பெண்ணே எழு

"என்ன ராதா யோசனை..?"

"ஒன்னுமில்லே சரண்யா.. நேத்து கவிதாவ பார்த்தேன்.. ரொம்ப துணிச்சலா எவ்வளவு கம்பீரமா
பேசறா தெரியுமா...!

"எல்லாத்துக்கும் பயந்து பயந்து நடுங்கிக்கிட்டு இருந்த கவிதாவா இதுன்னு ஆச்சரியமாயிடுச்சு.."

"என்னடி எப்படி இந்த மாற்றம்ன்னு கேட்டேன்...?"

"அதுக்கு அவ என்ன சொன்னானா ...கணவருக்கு பயந்து, மாமியாருக்கு பயந்துன்னு எத்தனை இடர்பாடுகள் என்னோட வாழ்க்கையில, தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்ற மாமியாரும், அவங்களுக்கு சப்போட்டா அவங்க பிள்ளையான என்னோட கணவரும்.... தெனம் தெனம் என்ன எப்படி எல்லாம் பேசி நோகடிச்சாங்க தெரியுமா...? எல்லாத்தையும் பொறுமையா சகிச்சுக்கிட்டு இருந்தேன்.. எதுவும் எதிர்த்து பேசாம..... எங்கம்மாதான் பொறுமை ரொம்ப முக்கியம் பொறுமையா இரு ...பொறுமையா இரு ..கண்டிப்பா.. இதை அவங்க உணர்வாங்கன்னு சொன்னாங்க..."

"எங்க நாத்தனார கட்டிக்கொடுத்த எடத்துல...
அங்க அவ ..அவங்க வீட்ல எதுக்கெடுத்தாலும் ரொம்ப பெறுமை பேசி ..எல்லாரையும் எடுத்து எறிஞ்சி பேசிட்டு வீட்டுக்கு வந்துட்டா.. அப்பதான் என் கணவருக்கு ஞானோதயம் வந்துருக்கு..
எவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வச்சோம், அந்த கடன் கூட அடையில, அதுக்குள்ள இவ இப்படி பண்ணிட்டாளேன்னு கோவம் வந்து கத்த ஆரம்பிச்சிட்டாரு, அத பார்த்த எங்கத்தைக்கும்
எதுவும் சொல்ல தெரியல..."

'அப்புறம் எப்படியோ அவங்க மாமியார் வீட்ல பேசி, அவள அவங்க வீட்ல நல்லபடியா வாழவச்சிட்டு வந்தோம்....அத பார்த்த என்னோட கணவர் நீ எவ்வளவு பொறுமையா இருக்க...
அப்படி இருக்காத, நாங்க ஏதாவது தப்பு பண்ணினாலும் கேட்டுடு...
அதேப்போல வெளில ஏதாவது தப்பு நடந்தாலும் தைரியமா
தட்டிக் கேளு, ஒங் கூட நான் இருக்கேன்னு தைரியம் கொடுத்தாரு", என்று கவிதா சொன்னதை விலாவாரியாக சொல்லி முடித்தாள்.

"ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாடியும் நிச்சயமா ஒரு ஆண் இருப்பாங்க ..அது, அப்பாவா, அண்ணனா, கணவனா, தம்பியாகவோ ஒரு சப்போட்டா இருப்பாங்க ...அத நம்ம நல்லவிதமா பயன்படுத்தி ஜெயிக்கலாம் ...ஆனா இப்போ நிறைய தவறுகள் நடக்குது, அது எங்கேயிருந்து எப்படி ஆரம்பிக்குதுன்னே தெரியல... இதுவே ரொம்ப பெரிய இடியா இருக்கு.. பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்ள கண்டிப்பா கடைபிடிச்சா ...நல்ல விதமா எல்லாம் நடக்கும்ன்னு தோணுது", என்றாள்...

"அடேயப்பா என்னடி ஒரு பாடமே எடுத்துட்ட போ...
கண்டிப்பா... நாம சுதந்திரமா இருக்கணுமேன்னு சுதந்திரத்த தப்பா
புரிஞ்சிக்காம சரியான முறையில சென்றால் நல்லதுதான்டி", என்றாள் தோழி சரண்யா.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (19-Apr-20, 3:04 pm)
Tanglish : penne elu
பார்வை : 62

மேலே