அலைகள்

எண்ணித் தவிக்கிறேன்
என்னுள் நீ இருப்பது தெரிந்தும்
விலகலின் வலி உணர்கிறேன்

மதிதரும் இரவில்
ஆயிரம் கனவுகள்
ஆனந்தம் அதில்
ஆதியும் நீ
அந்தமும் நீ,
ஆயினும் அன்பே
இமையின் பிரிவில்
நீ இருப்பது எங்கோ
என்றத்தேடலின் முடிவில்
தேவதை உந்தன்
பூமுகம் காண்பேனோ

என் இருதயம் உள்ளே
இறங்கிய பெண்ணே
என் இருவிழி முன்னே
தோன்றிடும் கண்ணே
ஒருவழி தந்துவிடு
உன் மனமதியில் புகுந்துவிட

கற்பனைகள் தந்த
கவிதை கண்ணே
கனவினில் எந்தன்
கண்களை திருடி
காதலியென
மனதையும் வருடி
காதலுமொரு காவியமென
கவிபாடிடச் செய்தாய்

பனிவிழும் இரவில்
பகல் நிலவானேன்
என்னை நானே
எங்கெங்கோத் தேடி
உன்னை கண்டு
காதல் வானில்
முழுமதி ஆனேன்

தினமொரு காட்சி
மனதினில் தோன்றி
தீயினை ஏந்திய
திரியினைப் போலும்
நான் உனையேந்தியே
வாழ்கிறேன் அன்பே

உன் பூவெனும் பார்வையில்
அறுகால் பறவையாய்
பறந்து பறந்து
உம்மனமெனு ம்மதுரம்
காணு மானந்தம்
கண்டிடக் கூடுமோ -இல்லை
எந்தன் காதலும்
கண்ணீர் பொங்கும்
காவியம் ஆகுமோ

காத்திருக்கிறேன்,
காதலின் கடலில் நானும்
மூழ்கிடும் முன்ணே
கைகொடு கண்ணே

-கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறை செல்வன் (7-May-20, 7:15 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
Tanglish : alaigal
பார்வை : 257

மேலே