சிறு ஆறுதல் 😢😂🤣😅

விரைவில் நான் எனது நகரத்தை
இனங்காண முடியாதிருக்கும்

மிகவும் கைவிடப்பட்டும், பாழடைந்தும் இருக்கும்
அது எளிதாக்கும் திருப்புமுனைப்புள்ளிக்கு
சற்று முன்னதாகவே

நகரம் விரைவில் என்னையும்
அடையாளங்காணமுடியாது போகலாம்

நிழல்கூட என்னைப் பின்தொடராது

கடிகாரம்கூட எனக்குப் பின்னோக்கி ஓடுகிறது

ஒன்றுமட்டும் நிச்சயம்- அது
அதற்கு நேரமெடுக்கும், அதற்கு நேரமெடுக்கும்

ஆனால் அது மேடு, மேல் நோக்கிச் செல்லுங்களென்று
ஒருபோதும் சொல்லாதீர்கள்

யாராவது இறக்கும்வரை அதைச் சொல்லாதீர்கள்

யாராவது விடைபெறாதவரை அதைச் சொல்லாதீர்கள்

யாராவது தமது வாழ்வாதாரத்தை இழந்து
சுவரில் சென்று முட்டிக்கொள்ளாதவரை
அதைச் சொல்லாதீர்கள்

எதிர்ப்பும் வலுவாக இருக்கிறதென்று சொல்ல வேண்டாம்

மற்றவர்களைக் காப்பாற்ற யாராவது தமது உயிரைப்
பணயம் வைக்கும்வரை அதைச் சொல்லாதீர்கள்

குறைந்தபட்சம் இது ஒருபோதும் மோசமானதல்ல
என்று சொல்லாதீர்கள், அது எதற்கும் நல்லதல்ல

அது அவ்வாறு இல்லை எனவே
அதைச் சொல்லாதீர்கள்

ஆனால் இவ்வாறு கூறுங்கள்;

இது முடிந்ததும் நாம் சலிப்படையக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்
நாம் பல வினாடிகளைக் கடந்து வந்த தருணம் இது
நாம் கடக்க வேண்டியிருக்கும் நேரங்களும்தான்

இப்பொழுது எம்மிடம் என்ன இருக்கின்றதென்பதைவிட
நாம் எதைப் பெறுகிறோம் என்பதை அறிந்துவிட்டோம்

இது பல வாரங்களை, ஒருவேளை சில ஆண்டுகளைக்கூட எடுக்கலாம்
இதற்கு நேரமெடுக்கும்

சலிப்படையக் கற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் செய்யும் ஒரே விடயம் அதுதான்

நீங்கள் இதைக் கற்றுக் கொண்டுவிட்டீர்களென்றால்
ஒரு நாள் அந்த சந்தோசத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்

அந்த ஒரு நாள், அந்த ஒரு நாள்
முன்புபோல எதுவும் இருக்காது!

எழுதியவர் : மூலம்:Lars Saabye Christensen (18-Apr-20, 6:36 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 608

மேலே