சாம்பிராணி வாசம்

"என்னங்க என்னங்க"

"என்னடி காலையிலேயே கத்த ஆரம்பிச்சுட்ட"

அவள் சொன்னதை கேட்டவன் 'என்னாடி சொல்ற?', என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தான்...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்...

"இங்க தாங்க இருந்துச்சி... இப்ப காணோம்"

"ஏதாவது கனவா இருக்கும்.. போய் வேலைய பாருடி"

அவளால் நம்ப முடியவில்லை. இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, இப்படி எதுவும் நடந்தது இல்லை,
இதுவே முதல் முறை...

காலையில் இருந்து வெளியில் வராமலே பொழுது கழித்தாள்... இரவு நெருங்க நெருங்க அவளுக்குள் படபடப்பு அதிகரித்தது... தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்...

நடுநிசியில் யாரோ மணி அடித்து சாமி கும்பிடும் சத்தம் கேட்டது. சூடமும் சாம்பிராணியும் மணத்தது.
அவளையும் அறியாமல் உறங்கி விட்டாள்...

காலையில் முனகல் சத்தம் கேட்கவே ..அவளை தொட்டுப்பார்த்தான் கணவன்... உடம்பு அனலாக கொதித்தது...

அவளை எழுப்பி அமரவைத்தவன்...

"அசடு அசடு! நீ காலையில வாசல் தெளிக்கப் போனப்ப திடீர்னு ஒரு மரத்த பார்த்துட்டு பயந்து வந்து சொன்னியா...நாம வெளிய போறதுக்குள்ள யாரோ அத எடுத்துட்டுப் போய்ட்டாங்க... நாம பாக்கும்போது ஒன்னுமே இல்ல, நீ நேத்து வெளியவே போகலையா, ராத்திரி ஏதேதோ வாசம் வந்து இருக்கணுமே", என்றான்...

"ம்..", என்று தலையாட்டினாள்.

"நேத்து ராத்திரி நம்ம வீட்டு வாசல்ல சினிமா சூட்டிங் எடுத்தாங்கடி...", என்று சொல்லி பயந்திருந்தவளை மார்போடு அணைத்துக்கொண்டான்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (19-Apr-20, 3:09 pm)
Tanglish : sambiraani vaasam
பார்வை : 48

மேலே