வீரத் தமிழர்

வீரத் தமிழர்

போரில் அலெக்ஸான் ட ரைத்தனித் தெதிர்த்த
புருடோத் தமனா உலகின் சரித்திரம்
மாபெரும் மன்னர் அசோகனா மாவீரன்
சந்திரகுப் தன்யெனப் பலபல குப்பைகளாம்
அத்தனையும் பிராமணர் அல்லராம் சத்திரியர்
ஆயினும் அவர்வீரர் அல்லவட இந்தியர்
தெலுங்கன் ராயன் சிவாஜி மராட்டியன்
தென்தெலுங்க பல்லவனும் தமிழனல்ல
தேடிக் கிடைக்கவில்லை வீரரும் தமிழரிலே.

நெடுஞ்செழியன் கரிகாலன் வீரரல்லர் சொல்வேன்
ஏன்ராஜ ராஜராஜே திரனும் வீரரா ?
எனக்குடன் பாடில்லை தீரன் சின்னமலை
கப்பக் கொள்ளை செய்தபின் சிப்பாயாம்
கபடதீரன் நாற்பதா யிரம்வீரர் படையாம்
கட்டுக்கதை போர்நாய கனைநாம் நம்புவோம்
மதுரை மருதநாய கனேமா பெரும்வீரன்
பட்டுக் கோட்டை அழகிரி தெரியுமா
பாரவனே அஞ்சாநெஞ் சத்தமிழர் தளபதி
அரசன் மெச்சியதே ரம்பையாம்
அரசாளும் நாமெழுத அதுசரித் திரந்தானே

எழுதியவர் : பழனிராஜன்l (3-May-20, 3:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 2903

மேலே