காதலன் புலம்பல்

கவிதை

காதலன் புலம்பல்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்


நான் அவளைப் பார்க்கும்போது
அவள் நிலத்தைப் பார்க்கின்றாளே!

நான் வானைப் பார்க்கும்போது
அவள் என்னைப் பார்க்கின்றாளே !

என்னை நேரில் பார்த்தால்
அவள் கண்மலர்கள் வாடியா போகும்?

என்னிடம் கண்களால் பேசினால்
அவள் கருவிழிகள் கலங்கியா போகும்!

அவள் இதழ் பிரிந்து பேசினால்
பூவிதழ் சுவை குறைந்தா போகும்?

நான் அவளைத் தொட்டால்
உணர்வில் மயங்கி விடுவாளா?

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (20-Apr-20, 3:51 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : kaadhalan pulambal
பார்வை : 195

மேலே