சோளக்காட்டுப் பொம்மைக்கு
சோளக்காட்டுப் பொம்மைக்கு ஆடை உடுத்தி
பூமாலை போட்டு பொன்னாடை போர்த்தினாலும்
பல்லை இளித்துக் கொண்டுதான் நிற்கும் !
உள்ளே அறிவில்லாத வெத்து வேட்டை
ஒப்பனை செய்து நாற்காலியில் உட்கார வைத்தாலும்
பல்லை இளித்து பரக்க முழக்கும் !
அரைவேக்காடுகள் ஆனந்தக் கும்மியடிக்கும் வீதியில்
அறிவுஜீவிதர்கள் மனம் வருந்தி
தலை குனிந்து நிற்பர் !
பொருத்தமற்றவர்களை தேர்ந்தெடுத்து
பொறுப்புள்ள பதவியில் அமரவைத்தால்
வருத்தமுற்று கண்ணீர் வடிக்கும் நாடுகள் !