வானவில்லாய் வந்தாள் அவள்
இத்தனைக் காலம்
ஊரு டெண்டு கொட்டகையில் ஓடும்
பழைய கருப்பு வெள்ள படம் மாதிரி
நடைபோட்ட என் வாழ்வில்
அவள் வந்தால் மகராசியா
வானத்து ஏழு நிற வானவில்போல,
வெறும் சோபை இல்லா கருப்பு வெள்ள என்
மன அலைகளை ஒரே நாளில்
'கேவா கலர் படம்போல ஆக்கிவிட்டாளே