புத்தகக் காதல்

செவிக்கு
உணவில்லை
என்றபோது
சற்றே ...
வயிற்றுக்கும்
ஈயப்படும் ...
இது நான் கேட்ட
பழமொழி .....

புத்தகங்களே
உன் மீது கொண்ட
காதலே...
உணரவும்
செய்கிறேன்
காதல் என்ற
புனிதத்தை
உன்னிடத்தில் ....

புத்தகங்களில்
பொதிந்திருக்கும்
பொற்குவியலே ...

உன்னை சுகித்த
நாள் முதல்
உன்னிடம்
கொண்டேன்
தீரா காதலை !.....

🌼🙏🌼
✍️
piyu

எழுதியவர் : Piyu (18-Apr-20, 8:05 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : puthagak kaadhal
பார்வை : 240

மேலே