ஆசைகள்

என்னுயிர் இப்போது என்னிடமில்லை
உடலால் அவள் மறைந்தாலும்
அவளது நினைவால் நான் அவளோடு ஒன்றியிருக்கிறேன்

அவளது உடமைகளில்
எதுவும் எனக்கு வேண்டாம்
ஒன்றைமட்டும்
எனதாக்கிக்கொள்ள
விரும்புகிறேன்
அவள் படித்துப் பாதுகாத்த
புத்தகங்கள் அவை

அவைகளை
நான் மீள்வாசிப்பு
செய்யும்போது
அவளது கூந்தலில் இருந்து
உதிர்ந்த ஒற்றைமுடி கிடைக்குமா
என்ற ஆசையில்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-May-20, 8:05 am)
Tanglish : aasaikal
பார்வை : 433

மேலே