லட்சுமி டீச்சர்

எனக்கு பள்ளியில் மிகவும் பிடிச்ச டீச்சர் லட்சுமி மிஸ். ஆனால் அது கடத்த 10 மாதங்களுக்கு முன் அல்ல. நான் என் பள்ளியில் மிகவும் மோசமாக படிக்க கூடிய ஒரு மாணவன். எனக்கு தமிழை தவிர எந்த பாடமும் ஒரு துளி கூட வராது. ஒவ்வொரு வருடமும் என்னை போனால் போகட்டும் என்று தேர்ச்சி பெறவைத்தனர். எப்படியோ நான் என் ஒன்பதாம் வகுப்புக்குள் நுழைந்தேன். அடுத்த ஆண்டு பொது தேர்வு நடக்க போவதால் என் வகுப்பில் இருக்கும் அனைத்து ஆசிரியைகளும் என்னை ஒரு விரோதியாக பார்க்க ஆரம்பித்தனர்.

கவிதா மிஸ்...அந்த குமார் பையன் பத்தாவது பாஸ் பண்ணுவானு நினைக்குறிங்க ???.. நீங்க வெற தேவி மிஸ் அவன் 500 கு 100 மதிப்பெண் மேலே எடுக்குறநானு பாருங்க… என்று எனது வகுப்பு ஆசிரியர்கள் என்னை ஏளனம் செய்ததை கதவோரம் நின்று மனவேதனையோடு கேட்டுகொண்டிருந்தேன். இப்படி அனைத்து ஆசிரியர்களும் என்னை ஏளனம், எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்கவில்லை.

எனது வகுப்பு ஆசிரியயை கவிதா மிஸ்ஸின் கணவருக்கு வெளியூரில் வேலைமாற்றம் செய்யப்பட்டதால், அவர் எனது பள்ளியில் இருந்து விலகினார். கவிதா மிஸ்ஸுக்கு மாறுதலாக புதிதாக ஒரு டீச்சர் வேலையில் சேர்ந்தார்,அவர் தான் லட்சுமி டீச்சர். அவர் எனக்கு ஆங்கில வகுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எனக்கு ஒரே ஒரு பயம் தான். “எனக்கு இங்கிலிஷ் சுட்டு போட்டா கூட வராது... இப்போ இந்த புது டீச்சர் வேற நம்பள என்ன பாடுப்படுத்த போறாங்களோ தெரியலையே……

அந்த புது டீச்சர பார்த்தாலே நான் என் தலையை குனிஞ்சிட்டு போயிடுவன். இப்படியே சில மாதங்கள் சென்றன… நானும் 9 ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பிற்கு முன்னேறினேன். ஒரு நாள் வகுப்பில் நான் அமர்ந்திருந்தபொழுது ஒரு மாணவன் வந்து என்னை லட்சுமி மிஸ் அழைக்குறாங்க னு சொன்னான். நானும் மெல்ல நடந்து லட்சுமி டீச்சரிடம் சென்றேன். என்னை அவர் தன் முன்னுள்ள இருக்கையில் அமரச்சொன்னார். எனக்கோ பயத்தில் இதயம் வேகமாக அடித்தது. எனது 9ஆம் வகுப்பு மார்க் ஷீட்டை பார்த்தவாறு டீச்சர்…என் முகத்தையும் பார்த்தார்.
“டோன்ட் யு ஹவ் இண்டேறேச்ட் இன் ஸ்டடீஸ் ?? என்று அவர் என்னிடம் கேட்க, நானோ பெக்கா பெக்கா னு முழித்துக்கொண்டே இருந்தேன். பிறகு “ கோட்டூ யுவர் கிளாஸ்” என்று கூற நானோ அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி விட்டேன்.

அந்த ஆண்டின் இடைக்கால தேர்வு நடைபெற்றது. வழக்கம்போல் நான் ஆங்கிலம் தேர்வில் ஒன்றும் எழுதவில்லை, ஆனால் தமிழ் தேர்விலோ மிக நன்றாக எழுதினேன். அந்த இடைக்கால தேர்வின் விடைத்தாளை தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் ஒன்றாக திருத்தினர். அப்போது என்னுடைய தமிழ் விடைத்தாளை பார்த்த லட்சுமி டீச்சர் வியந்து போனார். அடுத்த நாள் “ குமார் உன்னை லட்சுமி டீச்சர் கூப்டாங்க” என்று அன்று வந்த அதே மாணவன் என்னை அழைத்தான். மனதில்…” ஆஅ இன்னைக்கு என்ன இங்கிலிஷ் ல கேக்க போறாங்கனு தெரியலையே” என்று பயத்துடன் சென்றேன். அன்று அமர்த்த இருக்கையிலே அமர்ந்தேன். ஆனால் ஒரு மாற்றம், எப்பொழுதும் கோவமாக இருக்கும் லட்சுமி டீச்சர் அன்று மிகுந்த புன்னகையோடு இருந்தார். அவர்” உனக்கு தமிழ்ல ரொமப இஷ்டமா” என்று கேட்டார்.. நானோ” ஆமாம் மிஸ் … நா நிறைய கவிதை, கதைல எழுதுவன்” என்று அவரிடம் கூறினேன். அந்த கதைல இப்போ உன்கிட்ட இருக்க என்று கேட்க, நானோ வகுப்பிற்க்கு ஓடி சென்று அதை எடுத்துக்கொண்டு லட்சுமி டீச்சர் இடம் கொடுத்தேன். அதை வாங்கி கொண்ட அவர் நாளை திருப்பி வாங்கிக்கொள்ளுமாறு என்னிடம் கூறினார்.

இரு வாரங்கள் கடந்தன…

அன்று தமிழ் வகுப்பு முடிந்து ஆங்கில வகுப்பு தொடங்கும் நேரம். வகுப்பில் நுழைத்த லட்சுமி டீச்சர் என்னை வகுப்பின் மேடைமேல் வந்து நிற்க சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது அவர் கையில் உள்ள வார இதழை பார்தேன்.. அதில் என்னுடைய கதைகள் இருந்தன..என் வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் எழுத்துநின்று கைதட்டினார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாக அன்று அமைந்தது. எந்த வகுப்பில் நான் மிகவும் தலைகுனிந்து நடந்தேனோ, அதே வகுப்பில் நான் இனிமேல் தலை நிமிர்ந்து நடப்பேன்.

இவ்வளவு பெருமைக்கும் காரணம் லட்சுமி டீச்சர். எனது வாழ்க்கையை மாற்றிய வாழும் தெய்வம்.

எழுதியவர் : ஆகாஷ் (24-Apr-20, 8:42 am)
சேர்த்தது : ஆகாஷ்
Tanglish : latsumi teacher
பார்வை : 150

மேலே