சிதைப்பட்ட அழகு

மலர்ப் பூங்கா
தன் தோழியுடன்
பூகாவில் மலர் காட்சிக்
காண வந்தாள் அவள்
அழகுக்கே அழகோ இவள்
என்று வியக்கும் வடிவழகி
இவளுக்கு தொல்லைக் கொடுத்து வந்தான் அவன்
அவள் போகுமிடமெல்லாம்
பஸ் , ட்ரெயின் என்று அவள் இதில் போனாலும்
பின்னால் அவன்.... என்னைக் காதலிப்பாயா
அவள் இல்லை என்று கூறிய போதும்
விடாது துருத்துவதிலேயே இருந்தான்,,

இன்று இங்கு இந்த பூங்கா மலர்க்காட்சியிலும்
இதோ அவன் அவள் அருகே
நெருங்கியவன் .... அதே கேள்வி கேட்டான் அவளை
என்னைக் காதலிக்க மாட்டாயா என்று
இல்லை இல்லை போய்விடு தொடராதே.... அவள்

இந்த முறை மறைத்து வைத்திருந்த
'ஆசிட்-பாட்டில்' திறந்தான் .... அப்படியே
அவள் முகம் மீது வீசிவிட்டு ஓடிவிட்டான்

துடி துடித்து கீழே விழுந்து
புழுப்போல் துடித்து .... அவள்
செயல் இழந்து தேற்றவும் தெரியாது
செய்வதறியாது அழுது கொண்டிருந்தாள்
அவள் தோழி..... கூடியது மக்கள் கூட்டம்

அவள் அருகே .... ரோசா பூக்கள் பக்கம்
ஒரு போர்டு ....' அழகு .... ரசிப்பதற்கே
அழிப்பதற்கல்ல' !
அதன் அருகே செயல் இழந்து
சிதைக்கப்பட்ட உயிர்ச்சிலையாய் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Apr-20, 2:09 pm)
பார்வை : 199

மேலே