அவள் ஒரு....
❤️❣️🧡❣️💛❣️💚❣️💚❣️💜
*கவிதை*
படைப்பு; *கவிதை ரசிகன்*
❣️❤️❣️🧡❣️💚❣️💙❣️💜❣️
பெண்ணே!
என் நெஞ்ச நிலத்தை
உன் நினைவு ஏரால் உழுது
அன்பு நீர் பாய்த்து
காதல் பயிர் வளர்க்கிறேன்.....
காலம் என்னும் நதியில்
இளமை படகில்
முயற்சி துடுப்புப் போட்டு
காதல் பயணம் செய்கிறேன்
அக்கரை என்னும்
உன்னை அடைவதற்கு....
மூளை விறகிற்கு
சிந்தனை தீ மூட்டி
எழுதுகோல் அடுப்பில்
காகித பாத்திரத்தை வைத்து
கற்பனை நீரூற்றி
நீ என்னும் அரசி கொட்டி
சாப்பாடு என்னும் கவிதையை
தினமும் சமைக்கிறேன்....
ஆசை பஞ்சில் நூல் எடுத்து
எண்ணத்தால் வண்ணம் தீட்டி
கனவு தறியில் நெய்கிறேன்
நம்முடைய
எதிர்கால வாழ்க்கை துணியை....
ஞாபகம் என்னும் கரம்
பார்வை தூரிகையால்
பிரம்மை தாளில்
உன் முகத்தை
வரைகின்றது...!!!
கவிதை ரசிகன்
❣️🧡❣️💛❣️💚❣️💙❣️💜❣️