ஊடல்

ஊடல்

திருமகளீ டுக்கழு மில்லாள் உருமகளுக்
கொவ்வா திறப்ப துறுதி

தற்கால கவிஞரும் யாப்புக்கவிதை பலவற்றை நம் எழுத்து.காமில் தொடர்ந்து
எழுதி வரும் பெரியவர் டாக்டர் திரு வ.க. கன்னியப்பன் அவர்கள் மயூரம் வேதநாயகம்
பிள்ளை எழுதிய முதல் புதினநூலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஒரு தரவு
கொச்சகக் கலிப்பாவை எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார். அதில் நாயகன் நாயகியிடம்
நீ திருமகளுக்கு ஒப்பாக இருக்கிறாய் கூறுகிறார். திரு மகளின் உருவத்தை எவரும்
கண்டிலர் ஆயினும். உருவமில்லாத் திருமகளாயினும் தம்கணவர் தன்னை ஒப்பிட்ட து
தன்கணவர் நெஞ்சில் நாம் இருக்கும்போது திருமகள் நினைப்பு எப்படி வந்தது என்று
துக்கம் தாளாது அழுதாராம். அப்போது நாயகன் தான் உருவமில்லா திரு மகளை
ஒப்பீடு செய்த்ததற்கே இப்படி அழுகிறாளே அவளிடம் உருவமுள்ள பிற பெண்டிரை
ஒப்பீடு செய்தால் உயிரை மாய்த்துக் கொண்டு விடுவாள் போலிருக்கிறதே என்று
நினைத்து மிகவும் பயந்தார் என்பதைப் போல அந்தப் பாடல் முடிகிறது.
இந்த கருத்தை நான் எளியக் குறளடியில் எழுதியுள்ளேன்.

எழுதியவர் : பழனி ராஜன் (24-Apr-20, 12:18 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : oodal
பார்வை : 1690

மேலே