வாழ்க்க(கை) ஒருவட்டம்டா, பூமி சன்ன சுத்தும்டா
இப்பகூட தெரியலனா வாழ்க்க(கை) ரொம்ப கஷ்டம்டா
கூட்டம் நெரிசல்னு பிரிட்ஜிங்கள கட்டுறோம்
கட்டி முடிச்ச பின்னே மக்கள் தொகைய(யை)
சுவிஸ்சு அக்கவுண்டுல மக்கள் பணத்த(தை) பதுக்குறான்
பாவம் பழிய சுமந்து சொந்தங்கள சேக்குறான்
பத்து தலைமுறைக்கு வேணும்னு நினைக்(கு)கிறான்
அல்ப ஆயுசுல உயிர(ரை) அவன் இழக்(கு)கிறான்
அல்ப ஆயுசுல உயிர(ரை) அவன் இழக்(கு)கிறான்
இப்பவாவது புரிஞ்சிக்கோ, வாழ்க்கைய தெரிஞ்சிக்கோ

பூமி சுத்தும்டா வாழ்க்க(கை) ஒரு வட்டம்டா
காடுங்கள ரோடுமேடா மாத்திட்டோம்
மத்த உயிருங்கள மதிக்க நாம மறந்துட்டோம்
கொரோனா கேக்குறான் பதில(லை) நீயே சொல்லுடா
கொரோனா கேக்குறான் பதில(லை) நீயே சொல்லுடா
நெஞ்சில கைய வச்சி மனசாட்சிய(யை) கேளுடா
(பி)பொறக்கும் போது நண்பா என்ன கொண்டுவந்தடா
போகும் போது நம்ம கொண்டு போக என்னடா
தானம் செய்(து)ஞ்சி நீயும் பாவங்கள(ளை) (கு)கொறைச்சிக்கோ
இப்பவாது(வாவது) கண்ண துறந்து இயற்கைய(யை) கொஞ்சம் புரிஞ்சிக்கோ

இருக்கும் போது நண்பா பகுத்துண்டு வாழலாம்
கொரோனாவ(வை) வழியனுப்பி சீக்கிரமா மீளலாம்

பாடலாசிரியர் வி.ர.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்

எழுதியவர் : வி.ர.சதிஷ்குமரன் சிட்லபாக (17-Apr-20, 8:34 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 100

மேலே