தேவதைகள்
தேவதைகள் தெய்வங்களுக்கு ஒப்பானால்
தேரோட்டம் தெருவெங்கும் நிகழத்தான் கூடும்...
ஓவியம் போலிருப்பாள் உரசிடவே சிலையாவாள்
காவியம் களம்நிறைக்க காதல்மொழி உரைத்திடுவாள்...
யுத்தமென சத்தமிட்டு முத்தமொன்றை நித்தமிடு
எத்தனையோ தத்துவத்தை கொத்துக்கொத்தாய் தைத்திடுவாள்...
வணங்கி நிற்கும் அணங்கிடம் பிணங்காதே
இணங்கி ஏற்கும் குணமிருந்தால் தளறாதே...!
வாரியணைக்கும் வலம்புரிச் சங்கே அவளானால்
பாரி ஆயினும் தேரோட்டத்தான் வேண்டும் தேவதைக்கு...