இராமாயணம்
கலித்துறை
ஆடுகொ டிப்படை சாடிய றத்தவ ரேயாள
வேடுகொ. டுத்தது பாரினு மிப்புகழ் மேவீரோ
நாடுகொ டுத்தவென் நாயக னுக்கிவ நாமாளும்
காடுகொ டுக்கில, ராகியெ டுத்தது காணீரோ
கம்பராமாணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று . குகப் படத்தில் பரதன்
இராமனைத் தேடி வரும்போது குகனானவன் பரதன் கொடிகளுடன் படைகளுடன் இராமன் மேல் போர் தொடுத்து வருகிறான் என்று தவறாக நினைக்கிறான். நாட்டைப் பிடுங்கிய பரதன் நாம் கொடுத்த காட்டையும் பிடுங்க வருகிறான் என்று நினைத்துப் பாடிய பாடலாகும் . எதுகை மோனைகள் பல இடங்களில் வந்து சந்த ஒலிகளை எழுப்பி
வீரத்தைக் கொடுக்கும் பாடலாகும்