அர்த்தமுள்ள மாற்றமா

அர்த்தமுள்ள மாற்றமா/ இது
அகிலமும் குழம்பி நிற்கிறதே
ஆனாலும் ஒரு நம்பிக்கை
மீண்டும் பழையன கழிந்து
புதியன புகுந்து பூத்து குலுங்க
வாழ்வில் ஒளி ஓன்று தெரிகிறது
அது இனி ஒருபோதும் அணையாது
அதுவே நம்பிக்கை எனும் ஒளி
மீண்டும் புதுமையை, புதியதாய்
பூப்போம், காய்ப்போம், கலகலப்போம்,
இயல்பில் நாம் கொள்வோம் மனதில் உறுதி
இதுவும் கடந்து சென்றுதான்
தொடர்வோம் பயணம் உலகில்
இடர்கள் பல கண்டிடினும்
காண்போம் இயல்பாய் அமைதியை
வெற்றியை எதிர்கொள்ள ஓடுகின்றோம்
விரைந்து வீழ்த்திட வீழ்வான் எதிரியும்
மனதில் உறுதி வேண்டும்,
மனித வாழ்வினில் அமைதி வேண்டும்
விலகித்தான் நின்றுதான் வாழ்வோமே

எழுதியவர் : பாத்திமாமலர் (4-May-20, 11:43 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 229

மேலே