கிட்டிப் புள்ள

"தாத்தா..தாத்தா..தாத்தா..."

"என்னப்பா இது? ஏன் இப்படி கோர்ட்ல கூப்புடுற மாதிரி மூணு தரம் கூப்புட்ற...."

"அது வந்து தாத்தா...ஷ்...அப்பா வராங்கனு நினைக்கிறேன்... அப்புறம் பேசுவோம்...", என போனை வைத்தான் அமுதன்...

"அமுதா... ஸ்கூல் லீவுன்னு.. நீ பாட்டுக்கு டி.விய போட்டுட்டு விளையாடப் போயிடாதே.. வீட்டுக்குள்ளேயே இரு", என சொல்லிச் சென்ற அப்பாவை, வாசல் வரை வந்து வழி அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்து போனை எடுத்து தாத்தாவுக்கு டயல் செய்தான்..

"என்னப்பா ஒங்கப்பா போயாச்சா?"

"ம் போயாச்சு ...நம்ம திட்டப்படி இன்னைக்கி விளையாட்டு மைதானத்துக்கு போறோம்... நீங்க சொன்னீங்கலே தாத்தா... அது என்ன விளையாட்டு? அந்த கிட்டிப்புள்ள விளையாட்டை சொல்லித்தர்றீங்க... அதுக்கு அப்புறம் நான் அந்த விளையாட்டை சரியா விளையாடி எங்கப்பா கிட்ட ஜெயித்து காட்டுவேன்"

"அதச் சரியா கத்துகிட்டு வந்தா... அப்பா எனக்கு சைக்கிள் வாங்கித் தரேனு சொன்னார்"


மைதானத்தில் அமுதனின் அப்பா ...மறைந்து நின்று கவனித்து வந்தார் மகனின் விளையாட்டை...

எப்போதும் கிண்டலும் கேலியுமாக பேசி வருவான் அமுதன், அந்தக்கால விளையாட்டுகளை.. அதைச் சரியாக அவனுக்குப் புரிய வைக்கவே... இப்படி ஒரு திட்டம்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (19-Apr-20, 3:24 pm)
Tanglish : kittip pulla
பார்வை : 51

மேலே