வள்ளல்கள்

(வெண்பா)
வள்ளல்கள்

முதல் 7 வள்ளல்கள்.

சகரன் குமுணன் சகாரன் நளனும்
உகந்தசெம்பி யன்நிருதி பின்னும் -- தகையான
துந்துவாரி விந்தைபெயர் கொண்டயேழு வள்ளலும்
அந்த முதல்சங்க மாம்


1) சகரன்
2 ) சகாரன்
3) குமுணன்
4)நளன்
5)செம்பியன்
6)நிருதி
7) துந்துவாரி
ஆகிய ஏழு வள்ளல்கள் முதல் சங்கத்தைச் சேர்ந்தவர்



இடை 7 வள்ளல்கள் ::

அந்திமான் தந்தவக்ரன் கர்ணன் சிசுபாலன்
சந்திமான் அக்குரன் என்பாருடன் --- அந்தத்
தெரிந்தமா மன்னன் அரிச்சந்ரன் சேர்த்து
அறியுமிடை ஏழு வள்ளல்

1)அந்திமான்
2)தந்தவக்ரன்
3)கர்ணன்
4)சிசுபாலன்
5)சக்திமான்
6)அக்குரன்
7)அரிச்சந்திரன்

ஆக 7 பேர் இடைச்சங்க வள்ளல்களாகும்






கடை 7 வள்ளல்கள்::



நல்லஓரிக் காரியும் பாரிநள்ளி நால்வருடன்
மலையன் எழிலியுடன் பேகனும் --- அள்ளுவேன்
முச்சங்க வள்ளல் வரிசையில் நச்சென
அச்சாய் கடையேழ் யிவர்

1) காரி
2) ஒரி
3) பாரி
4) நள்ளி
5) மலையன்
6) எழிலி
7)பேகன்

இந்த 7 பேரும்
கடைச்சங்க காலத்தின் வள்ளல்களாகும்.

எழுதியவர் : பழனிராஜன்l (3-May-20, 11:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 184

மேலே