இன்றையத் தமிழன்
இன்றையத் தமிழன்
பிறன்வளர இன்று பொறுக்கான் தமிழன்
அறமே கொல்லு மவனை
அன்று கம்பனும் வில்லிபுத்தூரார், புகழேந்தி,சீத்தலை சாத்தனார் போன்றோர் வடமொழி
கற்றார் கம்பன் உலகம் போற்றும் இராமனின் சரிதையை அலசி அலசி எழுதினான்.
வில்லிபுத்தூரானும் மகா பாரதமும் புகழேந்தி நளவெண்பாவும் சாத்தன் சீவக சிந்தாமணியும்
வடமொழி கற்றதாலேத்தான் எழுதினார்கள். இன்று நாம் கம்பனையும் வில்லிபுத்தூராரையும்
போற்று கிறோம். அன்றையத் தமிழர்கள் இந்துக்கள் பரந்த மணமுள்ளவர்கள் எதையும்
ஏற்றார்கள். அறிவாளிகளாய் இராமாயணத்தை மகாபாரதத்தையும் கடவுள் பக்தியால்
படித்தார்கள். பிறமொழி கற்க அறிவு , ஞானவிசாலம் வேணும். சென்ற நூற்றாண்டின்
பக்தித் தமிழன் கலப்பில்லாத் தமிழன் படித்தான். ஆனால் கலப்புத் தமிழன்தமிழையும்
கற்கான் தின்னிப் பண்டாரம். எவனுடனாவது சேர்ந்து புத்தியில்லாமல் கூச்சல் போடுவான்..
தானும் கற்கான் பிறரையும் கற்க விடான்.